Sunday, December 9, 2012

பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம்- 30ஆண்டு நினைவு தினம் இன்று!


பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம்- 30ஆண்டு நினைவு தினம் இன்று!

Published on December 6, 2012-1:56 pm   ·   No Comments
சோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய மனித குலத்தின் இலட்சியத்தை தமது எழுத்தாலும், நடைமுறையாலும் செயற்படுத்த முனைந்த கைலாசபதி பற்றி சிந்தித்த போது மேற்குறித்த வரிகள் நினைவில் நிலைத்து நிற்கின்றன.
இருபதாம் நூற்றாண்டு பெற்றுத் தந்த தலை சிறந்த ஆய்வு அறிஞர்களில் கைலாசபதியும் ஒருவர். கால் நூற்றாண்டு தமிழியல் வரலாற்றில் தனித்துவமான ஆளுமைச் சுவடுகளைப் பதித்த அவர் பத்திரிகையாளர், எழுத்தாளர, விமர்சகர், விரிவுரையாளர் – பேராசிரியர், முதலாவது யாழ் வளாகத் தலைவர், கலைப்பீடாதிபதி என பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். இத்தகைய சமூதாயம் சார்ந்த அவரது ஆளுமைகளே அவரை சிறந்ததொரு முன்மாதிரியாக கொள்கின்ற போக்கு வளர்வதற்கு காரணமாக அமைந்தது.
கைலாசபதியின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களிலும் இன்றைய நாளிலும் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்ஸிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கியகதியில் கைலாபதியின் எழுத்துக்கள்; செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.
இலக்கிய வரலாற்றினை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஒரு உண்மை தலைத் தூக்குவதை காணலாம். அது தான் இலக்கியத்திற்கும் சமூதாயத்திற்கும் இடையிலான உறவுக் குறித்த பிரச்சனையாகும். இலக்கியத்தின் நித்தியத்துவம் குறித்து காலத்திற்கு காலம் வாதப் பிரதிவாதங்கள் தோன்றிய வண்ணமே உள்ளன.
கலை இலக்கியம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது எனவும் அது தெய்வ திருவுடைய கலைஞரால் படைக்கப்படுகின்றது எனவும் பிரமைகள் கற்பிக்கப்படுகின்றன. இப்பார்வையானது, ஒரு புறத்தில் பரந்துப்பட்ட வெகுஜனங்களையும் மறுப்புறத்தில் இலக்கிய கர்த்தாவையும் வைத்து நோக்குகின்ற வெகுசஜன விரோத பண்பாடாகும்.
இன்னொரு புறத்தில் தேசிய, பிரதேச, இன, மொழி, சாதி, மத அடையாளங்களைக் கொண்டு மனிதகுல விடுதலைக்கு எதிராக பாவிக்கின்ற கபடத்தனங்கள் இலக்கியத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன. “கல்தோன்றி மன்தோன்றா காலத்திற்கு முன்னரே வாலோடு தோன்றியது முத்தத் தமிழ்” , “குறித்த இனம், சாதி பற்றிய படைப்புகளை அவர்களால் மட்டுமே உருவாக்க முடியும்” போன்ற வாதங்களை உற்று நோக்குகின்ற போது இவ்விலக்கிய போக்கின் தாக்கங்களைக் காணமுடிகின்றது. பராம்பரிய மரபுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை தமது வர்க்க நலன்களுக்கு ஏற்றவகையில் விளக்கமளிக்கின்ற பண்டிதர்கள் ஒரு புறத்தில் ஆர்பரித்து நிற்க,மறுப்புறத்தில் பாராம்பரிய மரபுகள் யாவும் ஆதிக்க சக்திகளின் நலனையே பிரதிப்பலிக்கின்றன என அவற்றை மறுத்து தூய பாட்டாளி வர்க்க கலைக்கோட்பாட்டை முன்வைக்கின்ற அதி தீவீரவாதிகள் இன்னொரு புறத்தில் ஆர்பரித்து நிற்பதே யதார்த்தமகிவிட்டதோர் சூழலைக் காணக் கூடியதாக உள்ளது.
கலை இலக்கியம் என்பது சமூதாயத்திலிருந்து தோன்றி அது சமூதாயத்தை மேம்படுத்துகின்றது என்ற இலக்கிய போக்கானது மனிதனையும் அவனது செயற்பாடுகளையும் ஆக்கப்ப+ர்வமான திசையில் இட்டுச் செல்கின்றது. “மனிதர் உணவை மனிதர் பறிக்கும்” வழக்கத்தை மாற்றி புதிய சமூதாயத்தை நிர்மாணிக்கும் எண்ணுக்கனகற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பத்தி ஜீவிகள் இன்னும் இத்தகையோரின் போராட்டகளில் வலிமை மிக்க ஆயுதமாக கலையும் இலக்கியமும் விளங்குகின்றது என்பது மக்கள் இலக்கிய கர்த்தக்களின் நிலைப்பாடாகும்.அநத வகையில் இவ்வணியினர் பராம்பரிய மரபுகளை ஒடுக்கும் வர்க்க மரபுகள் ஒடுக்கப்படும் வர்க்க மரபுகள் என கண்டறிந்து அவற்றினை சமூகமாற்றப் போராட்டத்திற்கு ஏற்றவகையில் ஒழுங்கமைத்துக் கொள்ளும் அணுகு முறையை இவர்கள் முன்மொழிகின்றனர்.
கைலாசபதி இந்த மூன்றாவது அணியினையே சார்ந்து நின்றார். அவர் வாழ்ந்த காலப்பகுதில், நமது கலாசாரம், பண்பாட்டு, பாரம்பரியம், இலக்கியத்தில் மக்கள் சார்பு பண்பு என்பன கடும் சோதனைக்குட்பட்டிருந்த காலமாகும். இத்தகைய காலச் சூழலில் தமது எழுத்தால் செயற்பாட்டால் மக்கள் சார்பு இலக்கிய கோட்பாட்டினை நிலை நாட்டியதில் கைலாசபதியின் பங்களிப்பினை முக்கியமானது. எனவே கைலாசபதியின் இலக்கிய, அரசியல் கொள்கை நடைமுறை, அதன் செல்வாக்கு என்பவற்றினை ஆராய்தல் வேண்டப்படுவதாகும்.
கைலாசபதி 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்ப+ரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் இளையத்தம்பி கனகசபாபதி. தாயாரின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. யாழ்பாண சமூகத்தை சேர்ந்த கைலாசபதியின் பெற்றோர்கள் தமது தொழில் நிர்ப்பந்தம் காரணமாக மலேசியாவில் சில காலம் வாழ்ந்தனர். இவரது தந்தை அங்கு படவரைஞராகப் பணிப்புரிந்தவர்.
கைலாசபதி மலேசியாவில் விக்டோரியா இன்ஸ்டிடிய+ட்டில் தமது ஆரம்ப கல்வியை கற்றார். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் 13வது வயதில் இலங்கைக்கு திரும்பினார். பின், தமது இடைநிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்று, பட்டப் படிப்பினை இலங்கை பல்கலைகழகத்திலும் (பேராதனை வளாகம்) கற்றார்.பேராதனை பல்கலைக்கழகத்திலயே தமது முதுமாணி பட்டத்தினையும் பெறறார். பின்னர் கலாநிதி பட்டத்தினை இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் முடித்தார்.
ஐகலாசபதிக்கு யாழ். இந்துக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மார்க்சியத் தத்துவ அறிமுகம் கிடைத்தது. அத்தத்துவத்தின் ஒளியிலேயே அவர் தமக்கான சமூக நோக்கையும் உலக கண்ணோட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றார். “வளரும் பயிரை முளையிலேர தெரியும்” என்பதற்கமைய பள்ளி பருவம் முதலே தமக்கான பார்வையை தெளிவாகவும் தீட்சண்யத்துடனும் வளத்துக் கொள்கின்றார். இது குறித்து கைலாசபதிக்கு மார்க்சிய தத்துவார்த்த பார்வையை வளம்படுத்தியவர்களில் ஒருவரான மு. கார்த்திகேசனின்; பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கது.“எனது வகுப்பு மாணவர்களில் பலர் பரலோகம் செல்வதற்காகச் சூளுவான வழியைக் கண்டுப் பிடித்தார்கள். அவர்களிடம் தேவாரம், திருவாசகம், பைபில், குர்ஆன் இருக்கும். அவர்களுள் வித்தியாசமாக ஒரு மாணவன் இருந்தான். அவன் சமூக விஞ்ஞான நூல்களை வைத்துக் கொண்டு ப+லோகத்தை பார்க்கத் தலைப்பட்டான். அவர்களோ வானம் பார்த்த பரலோக வாதியானார்கள். இவனோ பரலோகம் பார்த்த சமூகவிஞ்ஞானியானான். அந்தச் சுட்டி மாணவன் தான் கைலாசபதி.”
கைலாசபதி தமது பாடசாலை பருவத்திலே சிறுகதை, கவிதை, நாடகம், இசை என பல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்ததுடன் பல ஆக்கங்ககளையும் எழுதியுள்ளார். அக்காலத்தில் தமிழ்மணி, இந்துசாதனம், சுரபி, யுகம், வீரகேசரி முதலிய இதழ்களிலும் அவரது ஆக்கங்கள்; பிரசுரமாகியுள்ளன. இவர் எழுதிய நாடகங்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வகையில் கைலாசபதியின் பல பரிசோசனை முயற்சிகளினூடாகவே தமக்கான விமரசனத் துறையை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
கைலாசபதி பல்கலைகழகத்தில் மாணவராக கற்கைநெறியை தொடர்ந்திருந்த காலத்தில் பேராசிரியர்கள் க.கணபதிபிள்ளை,வீ.செல்வநாயகம், சு.வித்தியாணந்தன் முதலாலோனரிடம் கற்க கூடியதும் அவர்களுடன் சேர்ந்து சமூக செற்யாடுகளை முன்னெடுக்க கூடியதுமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றார்.
1957 ஆம் ஆண்டு தமிழை சிறப்பு பாடமாக கொண்டு பயின்ற கைலாசபதி முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார். இந்த தகைமையை பயன்படுத்தி அவர் வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றோ அல்லது வேறு நிருவாக துறைசார்ந்த பதவிகளிலோ பிரகாசித்திருக்க முடியும். கைலாசபதி அவ்வாறு செய்யவில்லை. மறாக தனது துறைக்கான களமாக பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.; தினகரன் பத்திரிகையில் முதலில் உதவி ஆசிரியராகவும் பின்னர், மிக குறுகிய காலத்திலேயே பிரதம ஆசிரியியராகவும் நியமிக்கப்பட்டார்.
1961 இல் கைலாசபதி பத்திரிக்கை துறையிலிருந்து விலகி பேராதனைப் பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இந்த சூழலை கைலாசபதி தமது தமிழியல் ஆய்வுத் துறை விருத்திக்கு சாதகமானதோர் களமாக பயன்படுத்திக்; கொண்டார்.
1963 ஆம் ஆண்டளவில் தமது கலாநிதி பட்டபடிப்பிற்காக புலமைப் பரிசில் பெற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கழகத்திற்கு சென்றார். இக்காலத்தில் அவரது மார்க்சிய பார்வையை வளம்படுத்தியதில் பேராசிரியர் ஜார்ஜ் தொம்சனுக்கு முக்கியமானவர்.இவரது மேற்பார்வையின் கீழ் Tamil Heroic Poetry என்ற ஆய்வேட்டினை சமர்பித்தார். தக்க ஆதாரங்களுடனும் சமூதாய கண்ணோட்டத்துடனும் சங்க செய்யுள்களை கிரேக்க வாய்மொழி இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி, அப்பாடல்களின் பரவுத் தன்மை, மக்களின் எழுத்தறிவு, அவற்றின் உள்ளடக்கம், வடிவம் என்பனவற்றினை ஆதாரமாகக் கொண்டு சங்ககால செய்யுள்களை வாய்மொழி இலக்கியம் என நிறுவினார். இவ்வாய்வு முயற்சி, தமிழில் சங்க இலக்கியம் குறித்து புதிய பார்வைகளும் ஆய்வுகளும் தோன்ற ஆதர்சனமாக அமைந்தது.
இதே காலப்பகுதியில் (1964) தனது மாமன் மகளான சர்வமங்களத்தை திருமணம் செய்துக் கொள்கின்றார். இருவருக்கும் சுபமங்களா (1968), பவித்ரா(1968) ஆகிய இரு புதல்விகள் உள்ளனர். கைலாசபதியின் ஆய்வு சார்ந்த பணிகளுக்கு திருமதி சர்வமங்களத்தின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. iகாசபதியின் ஆய்வுப்பணிகளுக்கு சர்வமங்களம் எத்தகைய பங்களிப்பினை நல்கியுள்ளார் என்பதை அவரது வார்த்தைகளில் காண்பது பயன்மிக்கது.
“ கைலாசுக்கு சோர்வு என்பதே கிடையாது. புத்தகம் படிப்பார். நண்பர்களுடன் இலக்கிய விவாதம் செய்வார். இரவிரவாக எழுதுவார். ஒரு மணி இரண்டு மணிக்கு முன்னர் அவர் படுத்ததில்லை. நல்ல ஒரு மாணவரைப் போல இடைவிடாது உழைத்தார். அடுத்த நாள் காலை ஒரு பரீட்சை எழுத வேண்டும் என்பதுபோலவே நடந்துக்; கொள்வார். அவர் இரவிரவாக எழுதியதை அது ஆங்கிலமாக இருந்தால் நான் தட்டச்சு செய்து வைப்பேன். அது தமிழ் என்றால் அதை நான் நல்ல எழுத்தில் திருப்பி எழுத வேண்டும். அத்துடன் வேலை முடியாது. திருப்பி படிக்கும் போது புதுபுது எண்ணங்கள் முளைக்கும். என்னிடம் sorry sorry என்று மன்னிப்புக்கேட்டபடி நட்சத்திரகுறி போட்டு வேறு ஒற்றையில் A,B,C என்று எழுதி வைப்பார். நான் அவற்றையெல்லாம் கட்டுரையில் சேர்த்து திரும்பவும் எழுத வேண்டும். ஆரம்பத்தில் ஆறு பக்க கட்டுரையாக இருந்தது முப்பது பக்கமாக மாறிவிடும்.”
கைலாசபதியின் வீட்டில் எப்போதும் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கூடுவது வழக்கம். அவர்களுக்கான விருந்துபசாரங்களை செய்வதிலும் சர்வமங்களம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார் என்பதனையும் பலர் பதிவு செய்துள்ளனர்;. அத்துடன் கைலாசபதி தமது இறுதி காலத்தி;ல் பாரதி பற்றி நூல் எழுதும் முஙயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அவ்வாறே அவரது சீன பயணத்தின் பின்னர் நீர்வை பொன்னயன், இ.முருகையன், எம். ஏ நுஃமான் ஆகியோருடன் இணைந்து லுசுன் பற்றி நூதெலழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றதுபல்கலைகழக சார்ந்த பணிகளுடன் மட்டும் கைலாசபதி தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் பல்கலைகழகத்திற்கு அப்பாலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணைக்குழு (1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழு> இலங்கை பல்கலைகழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம்(1971-74), இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு(1973) என பல பணிகளை மேற் கொண்டுள்ளார்.
1974 இல் யாழ்.பல்கலைகழக வளாகம் ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் முதலாவது வளாகத் தலைவராக பேராசிரியராக நியமிக்கப்பட்டவர் கைலாசபதி. யாழ். பல்கழகம் உருவாக்குவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாரோ அவ்வாறே அது உருவாகிய பின்னர் அதன் இலக்கினை அடைவதற்காகவும் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டார்.
1977 இல் கைலாசபதிக்கு தமது வளாகத் தலைவருக்கான பதவி காலம் முடிந்ததுடன் அவர் அதே பல்கலைகழகத்தில் பேராசிரியராக கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. இக்காலத்தில் கைலாசபதி தாங்வென்னா துன்பங்களை அனுபவித்துள்ளதை திருமதி. சர்வமங்களம், செ. கணேசலிங்கன் முதலானோரின் குறிப்புகளில் காணக் கூடியதாக உள்ளது.
மேலும், கைலாசபதி இந்திய பல்கலைகழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் மற்றும் அயோவாப்> கலிபோரினியப் பல்கலைகழகளிலும் வருகை தரு அதிதி பேராசிரராக கடமையாற்றியுள்ளார். இத்தகைய ஆளுமை உள்ளீடுகளை கொண்டிருந்த கைலாசபதி 1982 இல் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இவரது இழப்பு இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
கைலாசபதி பாடசாலை மாணவராக இருக்கும் காலம் முதலே பல வகை நூல்களை வாசிக்க தலைப்பட்டிருந்தார். அக் காலத்தில் பொதுமக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தாரின் வெளியீடுகளான ‘கம்பரசம்’, ‘ஆரிய மாயை’, ‘தீ பரவட்டும்’, ‘நாடும் ஏடும்’, ‘நிலையும் நினைப்பும’;, ‘பரமசிவனுக்கு பகிரங்க கடிதம்’, ‘பரந்தாமனுக்கு பகிர்ந்த கடிதம்’ முதலிய நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டிருந்தார். அவ்வாறே, பாரதிதாசன் , புதுமைபித்தன், ரகுநாதன், மு.வரதராஜன் சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகியார். முதலியோரின் ஆக்கங்களை வாசிப்பதிலும் கூடிய ஆர்வம் காட்டி வந்திருப்பதை கவிஞர் இ.முருகையனின் நினைவுக் குறிப்புகளில் காண முடிகின்றது.
