Saturday, December 11, 2010

பேராசிரியர் கைலாசபதியும் இலக்கிய அமைப்புகளும் : லெனின் மதிவானம்


1950 களுக்கு பி;ன்னர் தான் இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இக்கால சூழலில் ஆசியா – ஐரோப்பா மற்றும் உலகலாவிய ரீதியிலே தொழிலாளர் வர்க்கம் சார்ந்த உணர்வுகளும் போராட்டங்களும் வலிமை பெறத் தொடங்கின. பாஸிசத்திற்கு எதிராக பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றிருந்தன.

1930 களில் ஸ்பானியர்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக போராடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாகி ஆயிரக் கணக்கான மக்கள் சமத்துவமான சமூதாய அமைப்பை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பின்னனியில் ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் பல விடுலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறே ஆசியாவிலும் குறிப்பாக சீனா இந்தோNசியா முதலிய நாடுகளில் ஜப்பானிய பாஸியத்தை எதிர்த்து வீறு கொண்ட போராட்டங்கள் தோன்றி மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் பாஸிச வெறியாளர்களாரல் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள். தன் மரண வாயிலில் நின்றுக் கொண்டும் மனித குலத்தின் நாகரிகத்தை நம்பிக்கையுடன் மட்டுமல்ல கூடவே கர்வத்துடனும் தன் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்த ஜீலியஸ் பூசிக்கின் பின்வரும் வாசகம் இக்காலத்தே எழுந்த மக்கள் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வுகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது.

இன்பத்திற்காகவே பிறந்தோம். இன்பத்திற்காகவே வாழ்நகிறாம். இன்பத்திற்காகவே போராடினோம். அதற்காகவே சாகின்றோம். துன்பத்தின் சாயலானது இறுதி வரை எம்மை அணுகாதிருக்கட்டும் இவ்வகையான இலட்சிய பீடிப்பும் இலக்கிய தாகமும் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் தோன்றிக் கொண்டிருந்தாரகள். இதன் பிரதிபலிப்பை நாம் இலங்கை தமிழ் இலக்கிய செல்நெறியிலும் காணக் கூடியதாக உள்ளன.

இக்காலப்பகுதியில் இலங்கை அரசியல் வரலாற்றினை பொறுத்தமட்டில் நாற்பதுகளின் இறுதியிலும் 50 களிலும் பொதுவுடமை இயக்கமானது வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 1953 இல் சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவ்வியக்கம் ஏற்படுத்திய கலாசார பண்பாட்டுத் சூழலில் தோற்றம் பெற்றதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளையும் கொள்கைகளையும் முன்னெடுப்பதில் இவ்வணியினருக்கு முக்கிய பங்குண்டு. இதன் பின்னணியிலே மக்கள் சார்பான இலக்கியங்களும் இலக்கிய கோட்பாடுகளும் தொற்றம் பெறலாயின.

1950 களுக்கு பின்னர் இலங்கை இலக்கியத்தில் புதியதோர் பரிமாணத்தை தரிசிக்க கூடியதாக அமைந்திருந்தது. இலங்கையில் தேசிய இலக்கியம் எனும் குரல் எழுந்தது. தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக இலங்கை மண்ணுக்கே உரித்தான பிரச்சனைகள் இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. இது குறித்து கைலாசபதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

ஷஷதேசியப் பின்னணியில் வளரும் சமுதாயத்தின் போக்கை அனுசரித்து வாழ்க்கைக்கு கலைவடிவம் கொடுக்கவும் சரித்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கவும் திறமையிருந்தால் சிறந்த – உலக இலக்கியத்தில் இடம்பெறத்தக்க உயர்ந்த சிறுகதைகளைப் படைக்க எமது எழுத்தாளாரால் முடியும் என்றே நம்புகிறேன். பொழுதுபோக்கிற்காக எழுதுவதா அல்லது பொது நலத்திற்காக எழுதுவதா என்னும் முக்கியமான கேள்வி இன்றைய எழுத்தாளர் பலரையும் எதிர்நோக்கி நிற்கிறது. இது புதிய கேள்வியன்று.