மேலும் கைலாசதிக்கு பாடசாலை மாணவராக இருந்த காலத்தில் தமிழில் எவ்வாறு தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டாரோ அவ்வாறே ஆங்கில மொழியிலும் புலமை மிக்கவறாக காணப்பட்டார். சில ஆங்கில இலக்கிய விமர்கர்களின் நூல்களை வாசிப்பதில் அவர் தீவிர கவனமெடுத்துள்ளார் என்பதை அவரது எழுத்துக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக எலியற், எஃப்.ஆர்.லீவிஸ், சிசில் டேய் லூயி, ஸ்ற்றீஃபன், ஸ்பென்டர், முதலிய விமர்சகர்களும் டி.எச். லோறன்ஸ், பேணாட் ஷோ, ஜேம்ஸ்ஜோஸ், வேஜினியா வ+ல்ஃப், ஷேக்ஸ்பியர், மாக்ஸிம் கார்க்கி மாயாகோல்ஸ்கி, ஏஸ்ட்ராவ்கி, பெட்டோஃபி, லூசுன், பெர்ட்டோல் பிரெஸ்ட், நெருடா முதலிய படைப்பாளிகளும் கைலாசபதியினால் வாசிக்கப்பட்டவர்கள் என்பதனை அவரது எழுத்துக்களின் ஊடாக அறிய முடிகின்றது. இவ்வாறு வாசிப்பதில் மட்டுமன்று அதனை நண்பர்கள் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுவதிலும்; கைலாசபதி ஆர்வம் காட்டியிருந்தார.; நண்பர்களுக்கு எழுதுகின்ற கடிதங்கள், ஒருவகையில் அவை கூட ஒரு சமூதாயம் சார்ந்ததாக இலக்கியம் குறித்த உரையாடலாகவே அமைந்துள்ளது.
1953 இல் பதுளையை சேர்ந்த தனது கல்லூரி நண்பனுக்கு எழுதிய கடிதம் பொறுத்து என். கே.ரகுநாதன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார்.
“சொந்தவிவகாரங்கள் ஏதுமில்லை. படித்த இலக்கிய புத்தகங்களிலிருந்து குறிப்புகள், விஷேட ரசனைகள், பல புத்தகங்களைப் பற்றி அறிமுகக் குறிப்புகள்- ஆங்கில நூல்கள் உட்பட சிங்காரம் சொல்வார்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, விரைவில் முடித்துக் கொண்டு ஏதாவதொரு குறைப்புத்தகத்தைப் படிக்க ஓடி விடுவாராம். கடிதங்களிலும் அந்தப் புத்தகம் கிடைத்துள்ளது: இந்தப் புத்தகம் வாங்க வேண்டும்: படித்த பின் அதையிட்டு எழுதுகின்றேன்- இப்படியெல்லாம், பிற்கால இலக்கிய ஆதர்சனங்களுக்கு அப்போது அடிகோலினார் போல் தெரிகிறது”
இவ்வாறு பல்வேறு நூல்களை கற்று தேர்ந்த கைலாசபதி வாழ்விலிருந்து அந்நியப்படவிடாமலும் தொலைத்தூர தீவுக்குள் ஒதுங்கி விடாமலும் தன் கரித்திர தூரிகையை நகர்த்தி சென்றுள்ளமைஅவரது சிந்தனைத் தெரிவினை காட்டுகின்றது. தான் பெற்ற அறிவை மாறி வருகின்ற சூலுக்கு ஏற்ப, தமிழ் மரபுக்கு ஏற்ப பொருத்தி பார்த்து எமது சூழலுக்கான விமர்சப் பார்வையொன்றை உருவாக்கி, புத்தகவாத சிந்தனைக்கப்பால் நடைமுறைக்கான செயற்திறனை வலியுறுத்துகின்ற பண்பை அவரது எழுத்துக்களில் காணக் கூடியதாக உள்ளது.
கைலாசபதி பின்னாட்களில் ஆற்றல் வாய்ந்த விமர்சராக ஆய்வளராக பிரபல்யம் அடைந்ததனால் அவரை விமர்சகராக ஆய்வாளராக பார்க்கின்ற நிலையே உள்ளது. அப்பார்வை ஒரு விதத்தில் சரியானதும் கூட. அதே சமயம் அவர் தமது ஆரம்ப காலங்களில் கவிதைகள், சிறுகதைகள், சிலவற்றினையும் எழுதியுள்ளார். சுமார். 40 நாடகங்கள் எழுதியுள்ளதாக அறிய முடிகின்றது. அவரது பெரும்பாலான நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. நத்தார் பெருநாளையொட்டி ‘கல்லறைக்கு எதிரில்’ என ஒரு நாடகம் ஆக்கினார். அவ்வாறே புதுமை பித்தனின் ‘கபாடபுரம்’ கைலாசபதியினால் நாடகமாக்கப்பட்டுள்ளன. ‘குரல்கள’; என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார். என கவிஞர் இ.முருகையர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே அவர் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அக்காலத்தில் பொருளாதார நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்தவர் பலர் மலேசியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் அவர்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் குறித்து நாவல் எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகின்றது. அத்துடன் பாரதி பற்றியும் தனிநூல் எழுதும் முயற்சிலும் ஈடுபட்டிருந்ததை கைலாசபதி பற்றி வெளிவந்த குறிப்புகளில் காணமுடிகின்றது.பேராசிரியரின் வெளிவந்த நூல்கள்;:
(முதற் பதிப்பு வெளிவந்த ஆண்டின் அடிப்படையில்)
தமிழில்
இரு மகாகவிகள் (1962)
பண்டைய தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966)
தமிழ் நாவல் இலக்கியம்(1968)
ஒப்பியல் இலக்கியம்(1969)
அடியும் முடியும் (1970)
கவிதை நயம் (இ.முருகையனுடன் இணைந்து எழுதியது),(1970)
இலக்கியமும் திறனாய்வும் (1972)
பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1973)
மக்கள் சீனம் காட்சியும் கருத்தும்( திருமதி சர்வமங்களம் கைலாசபதியுடன் இணைந்து எழுதியது), (1979)
சமூகவியலும் இலக்கியமும் (1979)
திறனாய்வுப் பிரச்சனைகள் (1980)
நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்(1980)
இலக்கியச் சிந்தனைகள் (1983)
பாரதி ஆய்வுகள்(1984)
ஈழத்து இலக்கிய முன்னோடிகள்(1986)
சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982 (1992)
முன்னுரைகள் (2004)
நாவலர் பற்றி கைலாசபதி (2005)
ஆங்கிலத்தில்:
Tamil Heroic Poetry (1968)
The Relation of Tamil and Western Literature ( 1984)
On Art and Literature (1986)
On Bharathi (1987)
உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மாக்சியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பியாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து. ~~அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது. அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்ச்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன் கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியது. அதன் பின்னணியில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது. அந்த வகையில் மார்க்சிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்சியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. கைலாசபதி மார்க்சியத்தையே தமது உலநோக்காக கொண்டு தமது ஆய்வு முயற்சிகளையும் சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார். இந்தப் பின்னணியி;ல் அவரது எழுத்துச்துறைச்சார்ந்த பங்களிப்புகளை பின்வருமாறு வகுத்துக் கூறலாம்.
1. இலக்கியத்திற்கும் கமூகத்திறிகும் இடையிலான உறவை மார்க்சிய உலக கணணோட்டத்தின் துணைக்கொண்டு அறிந்ததுடன், தமது இலக்கிய ஆய்விற்கு கமூகவியல் அணுகுமுறையையே ஆதாரமாக கொண்டிருந்தார். ஓவ்வொரு காலத்திலும் நிலவுகின்ற சமூதாய அமைப்பின் தன்னையை பொறுத்தே அச்சமூகத்தில் நிலவுகின்ற கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஆகியனவும் அமைந்துக் காணப்படும். சமூகமைப்பின் மாற்றத்திற்கு ஏற்ப இவவம்சங்களும் மாறும் என்பதனை தமிழ் இலக்கியம் பொறுத்த ஆய்வில் கோட்பாட்டு அடிப்படையி;;ல் வெளிப்படுத்திய முதல் தமிழ் அறிஞர் கைலாசபதி ஆவார். பழந்தமிழ் இலக்கிய பரிச்சியமும் நவீன இலக்கிய நோக்கும கொண்டிருந்த கைலாசபதி, தமிழாராய்ச்சி என்பது பழைய இலக்கண இலக்கியங்களை கற்று பழமையை பேனுவது, சமூகத்தின் எண்ணற்ற ஒடுக்குமுறைகளை மூடி மறைத்தல் எனும் புன்iமைகளைத் தாண்டி தமிழ் இலக்கியத்தினையும் அதன் மாற்றத்தையும் வரலாற்று அடிப்படையிலும் யாவற்றுக்கும் மேலாக மாற்றத்தின் இயக்கவியலை பொருள் முதல்வாத சிந்தனையின் அடிப்படையிலும் கிரகித்துக் கொண்டமையுமே அது சார்ந் ஆய்வுகளை வெளிக் கொணர்ந்தமையுமே கைலாசபதியின்; முக்கியமான பங்களிப்பாகும்.
2. இலக்கிய வரலாற்றை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மையை அறிந்துக் கொள்ள முடிகின்றது.தூய அழகியல்வாதிகள் இலக்கியத்தில் தூய்மை, அழகியல் என்ற பிரமாஸ்த்திதை;தை உபயோகித்து மக்கள் இலக்கிய படைப்புகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் தாக்க முனைவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. இவர்களது கூப்பாடுகளையும் கண்டனங்களையும் சற்று கூர்ந்து நோக்குகின்ற போது சமூகத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்ற மாந்தர்களின் குரலாகவே இவை அமைந்துள்ளதைக் காணலாம். மக்கள் இலக்கியம் என்றுமே அழகியலை நிராகரிக்கவில்லை. கவிதைப் பொறுத்து குறிப்பிடுகின்ற போது உள்ளடக்கம் ஒரு மனிதனின் உயிர் என்றால் உருவகம் அதன் உடல் என்பார் கைலாசபதி. ஒரு தூய அழகியல்வாதியின் கலைப் பற்றிய பார்வையும் மக்கள் இலக்கியகர்த்தாவி;ன் அழகியல் பற்றிய பார்வையும் அடிப்படையில் முரண்படானதாகும் என்பதை எடுத்துக் காட்டிய கைலாசபதி அவை எவ்வகையில் தமது வர்க்க நலன்களை பிரதிப்பலித்து நிற்கின்றது என்பதனையும் கோட்பாட்டு அடிப்படையில் நிறுவினார். காலம் காலமாக நீண்டுள்ள இந்த விவாதத்தில் மக்கள் இலக்கியத்தின் அழகியல் சார்பாக அவர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவையாகும்.3. கலை இலக்கியத்தை வெறுமனே தனித்த துறையாக நோக்காது அதனை ஏனைய துறைகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை கைலாசபதி வலியுறுத்தினார்;. இலக்கியத்தின் உலக பொதுமையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த கைலாசபதி இலக்கியமும் அதன் விளைநிலமாகிய சமூதாயமும் உலக பொதுவான நியதிக்குள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஒப்பியல் ஆய்வின் அவசியத்தை விலியுறுத்தினார். பல தல இலக்கியங்களிலிருந்தும் தேசிய இலக்கியங்களிலிருந்தும் உலக இலக்கியம் உருவாகின்றது என்ற மார்க்சின் கோட்பாட்டை ஆதாரமாக கொண்டு தமிழியல் அத்தகைய சாத்தியப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை ஆதாரங்களுடடன் எடுத்துக் காட்டுகின்றார். ஒப்பியல் ஆய்வின் மூலமே குறிப்பிட்ட இலக்கியத்தின் தனித்துவத்தினையும் அதன் பொதுமையையும் எடுத்துக் காட்ட முடியும் என்பதை சிறப்பாகவே கைலாசபதி உணர்ந்திருந்தார். தமிழில் ஒப்பியல் நோக்கு வளர்வதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பேராசிரியர்கள் சுந்தரம்பிள்ளை, வையாபுரிபிள்ளை என்றால் அதன் பின் இத்துறையில் சாதனை செய்தவர் கைலாசதியாவார் எனக் கூறின் தவறாகாது. பொதுவாகவே கைலாசபதியின்; ஆய்வுகளில் ஒப்பியல் ஆய்வு என்பது முனைப்புற்றுயிருப்பினும் அவரது ‘இரு மகாகவிகள்’ , ‘ஒப்பியல் இலக்கியம்’ “Tamil Heroic Poetry ”ஆகிய நூல்களே அவரது ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். பொதுவாகவே கைலாசபதியின ஆய்வுகள் தமிழ் சமூதாயத்தின் வாழ்க்கை கூறுகளில் அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அழகியல், அறிவியல் முதலிய துறைகளை தமதாக்கி அதன் ஒளியிலேயே தமிழ் இலக்கியம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் காண்கின்றோம். அந்தவகையில் தமிழிலே ஒப்பியல் இலக்கிய ஆய்வினை மார்சிய நோக்கில் ஆய்வு செய்த தமிழ் அறிஞர்களில் சைலாசபதி முன்மையானவர் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.
4. தேசியம் என்ற சிந்தனையானது பல தளங்களில் இயங்கி வந்துள்ளதை அவதானிக்கலாம். தேசியம் மனித குலத்தின் நாகரிகமான பக்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற போது அதனை பிற்போக்கான தேசியம் எனவும் அது வளர்ச்சிகச்காகவும் சமத்துவ சமூகவமைப்பிற்காகவும் செயற்படுகின்ற போது முற்போக்கான தேசியம் எனவும் வறையரை செய்கின்றோம். அந்தவயையில் ஐம்பதுகளில் இலங்கையில் தோன்றிய தேசியமானது நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல், பொருளாதார, கலாசாரப் பண்பாட்டு பாராம்பரியம் என்ற உணர்வை தோற்றுவித்திருந்தது. இதன் பின்னணியில் இலங்கையில் மண்வாசைன மிக்கப் படைப்புகளும் சமகா பிரச்சனைகளும் இலக்கியத்தின் பாடுப்பொளுளாகின. இந்த சூழலில் தமிழில் பரந்தப்பட்ட மக்கள் இலக்கியத்தை புறக்கணித்து நின்ற மரபுவாதிகளுக்கு எதிராகவும் அதேசமயம் இலங்கையை இந்திய வணிக இலக்கியங்களுக்கான சந்தையாக பாவித்த கபடதனங்களுக்கு எதிராகவும் உறுதியான தத்தவார்த்த போராட்டத்தை நடாத்த வேண்டிய தேவை இருந்தது. இத் தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் கைலாசபதி முதன்மையானவர். இதன் பின்னணி;யில் கைலாசபதி எழுதிய ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’ ‘நாவலர் பற்றி கைலாசபதி’ ஆகிய நூல்களும் தேசிய இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும். அவ்வாறே தேசிய இலக்கியம் தொடர்பில் முக்கிய கவனமெடுத்த கைலாசபதி அதனை சர்வதேச பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்துனே இணைத்துப் பார்த்தார். இதன் காரணமாகவே பாரதியை தேசிய இலக்கியத்தின் முன்னோடியாக அவரால் காணமுடிந்தது. ‘ஓரே உலக’ இலக்கியத்திற்கு தேசிய இலக்கியம் எத்தகைய பங்களிப்புகளை வழங்க முடியும் என்பதனையும் கைலாசபதியால்; எடுத்துக் காட்ட முடிந்தது.
கலை இலக்கியம் அரசியல் வரலாற்றுக் காலக்கட்டங்களில் மனிகுலத்தின் வளர்ச்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயற்பட்ட சந்தர்ப்ங்களை ஆய்வு அடிப்படையில் கைலாசபதியின்; எழுத்துக்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. சமூதாய அமைப்பின் மேட்கட்டுமானத்தில் ஒன்றாக அமையும் இலக்கியம் சமூதாயத்தை விபரிப்பதாக மட்டுமன்று அது சமூதாயத்தை மாற்றும் கருவியாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை ஊடாக தமது எழுத்து சார்ந்த பங்களிப்பினை வழங்கியவர் கைலாசபதி. அவரது எழுத்துக்களில் சிலாகித்து பேசப்படுகின்ற ஓர் அம்சம் தான் அவரது எழுத்து நடையாகும். தமது கருத்துக்களை தெளிவாக முன்வைக்கின்ற அதேசமயம் வாசகனை ஈர்த்தெடுக்கும் ஆற்றலும் கைலாசபதியின் எழுத்து நடைக்கு உண்டு. எண்ணுகணக்கற்ற சொற்களை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவ்வாறே அவரது எழுத்துக்களில் காணப்படும் பிறிதொரு சிறப்பு அம்சம், அவர் எடுத்தாள்கின்ற மேற்கோள்களாகும். ஆய்வு நெறி ஒழுங்கு என்பது வரையறுக்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்ற வரைறையை கொண்டிருந்த போதினும் அதற்கு அப்பால் விரிவான தகவல்கள் வழங்குவது கைலாசபதியன் நூல்களில் பொதுவாக காணப்படுகின்ற பண்பாகும். கைலாசபதியின்; நூல்களை வாசிக்கின்ற போது அவை தொடர்பான முழு நிறைவான தேடலை மேற்கொள்வதற்கு ஆதர்சனமாக அமைந்திருக்கும்.
உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார். கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார். இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. “பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே” என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.
இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்ப+ர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. அதனை மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் புரிந்துக் கொள்ளும் விதமும் தமதாக்கி கொள்ளும் விதமும் தனித்தன்னை வாய்ந்ததாக இருக்கும், இருக்கவேண்டும்.
பாரதி தீட்சண்யா