வௌவேறு வடிவத்திலும் உருவத்திலும் இலககிய சிருஷ்டி கர்த்தாக்களை விழித்துப் பார்த்த கேள்விதான். ஆனால் இன்று மிக நெருக்கடியான நிலையிலே இக்கேள்வி எழுத்தாளரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியத்தையுணர்ந்து நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலையெய்தவும் மூட்டும் அன்புக் கனலோடு எழுத முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்திருக்கிறது எதிர்கால இலக்கிய வாழ்வும் தாழ்வும்’

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதாகும்,. ஒரு நாட்டின் பூலோக பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலிய அம்சங்கள் சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. அவ்வகையில் பிரதேசம், மண்வாசனை என்ற அடிப்படையில் எழுகின்ற இலக்கியங்களை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பாரக்கின்ற போது குறுகியவாதகமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னனியில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தம் சாதனங்களாகவும் அவை அமைத்துக் காணப்படுகின்ன. மறுப்புறமாக அவை தேசிய எல்லைகளை கடந்து சென்று சர்வதேச இலக்கியமாகவும் திகழ்கின்றன.

இவ்வாறுதான் ரசிய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த மாக்ஸிம் கோக்கியும் , இந்திய தேசியவிடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பாரதியும் இன்னும் இத்தகையோரும் எமக்கும் அரசியல் இலக்கிய முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

இ.மு.எ.ச நிறுவப்பட்ட காலத்தில் கைலாசபதி; பேராதனை பல்கலைகழக மாணவராக இருந்தார். அவர் இத்தகைய இயக்கத்தின் தோற்றத்தை உள்ளுற வரவேற்றதுடன் காலப்போக்கில் அதனால் கவரப்பட்டு அதன் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். அத்துடன் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானதுடன் இ.மு.எ.ச வின் யாப்பு, கொள்ளை வகுத்தல் முதலிய செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுப்பட்டார். 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இ.மு.எ.ச வின் முதலாவது பேராளர் மாநாட்டில் பிறநாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்குபற்றினர். இம்மநாட்டில் உலக புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் உரையை மொழிப்பெயர்த்தவர் கைலாசபதி.

01. இம்மநாட்டில் மக்கள் கலை இலக்கிய கோட்பாடு குறித்த விவாதங்கள் தோன்றியுள்ளன. யாதார்த்தவாதம் ,சோசலிச யதார்த்த வாதம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றபோது அத்தகைய அனுபங்களையும் உள்வாங்கி நமது சூழலுக்கான இலக்கிய கோட்பாட்டை உருவாக்கியதில் இ.மு.எ.ச முக்கியபங்குண்டு. ‘கியூபாவின் ஜூலை 26 இயக்கமும், நிகாரகுவில் சான்டினிஸ்டா முன்னணியும் தங்களது போராட்டங்களில் வெல்ல முடிந்ததற்கு ஏற்கனவே இருந்த தேசிய விடுதலைப்போராட்ட மரபை அவை முன்னெடுத்து சென்றது ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாரோ கூறியது போல, அவர்கள் தங்களது புரட்சிகளை ஸ்பானிய மொழியில் நடாத்தினர்: ரசிய மொழியில் அல்ல. மார்ட்டியும், சான்டினோவும் அவர்களது ஆன்மீக முன்னோடிகள். சமீபத்திய வெனிசுலா புரட்சியிலும் இது நடந்துள்ளது. தலைவர் ஹியூகோ சாவேசுக்கு சைமன் பொலிவார், சைமன் ரோட்ரிக்;ஸ் ( பொலிவாரின் ஆசிரியர்) மற்றும் எஸ்குயேல் ஜமாரா ஆகியோரின் சிந்தனைகளுக்கு எப்படி புததுயிர் அளிப்பது என்பது தெரிந்திருந்தது’( மார்த்தா ஹர்னேக்கர், தமிழில்: அகோகன் முத்துசாமி, (2010), இடதுசாரிகளும் புதிய உலகமும், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.75)