Thursday, December 6, 2012

கைலாசபதி அவர்களின் முப்பதாவது நினைவு தினம்


பேராசிரியர் கைலாசபதியின் அரசியல் நோக்கும் பங்களிப்பும்: சில குறிப்புகள்
- லெனின் மதிவானம்
இன்று கைலாசபதி அவர்களின் முப்பதாவது நினைவு தினம்
kailsapathyகைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். ஆயினும் அன்னாரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய, சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும்; அவரது பங்களிப்புக் குறித்த முழுநிறைவான ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை துரதிஸ்டமான ஒன்றே.
அமரர் சுபைர் இளங்கீரன்; கைலாசபதியின் அரசியல் என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும்  அது ஒரு அறிமுக கட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகால தேவையாகும். கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி - கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் - சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் - சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) - க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை  அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது. இவவாறன சூழலில் பேராசிரியரின் அரசியல் பங்களிப்புக் குறித்து போதுமா அளவு ஆய்வுகள் வெளிவந்ததாக தெரியவில்லை. அவை தொடர்பான ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

பேராசிரியர் பகிரங்கமான அரசியல்வாதியாகவோ அல்லது கட்சி உறுப்பினராகவோ காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஆரம்ப காலங்களில் கம்ய+னிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதனை சுபைர் இளங்கீரன் நினைவுக் கூறுவார். மறுபறத்தில் பேராசிரியரின் செயற்பாடுகளும் சிந்தனைகளும் இந்துக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து இறக்கும் வரையில் நேர்மை மிக்க பொதுவுடமைவாதியாக இருந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பேராசிரியரின் பத்தி எழுத்துக்களும் ஆய்வுகளும் எப்போதுமே உழைக்கும் மக்களின் தன்மானம் கலந்த மூச்சுக் காற்றினை பிரதிப்பலிப்பதாகவே அமைந்திருக்கின்றன. கோடிக்கனக்கான மக்களின் விடுதலைக்கான தத்துவத்தை தமது சுயநலன்களுக்காக கைவிட்டவர்கள்;;;;- அவ்வாறு வி;டப்பட்டபின்னர் சமூகத்தில் தமக்கான அங்கீகாரமும் தேவையும் ஏற்படுகின்ற போது அவர்கள் தமது தவறை தமக்கேற்றவகையிலான சித்தாந்தமாக மாற்றி நியாயப்படுத்துகின்றனர். இந்தப் பின்புலத்தில், சுயநலத்தினை ஆதாரமாகக் கொண்ட பொருளியல் வேட்கை, மனித குலத்தை கூறுபோடும் சாதியமைப்பு, பென்னை இழிவு செய்யும் பாதக கொடுமைகள், கலாசார வக்கிரங்கள் இவற்றுக் எதிரான போராட்டங்களுக்கான பலமான கோட்பாட்டுத் தத்துவத்தை உருவாக்குவதில் பேராசிரியரின் பணி விலைமதிப்பற்றது.

மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.
 உழைக்கும் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்றபோது கட்சி ஸ்தாபனம் குறித்தும் அதனடியாக எழுகின்ற கட்சி இலக்கியம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது. கட்சி இலக்கியம் என்பது பாட்டாளி வர்க்க கட்சியை முதன்மைப்படுத்தியே படைப்பாக்கப்பட வேண்டும் என்பது அதன் நியதியாகும்.  கட்சியின் போராட்டங்களை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுத்து செல்வதற்கான தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.   இத்தகைய மக்கள் எழுச்சிக்காகவும் புரட்சிகர பணிக்காகவும்  பரந்துபட்ட  மக்களை விழிப்பு கொள்ளச் செய்வதும் அணிதிரட்டுவதும் கட்சி இலக்கியத்தின் பிரதான இலட்சியமாகும்.  மாறாக கட்சியை மிகைப்படுத்திஇ கட்சி உறுப்பினர்களை புனிதர்களாக காட்ட முனைவது கட்சி இலக்கியமாகாது.  அதே சமயம் கட்சியில் உள்ள சிறுசிறு முரண்பாடுகளை பிரதானமாக்கி அதனை வெகுசனத் தளத்திற்கு கொணர்ந்து கட்சியை சிதைப்பதும் கட்சி இலக்கியமாகாது.  மாக்ஸிம் கோர்க்கியின் ‘தாய்’ யங்மோவின் ‘இளமையின் கீதம்’இ நிக்கொலாய் ஒஸ்றோவஸ்க்கி ‘வீரம் விளைந்தது’ முதலிய படைப்புகள் கட்சி இலக்கியத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பேராசிரியரை பொறுத்தமட்டில் கட்சி இலக்கியம் பற்றி தாயகம்(1970களின் நடுக் கூற்றில்) சஞ்சிகையில் எழுதிய கட்டுரை இதனை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது.

பேராசிரியருக்கு கட்சிசார்ந்த கட்சிசரா பொதுவுடமைத் தோழர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். உதாரணமாக மு கார்த்திகேசன், கே.ஏ. சுப்ரமணியம், சுபைர் இளங்கீரன், நீர்வை பொன்னயன், என்.கே. ரகுநாதன் டொமினிக் ஐPவா, கே.டானியல், பிரேம்ஜி, செ. கணேசலிங்கம் என இப்பட்டியலை நிட்டிச் செல்லலாம்.

1960களில் வடக்கில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான பேராட்டத்தை கம்ய+னிடஸ்;டுகளும் ஏனைய ஜனநாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்தனர்.

சகல ஓடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் முற்போக்கான அம்சங்களில் ஒன்றாகும். மறுப்புறத்தில் தழிழ் பிற்போக்கு சக்திகள்  தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு சிங்கள பெருந்தேசிய வாதம் மட்டுமே காரணமானது எனக் கொண்டு அதற்காக மட்டும் போராடுவதே பிரதானமானது என செயற்பட்ட போக்கானது, ஒருவகையில் ஐக்கியப்பட வேண்டிய சிங்கள நேச சக்திகளையும் விரோதியாக பார்த்ததுடன் தமிழ் மேட்டு குடியினரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைகின்ற பண்பாகவே இப்போக்கு அமைந்திருந்தது.

அந்தவகையில் இவற்றுக்கு மாறாக இடம் பெற்ற மக்கள் போராட்டங்கள் எழுச்சிகள் அவர்களுக்கு அருவருக்கதக்கதாயிருந்ததுடன் அவர்களின் மூக்கை சிணுங்க வைத்ததில் வியப்பொன்றுமில்லை. இத்தகைய பேராட்டத்தில் சாதியம், அதன் தோற்றம், தமிழர் சமூதாயத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேராசிரியர் அவர்கள் ஆழமான கட்டுரைகளை எழுதினார். கவிஞர் இ.முருகையனின் கோபுரவாசல் நாடகம் பற்றி எழுதி  கோபுரவாசலும் புலைப்பாடியும், “போராட்டமும் வரலாறும”; ஆகிய கட்டுரைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவையாகும்.

இவ்வாறறே 1960 களில் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட சர்வதேச ரீதியான தத்துவார்த்த முரண்பாடுகள் பிளவுகள் இலங்கை பொதுவுடமை இயக்கத்திலும் தாக்கம் செலுத்த கூடியவையாக அமைந்து காணப்பட்டன. பாராளுமன்ற பிரவேசத்தினூடாக உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டினை இரஸ்சியாவும், புரட்சிகர வர்க்க போராட்டத்தை வலியுறுத்திய சீனாவும் இரு வேறுபட்ட முகாம்களாக பிரிந்து தத்துவார்த்த போராட்டங்களை நடாத்தின. இலங்கையில் மொஸ்கோ சார்பு அரசியல் நிலைப்பாட்டை பிரேம்ஜி ஞானசுந்தரம், டொமினிக்ஜீவா, கா.சிவத்தம்பி முதலானோர் ஆதரித்திருந்தனர். சீனத்தரப்பு புரட்சிகரமான அரசியல் நிலைப்பாட்டை நீர்வை பொன்னயன், கே.டானியல், என்.கே. ரகுநாதன், சுபைர் இளங்கீரன், முகமது சமீம், சுபத்திரன், யோ.பெனடிக்பாலன், செ.யோகநாதன் முதலானோர் ஆதரித்திருந்தனர். இந்தப்பிரிவில் பேராசிரியர் சீனத்தரப்பையே ஆதரித்திருந்தார் என்பதை அவரது சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய தத்துவார்த்த போராட்டங்கள் இடம்பெற்றிருந்த காலத்தில் கைலாசபதி கலாநிதி பட்டத்திற்காக புலமை பரிசில் பெற்று  இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் கற்றுக் கொண்டிருந்தார். இக் காலச் சூழலில் பேராசிரியரின் தெளிவான தீர்க்கமான அரசியல் நிலைபாட்டினை உருவாக்குவதில் பேராசிரியர் ஜார்ஜ் தொம்சனுக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய நிலைப்பாட்டினை ஏற்றிருந்த பேராசிரியர் அதனை பகிரங்கப்படுத்திக் கொள்ளவில்லை. அவ்வம்சமும் அக்காலத்தின் தேவையாக இருந்தது.

மக்கள் இலக்கியத்தில் நாட்டங்கொண்டு முற்போக்கு சங்கத்தில் அங்கம் வகித்த சகலரும் மார்க்சியவாதிகள் அல்லர். அதேசமயம் மார்க்சிய சிந்தனையை ஏற்றுக் கொள்ளாதவர்களும் சில முற்போக்கு இலக்கிய படைப்புகளை படைத்துள்ளனர். அவ்வாறே பலவிதமான அரசியல் சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு மத்தியிலும்  அவர்களுடனான நேச முரண்பாட்டை பகை முரண்பாடாக மாற்றிக் கொள்ளாதது பேராசிரியரின் தீட்சண்யமிக்க அரசியல் பார்வைக்கு தக்க எடுத்துக்காட்டாகும். அவர் இறுதிவரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்திருந்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.

இத்தகைய ஐக்கிய முன்னணி கோட்பாட்டை  நடைமுறையிலும் தமது எழுத்திலும் பின்பற்றிய பேராசிரியர் மார்க்சிய விரோத எழுத்தாளர்களுக்கு எதிராக தீவிரமாக போராடினார். மு. தளையசிங்கம், க.நா. சுப்ரமணியம் தொடர்பில் இவரது எழுத்துக்கள் முக்கிமானவையாகும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரி அடையாளங்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் சிலர் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்கும் தமது அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்வதற்கும் அத்தத்துவத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். தமது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்ட பினனர்; பிற்போக்கான வியாபார நோக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டது மட்டுமன்று ஒரு காலத்தின் தாங்கள் எந்த வர்க்கத்திற்கெதிராக போராடினார்களோ அந்த வர்க்கத்தினருடன் சமரசம் செய்து கொண்டு கூடிக் குழாவுவது மாத்திரமன்று அந்த வர்க்கத்தினருக்கு சாமரை வீசி சேவகம் செய்வதை இலங்கை இடதுசாரி வரலாற்றில் காணக்கூடியதாக உள்ளது.

இத்தகைய சிதைவுகள் குறித்து பேராசிரியர் தமது புனைப்பெயரில் எழுதிய கட்டுரையில் கூறுகின்ற பின்வரும் வரிகள் முக்கியமானவை ~~இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிடத் தொடங்கிய காலம் முதல் ரொக்;சியவாதம் உடன்பிறந்தே கொல்லும் வியாதிபோல் இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றது. ரொக்;சியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்திற்குள் ஊடுருவியுள்ள முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்று சரியாகக் குறிப்பிட்டார். புpலிப் குணவர்த்தனா முதல் கொல்வின் ஆர் டி சில்வா வரை ரொட்சிசவாதிகள் இலங்கையில் நமக்குக் காட்டி வந்து நிற்கும் சாதனை என்ன? பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமான சரணாகதியுமாகும். இவ்வகையில் இலங்கை இடதுசாரி வரலாற்றில் நவீன திரிபுவாதமாக அமைந்த ரொட்;சிய வாதம் குறித்தும் அதன் வர்க்கத்தன்மை, விளைவுகள் குறித்தும் கைலாசபதி சுட்டிக்காட்ட தவறவில்லை.

 அவ்வாறே, மார்க்சிய விரோத எழுத்தாளர்கள் என்றுமே முற்போக்குவாதிகளாக இருந்ததில்லை என்பதில் தெளிவானதோர் நிலைபாட்டினையெ கொண்டிருந்தார் என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதொன்றாகும். மார்க்சியக் கோட்பாட்டை யதார்த்த சூழலுக்கு ஏற்வகையில் பொருத்திப் பார்த்து அந்த தளத்தில் உறுதியான இலக்கியம் படைக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் தெளிவானதொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதற்கு மேற்குறித்த விடயங்கள் சான்றாக அமைகின்றன.
இவிவிடயம் ஒருபுறமிருக்க, பேராசிரியரின் அரசியல் நிலைப்பாட்டினை அது சார்ந்த நடைமுறையின் குறுகிய வரம்புக்குள் நிலைநிறுத்தி தமது அரசியல் லாபத்திற்கும் சுயனலத்திற்காகவும் பயன்படுத்துவோர் சிலர் அவரை தமக்கேற்ற வகையில் மறுவாசிப்பு செய்துக் கொள்வது தற்செயல் நிகழ்ச்சியல்ல

எங்கள் நாட்டு இடதுசாரி அரசியிலில் ஒரு சாபக்கோடு, யாராவது ஒரு படிப்பாளியை அல்லது உயர் பதவியிலிருப்பவரை, அவர் எங்களோடுதான் நிற்கிறார்! என்று சாயம் ப+ச முற்படும் தந்திரோபயம். கைலாசபதியின் மார்க்ஸிய நிலைப்பாட்டினைக் களங்கப்படுத்துவதற்கு இப்படியும் இடைய+றுகள். கைலாசபதி போஸ்டர் ஒட்ட வரவில்லை. எங்களுடன் வாங்கில் இருந்து பிளேன் டீ குடிக்கவரவில்லை. என்று அவரைச் சிறுமைப்படுத்தக் கூடாது. அது உரைகல்  அல்ல. மார்க்சிச அணி பெரும் பரப்பைக் கொண்டது. தொழிலாளர், விவசாயிகள், புத்திஜீவிகள், நடுத்தரவ வர்க்கத்தார் இப்படி. கைலாசபதி;: ஒரு புத்திஜீவியின் பங்குக்கு அதிகமாகவே தன் பணியை ஆற்றியவர். ( ரகுநாதன் என்.கே. கட்டுரையாசிரியர், 1996, எங்கள் நினைவுகளில் கைலாசபதி,  மல்லிகைப்பந்தல் யாழ்ப்பாணம், ப. 46.)

பேராசிரியர் கைலாசபதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர். அவர் எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர். அரசியல் கட்சிகள், சிறு அரசியல் குழுக்கள் நடாத்தும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் கேட்டால் நடைமுறை அரசியல், சீர்கேடுகள் கருத்துக்கள் பற்றி எழுதி வழங்குவது அவரது முக்கிய பண்புகளில் ஒன்றாக அமைந்திருந்தது. என என்.கே. ரகுநாதன் நினைவு கூறுவார். பேராசிரியரின் இத்தகைய பண்புகளை மறுத்து அவர் தம்முடன் மாத்திரமே உறவுக் கொண்டிருந்தார் எனவும் அவர் எடுத்த முடிவுகள் யாவும் எமது அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றே எடுத்தார் என பிரகடனப்படுத்துவதும,; இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு கைலாசபதியின் தவறுகளுக்கு மேற்குறித்த நபர்களின் கூட்டு முடிவுகளுக்கும் உறவு கற்பிக்கின்ற இரா.இராமசுந்தரம் போன்றோர் அவரது சிந்தனைகளை குறுகிய வரம்புக்குள நிலை நிறுத்துவது அவர் வழியுறுத்தி நின்ற தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளிடையிலான ஐக்கிய முன்னனி கோட்பாட்டை நிராகரிப்பதாக அமையும்.

;  கைலாசபதி கலை இலக்கியம் தொடர்பாக எவ்வாறு பல விடயங்களை கற்றுத்தேர்ந்தாரே அவ்வாறே அரசியல் விடயங்களையும் அவர் தொடர்ந்து படித்து வந்தார். இது தொடர்பில் நண்பர்களுடன் விவாதித்து தெளிந்த நிலைப்பாட்டினை உருவாக்குவதிலும் பேராசிரியரின்; பணி கணிசமானது. இது தொடர்பில் செ. கணேசலிங்கனின் பின்வரும் கூற்று முக்கியமானது.

 ~~எப்பொருள் பற்றியும் எவருக்கும் வேண்டும். விபரங்கள் எந்தெந்த நூல்களில் கிடைக்கும் அந்நூல்களை எங்கே அல்லது எவரிடம் பெறலாம் என்பதை எளிதில் கூறிவிட வல்லவர் கைலாசபதி. அவர் பலதுறை நூல்களையும் இரவு பகலாகச் சோர்வின்றிப் படிப்பவர். அண்மையில் வெளியான இலக்கிய விமர்சன நூல் தொடக்கம், புதிதாக வந்த யுத்த நாவல்கள் வரை ஒன்றுவிடாமல் தேடிப்படித்து விடுவபர்.

கலை இலக்கியத்தோடு உலக அரசியல் நிகழ்ச்சிகளையும் ஆழ்ந்து கவனிப்பவர். நண்பர்களிடையே அரசியல் விமர்சனம் செய்வார். வங்காளத்திவ் ஜோதிபாசு பொலீஸ் பகுதி அமைச்சரானார் என்று அவரிடம் தெரிவித்தால் வரலாற்றில் இடதுசாரிக் கூட்டாட்சிகள் ஏற்பட்டு பொலிஸ் பகுதியையும் நிர்வாகித்த கூட்டாட்சிகள் யாவற்றையும் கையிலே விரல் மடித்து ஒவ்வொன்றாகச் சொல்லி எதிர்காலம்பற்றியே விளக்கம் கூறிவிடுவார்.

அந்த வகையில் சர்வதேச அரசியல் என்கின்ற போது பேராசிரியர் மேலோட்டமான அவதானிப்பை கொண்டிருக்கவில்லை. வரலாற்று பார்வை வர்க்கச் சார்பு என்ற வகையில் உற்று நோக்கி அதன் ஒளியிலே சர்வதேசம் பற்றி கருத்து கூற தலைப்பற்றிருப்பதைக் காணலாம்.

செம்பதாகை பத்திரிகையில் சர்வதேசவிவகாரங்களை ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்தது போன்றே இலங்கை விவகாரங்களையும் வேறு ஒரு தனிப்பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதிவந்தார். இரண்டுமே புனை பெயர்களில் எழுதப்பட்டமையால் செம்பதாகை ஆசிரியர் குழுவோடு தொடர்பானவர்களுக்கு வெளியே எவருக்கும்  இவற்றை கைலாசபதியே எழுதுகிறார் என்பது தெரிந்திருக்கவில்லை. இன்று அவரது சர்வதேச விவகாரங்கள் தொடுக்கப்பட்டுள்ளமையால் அறிய முடிவது போல உள்ளுர் விடயங்களில் அவரது கருத்தைப் பலரும் அறியாமல் போய்விட முடிகிறது. குறிப்பாக தமிழ் தேசியம் தொடர்பான அவரது நிலைப்பாட்டை அறியாமலே அவர் முற்றாகவே தமிழ்த்தேசியத்தை நிராகரித்தார் என சொல்லியும் எழுதியும் வருகிற போன்கு காணப்படுகிறது.

சிங்கள தரகு - பெரு முதலாளிவர்க்கக் கூட்டாக இருந்தபடி அமெரிக்க மேலாதிக்க சார்பும் இஸ்ரேல் சோசலிச ஆதரவும் உடையதாக இருந்த வலதுசாரி தமிழ்த் தேசியத்தை கைலாசபதி தொடர்ந்தும் மேற்படி உள்ளுர் விவகாரம் பற்றி எழுத்துக்களில் கண்டித்து, அம்பலப்படுத்தி வந்திருக்கிறார். அதேவேளை எழுபதுகளில் பிற்பாதியிலிருந்து தனது மறைவுவரை எழுச்சிபெற்றுவந்த இளைஞர்களது விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று ஆதரித்து எழுதிவந்தார். அப்போது இளைஞர் இயக்கங்களிடையே மார்க்சியத் தேடலும், லெனினது சுயநிர்ணயம் குறித்த ஆழ்ந்த கற்றலும், சோஷலிச நாட்டமும், இவை பற்றிய ஜனநாயக ப+ர்வமான விவாதங்களும் காணப்பட்டன. அத்தகைய இடது சாரித் தமிழ்த்தேசியச் சொல்நெறியை அவர் ஆதரித்து வளர்த்தெடுக்கவல்ல எழுத்தாக்கங்களை தெடர்ந்து செம்பதாகையில் பதிவு செய்துள்ளார். பின்னாலே வலது சாரி தமிழ்த்தேசியமே மேலாதிக்கம் பெற்ற போதிலும் அவரது மறைவு வரை அதை முறியடித்து இளைஞர் எழுச்சியின் இடது சார்பான தமிழ்த் தேசியம் முன்னேற முடியும். எனும் நம்பிக்கை இருந்து வந்தது.

இத்தகைய உள்ளுர் விவகாரம் சார்ந்த பக்கம் தொகுத்து வெளியிடப்படாமை பெரும் துரதிஷ்டமாகும். அது வெளிவராதவரை அவர் தமிழ்த்தேசியத்தை முழுதாகவே நிராகரித்தார் என்ற தவறான பார்வையும் நீடிக்கவே செய்யும். அதன் வரவு காலத் தேவையாகும். கைலாசபதியை மதிப்பிடுவதற்காக மட்;டுமல்லாமல் தமிழ்த்தேசியத்தின் இரு வழிப்பாதை மோதுகையின் தோற்றமும், எழுச்சியும் - வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ளவும் அது அவசியமானதாகும்.

இலங்கையில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று  எழுபதுகளில்  தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.

பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்தவகையில் இன்று நேர்மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மாக்சி;யர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது

Friday, June 1, 2012


ஒரு புலமைத்துவ ஆளுமையாக மட்டுமல்ல இயக்க சக்தியாகவும் விளங்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி : ந. இரவீந்திரன்

குமரன் புத்தக இல்லம் 2011 செப்ரெம்பர் மாத முடிவில் லெனின் மதிவானம் எழுதியிருந்த “ பேராசிரியர் க. கைலாசபதி: சமூகமாற்றத்திற்கான இயங்காற்றல்” என்ற நூலினை வெளியிட்டது. மிகுந்த கருத்தியல் சிதைவுகளுக்குள் அல்லாடும் இன்றைய இலங்கை மற்றும் தமிழியல் சூழலில் காத்திரமிக்க சமூகப் பங்களிப்பிற்குரிய ஆளுமையான கைலாசபதியின் கருத்தியல் தெளிவைத் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தியமைக்காக க. குமரனுக்கும் லெனின் மதிவானத்துக்கும் முதற்கண் நன்றியை தெரிவிக்க வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் நடுக் கூற்றிலிருந்து ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள்( 1955-1982) மிகுந்த முனைப்புடன் சமூகமாற்றத்திற்காக எழுத்தாற்றலைப் பிரயோகித்தவர் க. கைலாசபதி(5.4.1933-6.12.1982). மக்கள் போராட்ட களங்களோடு ஊடாடி, மக்கள் சக்தி விடுதலைத் திசைமார்க்கத்தில் வீறுட் எழுச்சிக் கொள்ள வழிப்படுத்தும் கொமிய10னிஸ்ட் கட்சியுடன் உறவுப10ண்டு, தன் அறிவை நடைமுறை அனுபவங்கள் வாயிலாக பட்டைத் தீட்டி செழுமைப்படுத்தி முன்னேறியவர் கைலாசபதி. அத்தகைய அவரது வளர்ச்சியில் அந்தக் காலக்கட்டத்தில் இலங்கைச் சமூகமும் இலங்கை தமிழ் மக்களும் தீர்க்கமான வரலாறு படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமையை அவதானத்திற்குட்படுத்துதல் அவசியம்.
லெனின் மதிவானத்தின் மேற்படி நூல் வீறுமிக்க அந்நக் காலத்தையும் அதன் வெளிப்பாடான ஆளுமையாக கைலாசபதி விளங்கியவாறினையும் துலக்கமாக காட்டி நிற்கிறது. கைலாசபதியின் வாழ்வும் வகிபாகமும் நூல் முழுமையும் தெளிவுப்படுத்தப்படடதோடு அமையாது, பின்னிணைப்பில் அவரது முக்கியத்துவமிக்க இரு கட்டுரைகளையும் லெனின் மதிவானம் தந்துள்ளார். “ஈழத்து தமிழ் இலக்கியம்” எனும் தலைப்பில் கைலாசபதியால் 1955 இல் எழுதப்பட்ட (தமிழகத்தில் வெளியான “சாந்தி” இதழின் முதலாவது ஆண்டு நிறைவு மலர்) கட்டுரை, முந்திய பண்டித மரபை மறுமலர்ச்சிக் கட்டமாய் வளத்து முற்போக்கு இலக்கிமாக வீறுகொள்ள உந்தித் தள்ளும் வளர்ச்சி நிலைக்கு ஏற்புடையதாக ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறி கனிந்தமையைக் காட்டுவது. முற்றொரு கட்டுரையான “உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பின்னணியும் பின்நோக்கும்” என்பது 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியச் சதியை அம்பலப்படுத்தியது.
அந்த உலக தமிழாராய்ச்சி என்பது பயனுறுதிமிக்க ஆய்வியலாக அன்றி பிற்போக்கு சக்தியின் அரசியல் செயற்பாடாகவே அமைந்தது. ஏற்கனவே தரப்படுத்தலினால் புகையத் தொடங்கிய இனப்பகைத் தீ, இந்த மாநாட்டில் அரங்கேறிய இனவாதச் செயற்பாடுகளினால் கனன்று எரிந்து 1983 இனக் கலவரத்தோடு நாடு தழுவிய உள்நாட்டு யுத்தமாக பரிணமித்தமையை அறிவோம். அவ்வாறு அழித்தொழிப்பு யுத்த சங்காரத்தில் மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றலைத் தற்காலிகமாய்த் தடுத்து நிறுத்துவதற்கு பிற்போக்குவாதிகள் வாய்ப்பினைப் பெற்ற எண்பதுகளின் தொடக்கத்தில் கைலாசபதியின் மறைவு நேர்ந்து விட்டதை அறிவோம்.
இவ்வாறு, முற்போக்கு இயக்கம் எழுச்சியுற ஆரப்பித்து- பிற்போக்குவாதம் அதற்கெதிரான தடையை முடுக்கிவிட இயலுமாகிய கட்டம் வரையில் தமிழயல் பணியாளராகவும் முற்போக்கு போராளியாகவும் வாழ்ந்தவர் கைலாஸ். மேNலு காட்டிய “சாநதி” இதழ்க் கட்டுரையில் பிரேம்ஜி, எச். ஏம்.பி. மொஹிதீன், கே. டானியல், ‘புதுமை லோலன்’ ஆகியோர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் முன்னிணி வகிப்பதைக் கைலாஸ் கூறியுள்ளார். கூடவே, “நமது சமுதாயத்தின் முரண்பாடுகளை உணர்ந்து, பொருளாதார மாற்றத்துக்காக உழகை;கும் அரசியலி;ல் நம்பிக்கைக் காட்டும் இக்குழுவினர் பல காரணங்களால் போதிய அளவு இலக்கிய சிருஷ்டிககளில் ஈடுபடவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் மூலம் எதிர்காலத்தில் நல்லதொரு இலக்கியப் பரம்பரையை இவர்கள் உண்டுபண்ண முடியும்” என்ற நம்பிக்கையைக் க.கை. வெளிப்படத்துவார்(மேற்படி நூல்,ப.89).
“சரித்திரக்கதியில்” மறுமலர்ச்சிக் கட்டத்தை எட்டிய ஈழத்து தமிழ் அதிலிருந்து விடுப்பட்டு முன்னேறி(முற்போக்கு இலக்கிய அக்கங்களை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே) மறுமலர்ச்சியின் பயனை அடைய முடியும் எனக்கூறி, அந்தக் கட்டுரையில் அதற்கான நம்பிக்கையையும் தெரிவித்ததிலிருந்தது போலவே முற்போக்கு இலக்கிய இயக்கம் பின்னர் கனங்காத்திரமான படைப்புகளை வெளிப்படுத்தியிருந்தமையை அறிவோம். ஈழத்து இலக்கியச் செல்நெறி அவ்வகையிலான பண்பு hPதியான மாற்றத்தை எட்ட வேண்டும் எனத் தனது 22வது வயது இளம் பராயத்தில் வலியுறுத்திய கைலாஸ், அந்தப் பணியைக் கையேற்று இயங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன்(இ.மு.எ.ச.) இணைந்து இயங்கிய பங்களிப்பாளராகவும் செயற்பட்டார்.
கைலாசின் இத்தகைய இயங்காற்றலை வெளிப்படுத்தும் லெனின் மதிவானத்தின் நூல் 8 அத்தியாயங்களை உடையது. (1) வாழ்க்கைப் பின்னணி, (2) எழுத்துக்கள், (3) பத்திரிகைத்துறை,(4) பல்கலைக்கழகம், (5) அரசியல்,(6) இலக்கிய அமைப்புகள், (7) விமர்சனங்கள், (8) நிறைவுரை என்ற தலைப்புகளின் கீழ் பருந்துப் பார்வையில் க. கை. யின் பன்மைப்பரிமாணத்தைக்காட்டி. மேற்கொண்டு ஆழமாக அவரைத் தேடு;ம் ஆர்வத்தை லெனின் மதிவானம் ஏற்படுத்தி விட்டுள்ளார்.
பின்னிணைப்புகளில் “கைலாசபதி பற்றிய முக்கிய தகவல்கள்” தரப்பட்ட பின்னர் “கைலாசபதியின் எழுத்துக்கள் வெளிவந்த பிரசுரங்கள்” பற்றிய விபரம் இடம்பெற்றுள்ளது. இவை , கைலாசின் பங்களிப்பையும் அவற்றை எத்தகைய களங்கள வாயிலாக வெளிப்படுத்pனார் என்பதையும் உணரத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. “உலகத் தமிழாராய்ச்சி…”, “ஈழத்து தமிழ் இலக்கியம்” எனும் மேலே குறித்த இரு கட்டுரைகள் பின்னிணைப்பில் அடுத்து இடம்பெறுவன் எழுதப்பட்ட காலவரிசை அடிப்படையில் அவை முன்பின்னாக மாற்றித் தரப்பட்டிருக்க வேண்டும்.
புpன்னினைப்பில் இறுதியாக தரப்பட்டுள்ளக் கட்டுரை “ சோஷலிசத்திற்கான பாதைப் பற்றி பேராசிரியர் கைலாசபதி” என்பது லெனின் மதிவானத்தால் வேறு சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டு, “மலையகம் தேசியம் சர்வதேசம்” என்ற அவரது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருந்த கட்டுரையாகும். ஊண்மையில் அந்தக் கட்டுரை இந்நூலுக்குரிய கட்டமைப்பில் நிறைவுரை என்ற பகுதிக்கு முன்னதாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை கட்சி பத்திரிக்கையான “செம்பதாகை” இல் புனைப்பெயரில் சர்வNதுச விவகாரங்கள் பற்றி ஒரு பக்கத்தில் கைலாஸ் எழுதிய பத்தி எழுத்து குறித்து எழுதப்பட்ட தாகும். இதேபோல புனைபெயரில் அதே செம்பதாகையில் மற்றொரு பக்க பத்தி ஏழுத்தில் உள்நாட்டு விவகாரங்கள் குறித்த “ கருத்டதும் கண்ணோட்டமும்” க.கை. இனால் எழுதப்பட்டுள்ளது; இப்போது அதனை ஆய்வுக்குட்படுத்தி லெனின் மதிவானம் “இலங்கையில் உலமயமாக்கலின் ஊடுறுவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி” என்ற கட்டுரையை எழுதியுள்ளார். ( இது அண்மையில் வெளிவரவுள்ள லெனின் மதிவானத்தின் ‘ மலையக இலக்கியத்தின் சில பரிமாணங்கள்’ என்ற நூலில் இடம் பெறுகின்றது). “சோஷலிசத்திற்hகன பாதை பற்றி கைலாசபதி” பற்றிய கட்டுரைக்கு முன்னதாக இந்த உள்நாட்டு விவகாரம் குறித்த கைலாசின் பார்வையை ஆய்வக்குட்படுத்தும் கட்டுரையும் இடம்பெறும் போது இந்நூல் மேலும் முழுமைபெறும். குண்டிப்பாக அவசியபடவள்ள அடுத்த பதிப்பில் இந்தமாற்ற்ஙகளைக் காண இயலும் என நம்பலாம்.
11
இன்று எமக்கு கிடைத்துள்ள “பேராசிரியர் கைலாசபதி : சமூக மாற்றத்திதுக்கான இயங்காற்ற்ல்” என்ற லெனின் மதிவானத்தின் நூல் வழங்கும் கருத்துக்கள் மற்றும் கிளர்த்தும் விவாதங்கள் அடிப்படையில் சில விடயங்களை அலசுவது அவசியமானதாகும். கைலாசின் பங்களிப்பை வெளிப்படத்தும் இதே வேளையில் அவர் மீதான அபாண்டமான குற்ற விமர்சனங்கள் எத்தனை து}ரம் ஆதாரமற்றன என்ற விடயத்தையும் அம்பலபடுத்துவதாய் இந்நூல் அமைந்துள்ளது. கால- தேச நிலவரங்களின் பிரத்தியே தன்மை குறித்த அக்கறையின்றி மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் பிரயோகித்தவர், வர்க்கப்பிரச்சனையை மட்டும் கவனத்தில் கொண்டு தேசிய- தலித்தியப் பிரச்சனைகளைபவ் புறக்கணித்தவர், பல்கலைகழகத்திற்கு வெளியே உள்ள ஆய்வாளர்களைப் பொருட்படுத்தாதவர் என்பன க.கை. மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களாகும்.
காலமாற்றத்தோடு வெளிப்படும் புதிய கருத்துகளை அங்கரித்து வளர்க்கும் போது, பல்கலைக்கழுகத்துக்கு வெளியே உள்ள ஆய்வாளரiயும் இனங்கண்டு வளர்க்கும் பண்பு எவரiயும் விட அதிகமாய் கைலாசிடம் உண்டு. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக “பாரதியின் மெய்ஞ்ஞானம்” நூலும் அதன் ஆசிரியர் ந.இரவீந்திரனும் உள்ளன(ர்). “ பாரதியிடம் பிற்போக்கான ஆன்மீகப் பார்வை காணப்பட்டாலும் அவரது சமூகப் பார்வை புரட்சிகரமானது” எனும் கருத்து பலரiயும் போல க.கை. இடமும் ஆரம்பத்தில் இருந்தது; அவரது நெறிப்படுத்தலில் “ பாரதி: பன்முகப்பார்வை” க்காக ந. இரவீந்திரன் “ அரசியல் இலக்கியமும் பாரதியும்” என்ற தலைப்பில் ஆய்வை Nமுற்கொண்ட போது தன்னால் வழிகாட்டப்படும் அந்த மாணவன் முன் வைத்த கருத்து தனது முந்திய முடிவுக்கு மாறானது என்ற தயக்கம் ஏதுவுமின்றி, அந்தப் புதிய கருத்தை ஏற்றுக் கொண்டு, அதனை விரிவுப்படுத்தி பாரதியின் ஆன்மீக நோக்கு குறித்து தனி நூல் எழுத அந்த மாணவனை ஆற்றுப்படுத்தினார்.
புhரதியின் அரசியல் இலக்கியத்துக்கான அடிப்படை உலக நோக்கு ஆன்மீகத் தளத்தினு}டாக வெளிப்பட்ட இயங்கியல்-பொருள் முதல் வாதம் என்பது அவரால் நெறிப்படத்தப்பட்ட மாணவனின் ஆய்வு முடிவாக இருந்தது. கருத்து முதல்வாத நிலை நின்று கடவள் அனைத்தையும் தீர்பார் என்ற நம்பிக்கையில் இயங்கும் ஆன்மீகவாதியாக அல்லாமல் ஆன்மீகத் தளத்தையும் புரட்சிகரமான உலக நோக்குக்கு மாற்றிய பாரதியின் ஆளுமையை ஏற்றுக் கnhள்வதற்கு தடையற்றவகையில் கைலாசின் ஆளுமை மார்க்சிய தெளிவுடன் வியாபித்திருந்தது. இத்தனைக்கும், “ அரசியல் இலக்கியமும் பாரதியும்” என்ற அந்த ஆய்வை மேற்கொண்ட மாணவன் பல்கலைகழகத்திலன்றி பலாலி ஆசிரிய கலாசாலையின் ஆசிரியப் பயினுராகப் பயின்று கொண்டிருந்தவன்; வெறும் பத்தாம் வகுப்புடன் பயிற்றப்படாத ஆசிரியராகி பயிற்றபட்ட ஆசிரியராவதற்கு பலாலி அசிரிய கலாசாலையை அடைந்தவன். “பாரதியின் மெய்ஞ்ஞானம்” வாயிலாக ஆய்வாளர்கள் மத்தியில் கவனம்பெற்று பின்னர் கல்வியில் முன்னேறுவதுடன் பல நூல்களையும் ந.இரவீந்திரன் எழுதுவதற்கு இவ்வகையில் அடித்தளமிட்டவர் கைலாசபதி.
முhர்க்சியவாதியாக பரிணமிக்காத பாரதியினால் இயங்கியல்- பொருள்முதல்வாதப் பார்வையை வரிக்க முடிந்தமையை ஏற்றுக் கொண்டது போன்றே சமூகப் பிரச்சனைகளை தனியே வர்க்கபேதம் சார்ந்து மட்டும் பார்க்கும் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது தேசிய-சாதி பேதங்கள் சார்ந்து அணுகித் தீர்வுக்கான போராட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் க.கை. பெற்றிருந்தார். “சாதி முறை தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற பதாகையுடன் எழுச்சியுற்ற 1966 ஒக்ரொபர் 21 மார்க்கத்திலான சாதி தகர்ப்பு போராட்டத்தை க.கை. உறுதியாக ஆதரித்திருந்தார். தொடரும் அதன் முன்னெடப்புக்கான அமைப்பாக தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் முதலாவது மாநாட்டு மலரில் க.கை. எழுதியிருந்த கட்டுரை இவ்விடத்தில் மிகுந்த கவனிப்புக்குரியது. தீண்டாமைத் தகர்புக்கான அந்தப்போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தும் போது, சாதியப் பிரச்சனையானது வெறும் மதப்பிரச்சனையாக இல்லாமல், அடிப்படையில் தேசிய பிரச்சனையாக உள்ளது என்று காட்டியிருந்தார். இன்று 40 வருடங்கள் கடந்த பின்னர் சாதி முறைமையை குறித்தும் தேசிய பிரச்சனை பற்றியும் புதிய தளங்களை எட்ட முடிந்தள்ளது. தொடர்ந்த ஆதாரங்களும் பல்வேறு நடைமுறை அனுபவங்களும் கைலாசின் அந்த அடிப்படைக் கருத்தை விருத்தி செய்யும் இடத்துக்கே வளர்த்தெடுத்து வந்துள்ளது.
இனமரபுக் குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவடைந்து உருவான ஐரோப்பியச் சமூக மாற்றங்களின் வரலாறு போன்று எமது சாதியச் சமூக அமைப்பு மாற்றங்கள் நடந்தேறவில்லை. சாதி என்பது எந்த சமயத்தின் கண்ட பிடிப்போ சதியோ பாவச் செயலோ அல்ல. எனக்கான ஏற்றத் தாழ்வுச் சமூக உருவாக்கம் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாய் பிளவடைந்து ஏற்படவில்லை; விவசாய வாய்ப்பை பெற்ற மருதத் தினைக் குரியதான இனமரபுக் குழு ஆளும் சாதியாகி, நிலத்தோடு பிணைக்கப்பட்ட தீண்டாதோர் எனும் ஓடுக்கப்பட்ட சாதிகளாயும், கைத்தெழில் சாதிகளாய் இடைச்சாதிகளாக்கப்படுதலாயும் ஏனைய திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்களை மாற்றிய சாதி வாழ்முறை எமக்கான பிரத்தியேகத் தன்மை உடையது. ஆத்தகைய புதிய வாழ்க்கைக் கோலமாகிய சாதி முறைமைக்கான கருத்தியலை வடிவமைக்கும் சாதியாக பிராமணர் உருவாகினரேயன்றி பிராமணசட சதியால் சாதி வாழ்முறை தேன்றி விடவில்லை. கருத்’து வாழ்க்கை கோலத்தைக் கட்டமைப்பதற்கு முன்னதாக, வாழ்முறை வெளிப்பாடாகவே கருத்து பிறக்கிறது!
சாதிமுறையின் தோற்றம்- வளர்ச்சி பற்றி பல்வேறு கருத்தியல் தளங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளைத் தொகுத்து மார்க்சிய அடிப்படையில் அணுகும் போது மார்க்சியப் பிரயோகத்தை செலுமைப்படுத்தும் அவசியத்தை வலியுறுத்தம் பதிய பரிமாணங்களையும் வந்தடைந்தள்ளோம். ஒரு புறம் மார்க்சியத்தின் போதாமை காரணமாக சாதிப்பிரச்சனையை தலித்தியவாதபடபார்வையிலேயே அணுகவும் தீர்க்க முயற்சிக்கவும் இயலும் என்ற எத்தனிப்புகள் முன்னெடுக்கப்பட்டு தோற்றுவிட்டமையை தலித் சிந்தனையாளர்கள் கூட இன்று ஏற்கம் நிலை உருவாகியுள்ளது. மறுப்புறம், வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டும் போதும் – சாதிப்பிரச்சனைத் தானே தீரும்; சாதியத்துக்கு எதிரான விசேடித்த போராட்டங்கள் வேண்டியதில்லை என்று இந்தியாவில் மார்க்சியர்கள் முன்னெடுத்த வறட்டுவாத நிலைப்பாட்டிலிருந்து மீண்டு, இன்று மார்க்சியர்கள் சாதிமுறை கறித்த ஆய்வுகளிலும் செயற்பாடுகளிலும் இறங்கியுள்ளனர்.
இதன் பேறாக இரட்டைத் தேசியக் கோட்பாடு தொடர்பான விவாதத்தை இன்று இந்திய ஆய்வுத் தளத்தில் அரும்பு நிலையில் காணக்கூடியதாக உள்ளது. இது சிறு பொறியாக உள்ளதாயினும், விரைவில் பெருந்தீயாக எழுந்து சிந்தனைத் தளத்தில் தேங்கிப் போன பழைய குப்பைகள் பொசுங்கி சாம்பலாகிவிட, புதிய வீச்சுடன் மார்க்சியப் பார்வையும் நடைமுறையும் உலகை மாற்றக் களமிறங்கும் என நம்பலாம். மார்க்சிய அணிகள், முன்னோடிகளது வசனங்களை மீறவியலாத புனித அருள் வாக்குகளாக கருதி விடாமல் மார்க்சிய-லெனினய சிந்தனை முறை வழிப்பட்டு எமக்குரிய பிரத்தியேக சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுத்துப் பிரயோகிக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
இதற்கான தடைகள் இந்தியாவில் நிறைந்துள்ளன. முன்னர் அம்பேத்கர் தலித் இயக்கத்தை முன்னெடுத்தபோது மார்க்சியர்கள் அதனைத் தமக்குரிய பணியாகக் கருதி நட்பு சக்தியாக்கத் தவறி வர்க்கப் பிரச்சனையை மட்டும் பார்த்ததால் எந்தளவு அகநிலைத் தவறு இருந்ததோ, அதேயளவு சாதிவாதம், மதவாதம், ஆரிய- திராவிட இனவாதம் என்பனவற்றைத் து}ண்டிய ஏகாதிபத்தியச் சதி என்கிற புறநிலைத் தாக்கமும் இருந்துள்ளது.( இலங்கையில் இனவாதமே போதுமான பிளவுபடுத்தல் சதி ஆயுதமாக இருந்தமையால் மார்க்சியர்கள் அனைத்துச் சாதிகளையும் ஐக்கியப்படுத்தி கொண்டு சாதிய இழிவுக்கெதிராகப் போராட சாத்தியமாயிற்று).
அத்தகைய சாதியத் தகர்ப்பு போராட்டங்கள் வர்க்கப் பார்வையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போது ஒடுக்கும் வெள்ளாளச் சாதியை எதிரியாகக் கட்டமைக்கவில்லை; “ சாதியமுறை தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற முழக்கத்தில் முன்னேறிய தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் வெள்ளாளர்களில் இடதுசாரி உணர்வாளர்கள் மட்டுமன்றி, சாதிய இழிவுகள் ஒடுக்கப்பட்டோரை மட்டுமன்றி தம்மையும் அவமானப்படுத்துவதென கண்டு வெட்கப்பட்ட அனைத்து நல்லெண்ணங்கொண்ட ஜனநாயக சக்திகளையும் ஐக்கியப்படுத்தியிருந்தது. அதன் உச்சநிலைப் போராட்டமாக நிலப்பிரபுத்துவ கெடுப்பிடியில் பிராமண உடைமையாகவும் வெள்ளாள ஆதிக்க கொடுமுடியாகவும் விளங்கிய மாவிட்டப்புரக் கோயில் பிரவேசப் போராட்டம் அமைந்தது. இந்மதத்தை தகர்ப்பதற்கு அவசியமில்லாமலே , அதன் சாதிய இழிவை ஒழிக்க இயலும் என்பதை அந்தப் போராட்டம் உலகுக்கு எடத்துக் காட்டியிருந்தது.
மாறாக இன்று இந்தியாவில் தலித்தியவாதம் தொடர்ந்தும் பிராமண- மற்றும் ஆளும் சாதிகளை எதிரிகளாய்க் கட்டமைப்பதோடு இந்துமதத்தை தகர்ப்பதே பிரதான பணியெனக் கூறி போராட்டச் சக்திகளை பிளவுப்படுத்தி இலக்கின்றி சிதறடித்து சமூகமாற்ற நடவடிக்கைகளுக்கு துரோகமிழைத்து வருகிறது. ஆன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிளவுப்படுத்தல் சதிக்கு தன்னை அறியாமல் அம்பேத்கர் இடமளிக்க நேர்ந்ததில் சுதந்திரப்போhரட்டங்களை முன்னெடத் பிராமணத் தேசியத்தின் தவறே பிரதானமானதாக இருந்தது. இதனைக் கண்டுக் கொள்ளாமல் கம்ய10னிஸ்ட்டுகள் அரவணைக்க வேண்டிய அம்பேத்கரை எதிரியாக்கியமையில் சுய விமர்சன hPதியாக ஏற்ற வேண்டிய தவறு இன்று உணரப்பட்டுள்ளது. இந்தியத் தேசியம் பிராமணத் தலைமையில் உயர்சாதி நலன்களை உறுதிப்படுத்த முனையும் போது தலித் தேசியம் எதிர் நிலைப்பாடு கொள்ளும் வகையில் இரட்டைத் தேசிய பிளவு நிதர்சனமாய் உள்ளமையை அன்று புரிந்துக் கொள்ள தவறிய போதிலும் இன்று கம்ய10னிட்டுகள் தலித் விடுதலைக்கான சரியான திசைவழியிலான போராட்டங்களை இந்தியாவில் முன்னெடுத்துவரக் காண்கின்றோம்.
இந்த முயற்சியுடன் கைக்கோர்க்கத் தவறி, தலித்தியவாத சக்திகள் போராட்ட மார்க்கமின்றி தறிகெட்டழியும் இலக்கற்ற வழிக்கு ஆட்படுத்த முயலுகையில் உண்மையில் ஏகாதிபத்தியமாய் பரிணமிக்கும்உலகமயக் கூட்டினை உடையதான இந்திய சாதி வர்க்க ஆதிக்க கும்பலுக்கே பணிசெய்கிறவர்கள் ஆகிறார்கள். இவ்வகையில் மாறிவரும் உலகச் சமநிலை மாற்றம் பற்றிய புரிதலின்றி மார்க்சியம் பேசும் சிலரும் தலித்தியவாத நிலை நின்று இந்து மதத் தகர்ப்பே சாதியொழிப்புக்கு வழிகோலும் என்ற தறிகெட்டழியும் தர்க்கங்களை முன்வைப்பவர்களாயிருக்க காண்கின்றோம். முன்னர் தலித் தேசிய நிதர்சனத்தைக் காணத்தவறி பிராமணத் தேசியத்தின் வாலாக இருந்தது போல, இன்று மற்றொரு முனைக்குத்தாவி தலித் தேசிவாத முடக்கத்துக்கு ஆளாகிறார்கள்.
உண்மையில் இரட்டை தேசியத்தின் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு, விடுதலை பிளவுப் படாது என்ற அடிப்படையில் அனைத்தும் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமே அன்றி ஒரு முனைவாத தவறுகளில் ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவுவது பயனற்றது; மட்டுமன்றி, எதிரிக்கு உதவுவது. முக்கள் விடுதலையில் தலித் விடுதலை தவிர்க்கவியலாத அங்கம் என ஏற்பவர் ஆளும் சாதித் தேசிய வடிவமாயுள்ள இந்துமதம் சார் அம்சங்களில் மக்கள் விடுதலைக்குரிய கூறுகளை இனங்கண்டு அவற்றோடு ஐக்கியப்பட்டு, ஆதன் ஆதிக்கவாத நிலைப்பாட்டை தகர்ப்பதற்கு முனைய வேண்டும். முhவிட்டபுரக் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இக்குணாம்சம் வெளிப்பட்டது. இவ்வகையில் இரட்டைத் தேசிவாத கோட்பாட்டை மார்க்சிய அணிகள் விவாதிக்க முன்வராதிருப்பதில் இந்திய மேலாதிக்கவாத ஊடுறுவல் செயற்படாமல் இல்லை( மார்க்ஸ், லெனின் ஆகியோரது வசனங்களில் சிறைப்படும் மார்க்சிய-லெனினிச சிந்தனைப் பாங்கற்ற அகநிலைவாத தவறுடன் இணைத்து இந்தப் புறநிலைத் து}ண்டலைக் காண வேண்டும்).
எமக்கான தேசிய இனப்பிரச்சனை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விளங்கிக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய வகைப்பட்ட மொழிசார் தேசியம் என்பதோடு முடிந்து விடவில்லை. முஸ்லிம் தேசியம் இந்திய விடுதலைப் போராட்டக் காலத் தொடக்கத்தில் கவனங்கொள்ள அவசியமான பிரச்சனையாக எழுந்து மொழிக்கும் அப்பால் தேசியப் பிரச்சனையில் மதத்துக்குரிய பாத்திரத்தை வலியுறுத்தியது. முப்பதுகளில் திராவிடத் தேசியம் பெரியாரால் முன்னிறுத்தப்பட்ட போது இனத்தேசியம் கவனிப்புக் குரியதானது; இது பின்னர் இந்திய தேசியத்தினுள் மொழிசார் இனத்தேசியங்களின் சாத்தியத்தை இயலுமானதாக்கியது. முன்னரே, இந்தியத் தேசியம் எழுச்சியுறத் தொடங்கிய கையோடு ஜோதிராவ்ஃப10லே, அயோத்திதாசர் போன்றோர் இந்தியத் தேசியம் அடிப்படையில் பிராமணத்தேசிய எழுச்சிக்கான அவசியத்தை தொட்;டுக் காட்டினர். ஏதிர்தேசிய எழுச்சிக்கான அவசியத்தை தொட்டுக்காட்டினர். அப்போது அரும்பு கொள்ளத் தொடங்கிய தலித்கருத்தியல் முப்பதுகளில் அம்பேத்கரால் தலித்தேசிய இயக்க நடைமுறையாக வளர்க்கப்பட்டது.
ஆக, எமது தேசியப் பிரச்சனை மிகுந்த சிக்கல் பண்புடையது. இடதுசாரி பண்புடனான இல்கைத் தேசியத்துடன் ஐக்கியப்பட்ட மக்கள் விடுதலைத் திசை மார்க்கத்துக்குரிய ஒடுக்கப்பட்ட மக்களின் சாதித்தகர்ப்புப் போராட்டத்ததை இலங்கையில் கம்ய10னிட்டுகள் முன்னெடுத்த போது தலித் பண்புடன் எதிர்த்தேசிய வடிவம் கொள்ள அவசியமில்லாமல், அதுவே வரலாற்றின் பிரதான செல்நெறியாக அன்று இருந்தது. ஆளும் வெள்ளளத் தேசியமாக குறுகிய இனவாத முடக்குவாத நோய்க்கூறுடனான ஈழத்தமிழ் தேசியம் அதனோடு ஐக்கியப்பட முன்வராமல் எதிர் மனப்பாங்கை கொண்ட போதிலும் அது எதிர்த்தேசிய வடிவம் உடையதல்ல. இந்தியாவில் போன்று ஆளும்(பிராமண- வெள்ளாள) சாதித் தேசியங்களுக்கு எதிர்த்தேசியமாய் இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் அமையாமல் போனமையில், இலங்கையில் மார்க்சியர்களது சரியான நிலைப்பாடு மட்டுமன்றி விNசுடித்த பண்பு வேறுபாடுகளும் காரணமாக அமைந்திருந்தமை கவனிப்புக்குரியன(இலங்கையிலும் தமிழனத் தேசியம் குறித்த சரியான பார்வை எட்டப்படவதில் காலதாமதம் ஏற்பட்ட தவறு இருந்ததாயினும,; சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசியத்தை ஒடுக்க முனைந்த போது அதற்கு எதிராக தலித் தேசிய எதிர் நிலைப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, கம்ய10னிஸ்ட்டுகளும் சரி இயங்கவில்லை).
இத்தகைய இரட்டைத் தேசிய- தமிழினத் தேசியப் பிரச்சனையில் கைலாசபதி தனது நிலைப்பாட்டை முழுமையாக வெளிப்படத்த மன்னர் மறைந்துவிட்டபோதிலும், இன்று நாம் வந்தடையும் திசை மார்க்கத்திலேயே அவரது பயணிப்பு அமைந்திருந்தது என்பது தெளிவு. இதனை லெனின் மதிவானத்தின் இந்த நூலும் தமிழ்த்தேசியம் குறித்த கைலாசபதியின் பத்தி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட (மேலே குறித்த) கட்டுரையும் எடுத்துக்காட்டுகின்றன.
111
இப்படிச் சொல்லும் போது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியை முன்னிறுத்தி வேறு சாத்தியம் குறித்து பேசுகின்றவர்கள் இருக்கின்றனா எனும் யார்த்தம் புறக்கணிப்புக்குரியதல்ல. இரட்டைத் தேசியம் குறித்த விவாதங்கள் கா.சி. அவர்களோடு கலந்துரையாடப்பட்ட போதிலும் அதனைக் கவனத்தில்லெடுக்கவோ அது தொடர்பில் கருத்துக் கூறவோ கா.சி. முன் வந்ததில்லை. மாறாக, ஈழத்தமிழ் தேசியம் முற்றிலும் ஆளும் சாதித்தேசியமாக அதற்கான பாசிச வடிவ முன்னெடுப்பில் வளர்ந்து வந்த போது அதனை அவர் ஆதரித்து எழுதியும் பேசியும் வந்தார். அந்தக் கட்டத்தில் கைலாஸ் இருந்தால் கூட தமிழினத்தேசியத்தை(அதன் ஆதிக்க சாதித் தேசியப் பண்பு பற்றிய புரிதல் கொள்ளாமல்) தவிர்க்கவியலாதவகையில் ஏற்றிருப்பார் எனக் கூறுவோர் உளர்.
‘செம்பதாகை’ பத்தி எழுத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் ‘வியாபாரக் கூட்டணி’ ( தமிழர் விடுதலைக் கூட்டணியை இப்படிதான் கைலாஸ் சுட்டினார்) இரத்தம் சிந்தா யுத்தமான அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்ட பாணி குறித்துக் கடும் கிண்டல்களுடனும் கண்டனங்ககோடும் கைலாஸ் எழுதியது பற்றி லெனின் மதிவானம் தனது கட்டுரையிலும் நூலிலும் காட்டியுள்ளார். அந்த வியாபாரக் கூட்டணியின் பிற்போக்கு தனங்களுக்கு எதிராக மார்க்சிய அக்கறையோடு இளைஞர் இயக்கங்கள் எழுச்சி பெற்று வந்தமையை க.கை. ஆர்வத்துடன் ஆதரித்து எழுதி வந்தார். அந்த இடதுசாரித்துவ இளைஞர் எழுச்சி நீடிக்க இயலவில்லை; துப்பாக்கி ஏந்திய அமிதலிங்கமாக( அமிரால் ஆசையோடு தம்பி என்று அழைக்கப்பட்ட) பிரபாகரன் தமிழனத் தேசியத் தலைமையை அபகரித்து முன்னெடுத்த பிற்போக்கு யுத்த முன்னெடுப்பு எவ்வகையிலும் அமிரிலிருந்து வேறுப்பட்டதில்லை என்பதை கைலாசபதி காணத் தவறியிருக்க மாட்டார்(சிவத்தம்பியால் காணவியலாமல் போனதற்கான காரணம் உலகமறிந்த ரகசியம்). துப்பாக்கி எந்தாத பிரபாகரனாக இருந்த அமிரின் சர்வதிகாரப் பாசிசப் போக்குகள் பற்றி அவர் தனது பத்தி எழுத்தில் பதிவு செய்துள்ளார். காந்திவாத ஜனநாயக வேடம் ப10ண்ட முன்னோடித் தலைவரை பாசிசவாதியாக இனங் கண்டவருக்கு நேச சக்திகளாக தமிழ்த் தேசியம் அரவணைத்திருக்க வேண்டிய இடதுசாரிகளைக்கொன்றொழித்த இராணுவத் தலைவரின் வெளிப்படையான பாசிச நிலைப்பாட்டை இனங்கண்டிருக்க இயலாதா?
கைலாசபதியும் சிவத்தம்பியும் ஐம்பதுகளின் நடுக் கூறிலிருந்து எழுச்சி பெற்ற முற்போக்கு இயக்கத்தின் வெளிபாடுகள்; அது வீறுடன் முன்னேறிச் காதனைகள் பல நிகழ்த்த ஏற்ற சிந்தனைக் கரூவ10லங்களை வழங்கியவர்கள். புதிய தளவிரிவாக்கங்களைச் சாத்தியமாக்கியவர்கள். அதன் காரணமாகவே கைலாசபதி தொடர்ந்து இருந்திருப்பின் கா.சி;. போல மாற்றச் சிந்தனைக்கு ஆட்பட்டிருப்பார் எனப் பலரும் கருத இடமேற்படுகிறது. இருவரும் மார்க்சியச் செல்நெறியில் ஒரே திசைவழியில் பயனிப்பைத் தொடங்கிய போதிலும் ஒரு தசாப்த்தத்தில் பிளவொன்றைக் கண்டவர்கள். இருவருமே மார்க்சியப் பார்வையைத் தொடர்வதாக வெளிப்பார்வைக்குப்பட்ட போதிலும், இருவேறு கருத்தியல் நிலைப்பாடுகளுடனேயே வளர்ந்தவர்கள்.
இந்தப் பிளவுக்கு அடிப்படையாக அமைந்தது பாட்டாளிவர்க்க இயக்கச் செல்நெறியானது சேவியத்- சீன முகாம்களாகப் பிளவுப்பட்டதில் அடங்கியுள்ளது. சோவியத் கம்ய10னிஸ்ட் கட்சி முதாளித்துவத்துடன் சமாதான சகவாழ்வு பற்றிப் பேசி வலது விலகலைத்தொடங்கிய போது சீனத்தரப்பில் மார்க்சியத்தைப் பாதுகாக்கும முனைப்பு ஆரம்பத்தில் வெளிப்பட்டது. காலப்போக்கில் சீனத்தரப்பில் வன்முறை வழிப்பாட்டுக்கு ஆட்படுவது உள்ளிட்ட இடதுவிலகல் ஏற்படுவதைத் தவிர்க்கவியவில்லை. கலாசாரப் புரட்சி அவ்வகையில் வளர்ந்த போது அது சீன கம்ய10னிஸ்ட் கட்சியால் இடைநிறுத்தப்பட்டதை அறிவோம். இத்தகைய மாற்றச் செல்நெறிக்கு பிறகு 1981 இல் சீன பயணம் சென்று திரும்பிய க.கை. சீனாவில் அறுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் முனைப்படைந்த அதிதீவிர இடதுவிலகலில் இருந்து மீள்வதற்காக முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கைகள் குறித்து எழுதியிருந்தார்(அதன் போது வலது சாய்வுக்கான வாய்ப்புகள் பற்றிய எச்சரிக்கையும் விடுத்திருந்தார்).
இது போன்ற எந்தத் தேடலும் தெளிவும் கா.சி. அவர்களுக்குத் தான் பின்தொடர்ந்த சோவியத் ய10னியன் பற்றி இருந்ததில்லை. தனது விமர்சனங்கள் அனைத்தையும் இலங்கை மற்றும் தமிழியல் தளம் சார்ந்து மட்டுமே மேற்கொண்டார். இலஙகையில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்கத்தில்(1970-1977) இணைந்திருந்த சோவியத் சார்பு கம்ய10னிஸ்ட் கட்சியோடு ஒட்டியிருந்தவர் கா.சி.; அக்காலத்தில் இனமுரணை தீர்க்க இருந்த வாய்ப்புகளைத் கைவிட்டதோடு மோசமான சிங்களப் பேரினவாதத் தவறுகளை அந்தக் கூட்டரசாங்கம் மேற்கொண்டது. அந்த ஆட்சிக்காலத்தில் அதுதொடர்பில் எந்த விமர்சனங்களுமின்றி கட்சியோடு இழுப்பட்டபின்னர், படுதோல்வியடைந்து நிராயுதபாணியாகிவிட்ட நிலையில் யாழ்பாண மேலாதிக்க ஆளும் சாதித் தேசிய பண்புடையதான ஈழத்தமிழ்த் தேசியத்திடம் சரணடைந்தார் கா.சி.; மட்டுமன்றிப் பாமன்னிப்புக்கோரி, இடதுசாரிகள் தவறு செய்து விட்டார்கள் – முற்போக்கு இயக்கம் பிழைகள் செய்துவிட்டது எனத்தடம் புரண்டார்.
இதன் தொடர்ச்சியாக பின்நவீனத்துவம் சார்ந்த சலனங்களுக்கு ஆ;பட்டார்; மார்க்சிய நிலைப்பட்டு காதியத் தகர்ப்பு, பௌண்விடுதலை. தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எனும் போராட்டங்களைக் காண இயலாதவரானார்; பிளவு படாத விடுதலை அங்கங்களாய் இவற்றைக் கருதி, இவற்றுக்காகப் போராடு;ம் சக்திகளை ஐக்கியப்படுத்தும் குறிகோளுடன் ஆதரிப்பதாய் இருக்க வேணடிய நிலைப்பாட்டிலிருந்து விலகினார்; உலகமயமாதல் மற்றும் பின்நவீனத்துவ நிலைநின்று போராடும் மக்கள் சக்கியைப் பிளவுப்படுத்தும் வகையில் காதியவாதம்(தலித்தியம்), பெண்ணியவாதம், இனத்தேசியவாதம் என்பவை ஒன்றையொன்று எதிர்க்கும் தளத்தில் இருக்கும் வகையில் அவையொவ்வொன்றையும் ஆதரித்தார். மார்க்சியத்திலிருந்து முற்றிலும் விலகிய இத்தகைய ஒருமுனைவாத முனைப்புடைய கருத்தியலையே இறுதிக் காலத்தில் சிவத்தம்பி கொண்டிருந்தார்; முன்னாள் மார்க்சிய கருத்தியலின் அனைத்துப் பண்புகளையும் சீர்து}க்கி ஆய்ந்து முடிவுகாணும் பண்பின் சில சாயல்கள் மட்டும் அவ்வப் போது அவரது ஆளுமையை வெளிப்படத்தியது-பாதுகாத்தது.
இத்தகைய சலனங்களுக்கு க.கை. ஆட்பட அவசியமில்லாத அரசியல் செல்நெறியுடையதாக அவர் பின்பற்றிய அரசியல் அணி அமைந்திருந்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் சாதிவெறியர்களதும் அரசியந்திரத்தினதும் ஆயுத ஒடுக்கு முறைக்கு உள்ளான போது, வன்முறை வழிபபாட்டுக்கு எவ்வகையிலும் இடமளிக்காமல், அதேவேளை கட்சி முடிவு அடிப்படையில் அவசியமான ஆயுத வழிபட்ட பதிலடியை வழங்கிய சீன சார்பு கம்ய10னிட் கட்சியை க.கை. ஆதரித்து பின்பற்றினார். அந்தக் கட்சி கூட்டரசாங்கத்தில் தவறுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடாத்தியது; சுயநிர்ணயம் பற்றிய தேடலை இனமுரண்கூர்மையடைந்த போது தாமதமின்றி முன்வைத்தது. அந்தவகையில் எழுபதுகளில் முனைப்படைந்து வந்த வலதுசாரி பிற்போக்கு பாசிசஈழத் தமிழ் இனத்தேசியம் இழைத்த தவறுகளை அம்பலப்படுத்தியவாறே அதனை முறியடித்தவாறு என்பதுகளின் தொடக்கத்தில் எழுச்சியுற்று வந்த இடதுசாரி ஈழத்தமிழினத் தேசியத்தை வரவேற்க க.கை. யினால் இயலுமாயி;ற்று; பின்னர் ஏன் பாவமன்னிப்புக் கோரும் அவசியம் கைலாசபதிக்கு ஏற்படப் போகிறது?
இவ்வாறு ஒப்பீட்டுக்கு உள்ளாக்குவது சில தவறான முடிவுகளுடனான எதிர்வுக் கூறல்களை நிராகரிப்பதற்கேயன்றி, எமக்கான பாதையை வகுத்து வழங்கிய இருபெரும் பேராசிரியர்களில் ஒருவரை வழிப்பாட்டுக்குள்ளாக்கி, அதை வலுப்புடுத்தவதற்காக மற்றவரைக் குறைமதிப்பீடு செய்வதற்காக அல்ல. பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது ஐம்பது வருட செயற்பாட்டில் முன்பாதியில் மார்க்சிய நிலைப்பாட்டில் மகத்தான பங்களிப்புகளை நல்கியுள்ளார்; பின் பாதியில் மார்க்சியத்தில் இருந்து விலகிய போதிலும் தலை சிறந்த தமிழ் அறிஞராக பங்களிப்ப நல்குவதற்கு ஏற்றதாக முந்திய மார்க்சிய அறிவு உதவியவகையில் காத்திமான தமிழியலாளராக கா.சி.இனால் திகழ முடிந்தது. அந்த வகையில் மார்க்சிய விலகல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கற்பதற்காக களமாக இந்த ஒப்பீடு அமைய இயலுமேயன்றி கா.சி.யைக் கொச்சைப்படுத்த அவசியமில்லை- முடியக் கூடியதுமல்ல.
அதேபோலவே, கைலாசபதி வழிபாடும் எவ்வகையிலும் அவசியமற்றதாகும் இரட்டை தேசியம் பற்றிப் புதிதாக பேச முனையும் போது கைலாசுடன் போட்டால் தான் அது நின்ற பிடிக்கும் என்பதோ, எமது சிந்தனை வெளிப்பாடுகள் அவர் பெயரைப் பராயணம் பண்ணித்தான் கவன ஈர்ப்பும் பெறவியலும் என்பதோ இல்லை. மார்க்சியச் சிந்தனை இத்தகைய பலவீனங்களுக்குரியதல்ல. மாறும் சமூக வளர்ச்சிப் போக்கில் புதிய தள விரிவாக்கத்துக்கு இடமளித்து மாற்றங்களை உள்வாங்கியவாறு புத்தாக்கம் பெறும் சிந்தனை முறையே மார்க்சியம் என்கிறவகையில் இரட்டைத் தேசியக் கோட்பாடு தன்னளவிலேயே தாக்கம்பெறும். ஆதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்யாத போதிலும் அதற்கான அடியெடுத்துக் கொடுக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை உடையவராக கைலாசபதி இருந்தார் என்பது ஒரு அவசியமான பதிவு.
ஆக, தேசிய இனப் பிரச்சனையை இனவாத யுத்தமாயும், காதியப் பிரச்சனையை தலித்வாதமாக்கி நட்பு நிலையில் ஐக்கியப்பட வேண்டிய அடிநிலைச் சாதிகளிடையே மோதலை ஏற்படுத்தியும் உலகமயமாதல் சூழலுக்குரிய பின்நவீனத்துவம் அடையாள அரசியலை முன்னிறுத்திய போக்கு தோல்வியுற்று, அவை எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்ற அனுபவங்களுடாக இன்றைய வரலாறு கடந்துக் கொண்டிருக்கிறது. வர்க்கப் பார்வையில் பிரச்சனைகளை அணுகும் மார்க்சிய அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இயங்காற்றலே தீர்வுகளை எட்ட உதவும் என்பதை கைலாசபதியின் வாழ்வும் பிந்திய வரலாறும் எடுத்துக்காட்டாகியுள்ளது. இருபதாம் ஆண்டுகளிலிருந்து தொடக்கம் பெற்ற சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை தேறறம் பெற்ற நாற்பதாம் ஆண்டிலிருந்து இலங்கை கம்ய10னிஸ்ட் கட்சி முன்னெடுத்து வந்தது; அதன் உச்ச வடிவமாக அறுபதுகளில் எழுச்சியுற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்துடன் தனது நடைமுறையையும் சிந்தனையையும் இணைததுக் கொண்ட கைலாஸ் தனது சமூக இயங்காற்றலைத் தொடங்கிய காலததிலிருந்து இலங்கை கம்ய10னிஸ்ட் கட்சியுடன் உறவுக் கொண்டு, புதிய சிந்தனை வீச்சுகளை வெளிப்பட இயலுமானவரானார்.
வரலாறு வர்க்கங்களுக்கிடையேயான மோதல்களினதும் மாற்றங்களினதும் செல்நெறி மட்டுமல்ல, முன்னேறிய இனமரபுக் குழு ஆளும் சாதித்தேசமாக சமூக பண்பாட்டு ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளராகி ஏனைய இன மரபுக்குழுக்களை இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதித்தேசங்களாக மாற்றி அவற்றிடையே நடந்து வந்த போராட்டங்கள் – மாற்றங்கள் வாயிலாகவும் இயங்கிவந்துள்ளது. முன்னதான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த ஐரோப்பிய சமூகத்தில் கூர்மையான அரசியல் புரட்சிகள் சமூக மாற்ற
வடிவமாக இருந்த போது, பின்னதாய்க் கவனம் பெறும் சாதிச் சமூகத்தில் பண்பாட்டுப் பரட்சியே சமூகமாற்ற வடிவமாக அமைந்துள்ளது. இலங்கைச் சமூகம் காதியத்தகர்ப்புப் போராட்டத்தை மார்க்சிய வழிகாட்டலில் முன்னெடுத்த வரலாற்றுச் செல்நெறியின் சிந்தனை வெளிப்பாடாக முகிழ்ந்த கைலாஸ், பக்திபேரியக்கத்தை சமூக அமைப்பு மாற்றத்துக்குரிய இயக்கு சக்தி எனக் காட்டியதன் வாயிலாக இதற்கான அடியெடுத்துக் கொடுத்தார். இவ்வகையில் மார்க்சியத்தின் எமக்கான பிரயோகத்தை இலங்கை மார்க்சியர்கள் தலைமையேற்று நடாத்திய போராட்டங்களை முன்னிறுத்தி தமிழியல் வெளிப்படுத்திய கைலாசபதி, இரட்டை தேசியம்- பண்பாடுப் புரட்சி வடிவங்கள் பற்றிய புதிய பரிமாணங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தார் என்பது அழுத்தி உரைக்க வேண்டிய அம்சமாகும். மிக சுருக்கமா நூலொன்றில் இவற்றைத் தொட்டுக்காட்டி விரிவான ஆய்வுத் தளங்களுக்கு லெனின் மதிவானம் “ பேரரிரியர் கைலாசபதி: சமூக மற்றத்துக்கான இயங்காற்றல்” எனும் இந்நூல் வாயிலாக அடிகோலியுள்ளார்.
(முற்போக்கு கலை இலக்கிய மன்றம் 9.10.2011 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்த “ பேராசிரியர் கைலாசபதி: சமூகமாறறத்திற்கான இயங்காற்றல்” நூல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்துருவாக்கம்)

Saturday, December 11, 2010

பேராசிரியர் கைலாசபதியும் இலக்கிய அமைப்புகளும் : லெனின் மதிவானம்


1950 களுக்கு பி;ன்னர் தான் இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இக்கால சூழலில் ஆசியா – ஐரோப்பா மற்றும் உலகலாவிய ரீதியிலே தொழிலாளர் வர்க்கம் சார்ந்த உணர்வுகளும் போராட்டங்களும் வலிமை பெறத் தொடங்கின. பாஸிசத்திற்கு எதிராக பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றிருந்தன.

1930 களில் ஸ்பானியர்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக போராடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாகி ஆயிரக் கணக்கான மக்கள் சமத்துவமான சமூதாய அமைப்பை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பின்னனியில் ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் பல விடுலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறே ஆசியாவிலும் குறிப்பாக சீனா இந்தோNசியா முதலிய நாடுகளில் ஜப்பானிய பாஸியத்தை எதிர்த்து வீறு கொண்ட போராட்டங்கள் தோன்றி மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் பாஸிச வெறியாளர்களாரல் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள். தன் மரண வாயிலில் நின்றுக் கொண்டும் மனித குலத்தின் நாகரிகத்தை நம்பிக்கையுடன் மட்டுமல்ல கூடவே கர்வத்துடனும் தன் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்த ஜீலியஸ் பூசிக்கின் பின்வரும் வாசகம் இக்காலத்தே எழுந்த மக்கள் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வுகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது.

இன்பத்திற்காகவே பிறந்தோம். இன்பத்திற்காகவே வாழ்நகிறாம். இன்பத்திற்காகவே போராடினோம். அதற்காகவே சாகின்றோம். துன்பத்தின் சாயலானது இறுதி வரை எம்மை அணுகாதிருக்கட்டும் இவ்வகையான இலட்சிய பீடிப்பும் இலக்கிய தாகமும் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் தோன்றிக் கொண்டிருந்தாரகள். இதன் பிரதிபலிப்பை நாம் இலங்கை தமிழ் இலக்கிய செல்நெறியிலும் காணக் கூடியதாக உள்ளன.

இக்காலப்பகுதியில் இலங்கை அரசியல் வரலாற்றினை பொறுத்தமட்டில் நாற்பதுகளின் இறுதியிலும் 50 களிலும் பொதுவுடமை இயக்கமானது வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 1953 இல் சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவ்வியக்கம் ஏற்படுத்திய கலாசார பண்பாட்டுத் சூழலில் தோற்றம் பெற்றதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளையும் கொள்கைகளையும் முன்னெடுப்பதில் இவ்வணியினருக்கு முக்கிய பங்குண்டு. இதன் பின்னணியிலே மக்கள் சார்பான இலக்கியங்களும் இலக்கிய கோட்பாடுகளும் தொற்றம் பெறலாயின.

1950 களுக்கு பின்னர் இலங்கை இலக்கியத்தில் புதியதோர் பரிமாணத்தை தரிசிக்க கூடியதாக அமைந்திருந்தது. இலங்கையில் தேசிய இலக்கியம் எனும் குரல் எழுந்தது. தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக இலங்கை மண்ணுக்கே உரித்தான பிரச்சனைகள் இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. இது குறித்து கைலாசபதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

ஷஷதேசியப் பின்னணியில் வளரும் சமுதாயத்தின் போக்கை அனுசரித்து வாழ்க்கைக்கு கலைவடிவம் கொடுக்கவும் சரித்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கவும் திறமையிருந்தால் சிறந்த – உலக இலக்கியத்தில் இடம்பெறத்தக்க உயர்ந்த சிறுகதைகளைப் படைக்க எமது எழுத்தாளாரால் முடியும் என்றே நம்புகிறேன். பொழுதுபோக்கிற்காக எழுதுவதா அல்லது பொது நலத்திற்காக எழுதுவதா என்னும் முக்கியமான கேள்வி இன்றைய எழுத்தாளர் பலரையும் எதிர்நோக்கி நிற்கிறது. இது புதிய கேள்வியன்று.

வௌவேறு வடிவத்திலும் உருவத்திலும் இலககிய சிருஷ்டி கர்த்தாக்களை விழித்துப் பார்த்த கேள்விதான். ஆனால் இன்று மிக நெருக்கடியான நிலையிலே இக்கேள்வி எழுத்தாளரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியத்தையுணர்ந்து நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலையெய்தவும் மூட்டும் அன்புக் கனலோடு எழுத முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்திருக்கிறது எதிர்கால இலக்கிய வாழ்வும் தாழ்வும்’

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதாகும்,. ஒரு நாட்டின் பூலோக பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலிய அம்சங்கள் சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. அவ்வகையில் பிரதேசம், மண்வாசனை என்ற அடிப்படையில் எழுகின்ற இலக்கியங்களை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பாரக்கின்ற போது குறுகியவாதகமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னனியில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தம் சாதனங்களாகவும் அவை அமைத்துக் காணப்படுகின்ன. மறுப்புறமாக அவை தேசிய எல்லைகளை கடந்து சென்று சர்வதேச இலக்கியமாகவும் திகழ்கின்றன.

இவ்வாறுதான் ரசிய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த மாக்ஸிம் கோக்கியும் , இந்திய தேசியவிடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பாரதியும் இன்னும் இத்தகையோரும் எமக்கும் அரசியல் இலக்கிய முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

இ.மு.எ.ச நிறுவப்பட்ட காலத்தில் கைலாசபதி; பேராதனை பல்கலைகழக மாணவராக இருந்தார். அவர் இத்தகைய இயக்கத்தின் தோற்றத்தை உள்ளுற வரவேற்றதுடன் காலப்போக்கில் அதனால் கவரப்பட்டு அதன் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். அத்துடன் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானதுடன் இ.மு.எ.ச வின் யாப்பு, கொள்ளை வகுத்தல் முதலிய செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுப்பட்டார். 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இ.மு.எ.ச வின் முதலாவது பேராளர் மாநாட்டில் பிறநாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்குபற்றினர். இம்மநாட்டில் உலக புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் உரையை மொழிப்பெயர்த்தவர் கைலாசபதி.

01. இம்மநாட்டில் மக்கள் கலை இலக்கிய கோட்பாடு குறித்த விவாதங்கள் தோன்றியுள்ளன. யாதார்த்தவாதம் ,சோசலிச யதார்த்த வாதம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றபோது அத்தகைய அனுபங்களையும் உள்வாங்கி நமது சூழலுக்கான இலக்கிய கோட்பாட்டை உருவாக்கியதில் இ.மு.எ.ச முக்கியபங்குண்டு. ‘கியூபாவின் ஜூலை 26 இயக்கமும், நிகாரகுவில் சான்டினிஸ்டா முன்னணியும் தங்களது போராட்டங்களில் வெல்ல முடிந்ததற்கு ஏற்கனவே இருந்த தேசிய விடுதலைப்போராட்ட மரபை அவை முன்னெடுத்து சென்றது ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாரோ கூறியது போல, அவர்கள் தங்களது புரட்சிகளை ஸ்பானிய மொழியில் நடாத்தினர்: ரசிய மொழியில் அல்ல. மார்ட்டியும், சான்டினோவும் அவர்களது ஆன்மீக முன்னோடிகள். சமீபத்திய வெனிசுலா புரட்சியிலும் இது நடந்துள்ளது. தலைவர் ஹியூகோ சாவேசுக்கு சைமன் பொலிவார், சைமன் ரோட்ரிக்;ஸ் ( பொலிவாரின் ஆசிரியர்) மற்றும் எஸ்குயேல் ஜமாரா ஆகியோரின் சிந்தனைகளுக்கு எப்படி புததுயிர் அளிப்பது என்பது தெரிந்திருந்தது’( மார்த்தா ஹர்னேக்கர், தமிழில்: அகோகன் முத்துசாமி, (2010), இடதுசாரிகளும் புதிய உலகமும், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.75)

இவ்வகையில் சோசலிச யதார்த்தவாதம் குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அது அன்றைய சூழலில் இலங்கைக்கு பொருத்தமற்றதொன்றாகவே காணப்பட்டது.; பண்பாட்டுத்துறையில் சமூகமாற்ற்ததிற்கான போராட்ட வடிவமானது மண்வாசனை இலக்கியம் அமைந்திருப்பதனையும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியாகவே தேசிய இலக்கியம் அமைந்திருப்பதனையும் வரலாற்று அடிப்படையிலும் சமூதாய நோக்கிலும் உணர்ந்து செயற்பட்டமையே இ.மு.எ.ச.த்தின் முக்கியமான சாதனையாகும். அவ்வியக்கத்தில் இத்தகைய கோட்பாடுகளை உருவாக்குவதில முன்னணியி; செயற்பட்டவர் கைலாசபதி; என்பதை ஆய்வாரள்கள் சுட்டிக் காட்டுவர்.

அத்துடன் இ.மு.எ.ச.த்தின் பணிகளை தமது மாணவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் சென்றதுடன் அவர்களை இவ்வியக்கத்தில் சேர்ப்பதிலும் முக்கிய கவனமெடுத்துள்ளதையும் அறிய முடிகின்றது.

இவ்வகையில் செயற்பட்டுவந்த இ.மு.எ.ச மானது 1960 களின் ஆரம்பத்திலேயே அது சித்தாந்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் சிதைய தொடங்கியது என்பதனையும் கவனத்திலெடுக்க வேண்டும். இலங்கையின் பொதுவுடமை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளும் பொதுவுடமை இயக்கத்தை பிளவுக்குள்ளாக்கியது. இ.மு.எ.ச. பல தேசிய ஜனநாயக சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்த போதினும் அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பலர் இடதுசாரி கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.மேற்படி பிளவும் அணி பிரிதலும் இ.மு.போ.எ.ச.த்தையும் பாதித்தது. அதன் தலைமை பொறுப்பினை ஏற்றிருந்தவர்களின் போக்கு இவர்களை சித்தாந்;த ரீதியாக சிதைத்து பின் இயக்க ரீதியான சிதைவுக்கு வழிவகுத்தது.

மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனிப் போராட்டத்தில் இவ்வியக்கத்தின் பலம் பலவீனம் குறித்து ஆழமான ஆய்வொன்றினை காய்த்தல் உவத்ததலின்றி செய்தல்; காலத்தில் தேவையாகும்.

இ. மு. போ. எ. ச வீறுக்கொண்டெழுந்த காலத்திலும், பின்னர் அதன் தளர்வுற்றக் காலத்திலும் இவ்வியக்க செயற்பாடுகளில் கைலாசபதி பங்கெடுத்தார். தன்னால் முடிந்த மட்டும் அதனை முற்போக்கான திசையில் வைத்திருப்பதற்கே அவர பெரும் முயற்சியெடுத்திருந்தார்.

இத்தகைய இ.மு.எ.ச.த்தின் சிதைவுக்கு பின்னர் அன்றைய காலத்தின் தேவையை அடியொட்டி உருவாக்கபட்டதே தேசிய கலை இலக்கிய பேரவையாகும். அதன் வெளியீடாக தாயகம் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. கைலாசபதி தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதுடன் தாயகம் சஞ்சிகைக்கும் கட்ரைகள் எழுதினார். ‘பாரதி பன்முக ஆய்வு’ என்ற தொணிப்பொருளில் நடைப்பெற்ற இலக்கிய அமர்வுகளில் அவரது கட்டுரைக்கும் மற்றும் இறுதி அமர்வையும் (சுகயீன முற்றிருந்ததால்) தவிர ஏனைய சகல அமர்வுகளுக்கும் அவரே தலைமையேற்று நாடாத்தியதுடன் கட்டுரைகளை நெறிப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வந்துள்ளதை அறிய முடிகின்றது. இவ்வமைப்பின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார் என்பதற்காக அதில் அங்கம் வகித்திருந்தார் என வலிந்துக் கூறுகின்ற அபத்தமாகும். பின்னாட்களில் இவ்வமைப்பில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் அவற்றினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களும் அதி தீவிரவாத சிந்தனைகள் யாவும் இவ்மைப்பு தனது பாதையிலிருந்து தடம் புரண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் இ.மு.எ.ச. எப்படி இயங்கியதோ அதே பாணியில் தான் இன்று இவ்வமைப்பு இயங்கிக் கொண்டிருபபதை காணலாம். வருடந்தோறும் கைலாசபதிககு விழா எடுத்துக் கொண்டே கைலாசபதியின் அடிப்படைகளிலிருந்து விலகியுள்ளமையும் சகல தேசிய ஜனநாயக சக்திகளின் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளை மேற்கொள்ளவதாலும் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்போக்கானது உழகை;கும் மக்கள் குறித்த எவ்வித கரிசனையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட அதித புத்திஜீகளின் சுயரூபத்தைக் காட்டி நிற்கின்றது.

அவ்வாறே கைலாசபதி மலையக கலை இலக்கிய பேரவையுடனும் தொடர்புக் கொண்டிருந்தார். அதன் செயலாளரான அந்நனி ஜீவாவை நெறிப்படுத்தியதுடன் அவ்வமைப்பின் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.

ஒருவருடைய முயற்சிகள் போராட்டங்கள், எப்படியிருந்தாலும் அவர் பற்றிய மதீப்பீடுகளை செய்ய நோக்கங்களை மட்டும் பார்க்க கூடாது. அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளையும் நோக்க வேண்டும். இந்த வகையில் கைலாசபதியை பொறுத்தமட்டில் இலக்கிய அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பானது ஒரு நாகரிகமானதொரு சமூதாயத்திற்காகவும், புதியதோர் தென்றலுக்காகவும், தமது செயற்பாடுகளை, ஆக்க இலக்கிய முயற்சிகளினூடாக முன்னெடுத்து வருவதாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாம் உறவுக் கொண்டிருந்த இலக்கிய அமைப்புகளினூடாக முற்போக்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.

உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.

இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார்.

இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. ‘பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே’ என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.

இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. ஆதனை மார்க்சிய முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்