இவ்வகையில் சோசலிச யதார்த்தவாதம் குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அது அன்றைய சூழலில் இலங்கைக்கு பொருத்தமற்றதொன்றாகவே காணப்பட்டது.; பண்பாட்டுத்துறையில் சமூகமாற்ற்ததிற்கான போராட்ட வடிவமானது மண்வாசனை இலக்கியம் அமைந்திருப்பதனையும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியாகவே தேசிய இலக்கியம் அமைந்திருப்பதனையும் வரலாற்று அடிப்படையிலும் சமூதாய நோக்கிலும் உணர்ந்து செயற்பட்டமையே இ.மு.எ.ச.த்தின் முக்கியமான சாதனையாகும். அவ்வியக்கத்தில் இத்தகைய கோட்பாடுகளை உருவாக்குவதில முன்னணியி; செயற்பட்டவர் கைலாசபதி; என்பதை ஆய்வாரள்கள் சுட்டிக் காட்டுவர்.

அத்துடன் இ.மு.எ.ச.த்தின் பணிகளை தமது மாணவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் சென்றதுடன் அவர்களை இவ்வியக்கத்தில் சேர்ப்பதிலும் முக்கிய கவனமெடுத்துள்ளதையும் அறிய முடிகின்றது.

இவ்வகையில் செயற்பட்டுவந்த இ.மு.எ.ச மானது 1960 களின் ஆரம்பத்திலேயே அது சித்தாந்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் சிதைய தொடங்கியது என்பதனையும் கவனத்திலெடுக்க வேண்டும். இலங்கையின் பொதுவுடமை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளும் பொதுவுடமை இயக்கத்தை பிளவுக்குள்ளாக்கியது. இ.மு.எ.ச. பல தேசிய ஜனநாயக சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்த போதினும் அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பலர் இடதுசாரி கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.மேற்படி பிளவும் அணி பிரிதலும் இ.மு.போ.எ.ச.த்தையும் பாதித்தது. அதன் தலைமை பொறுப்பினை ஏற்றிருந்தவர்களின் போக்கு இவர்களை சித்தாந்;த ரீதியாக சிதைத்து பின் இயக்க ரீதியான சிதைவுக்கு வழிவகுத்தது.

மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனிப் போராட்டத்தில் இவ்வியக்கத்தின் பலம் பலவீனம் குறித்து ஆழமான ஆய்வொன்றினை காய்த்தல் உவத்ததலின்றி செய்தல்; காலத்தில் தேவையாகும்.

இ. மு. போ. எ. ச வீறுக்கொண்டெழுந்த காலத்திலும், பின்னர் அதன் தளர்வுற்றக் காலத்திலும் இவ்வியக்க செயற்பாடுகளில் கைலாசபதி பங்கெடுத்தார். தன்னால் முடிந்த மட்டும் அதனை முற்போக்கான திசையில் வைத்திருப்பதற்கே அவர பெரும் முயற்சியெடுத்திருந்தார்.

இத்தகைய இ.மு.எ.ச.த்தின் சிதைவுக்கு பின்னர் அன்றைய காலத்தின் தேவையை அடியொட்டி உருவாக்கபட்டதே தேசிய கலை இலக்கிய பேரவையாகும். அதன் வெளியீடாக தாயகம் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. கைலாசபதி தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதுடன் தாயகம் சஞ்சிகைக்கும் கட்ரைகள் எழுதினார். ‘பாரதி பன்முக ஆய்வு’ என்ற தொணிப்பொருளில் நடைப்பெற்ற இலக்கிய அமர்வுகளில் அவரது கட்டுரைக்கும் மற்றும் இறுதி அமர்வையும் (சுகயீன முற்றிருந்ததால்) தவிர ஏனைய சகல அமர்வுகளுக்கும் அவரே தலைமையேற்று நாடாத்தியதுடன் கட்டுரைகளை நெறிப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வந்துள்ளதை அறிய முடிகின்றது. இவ்வமைப்பின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார் என்பதற்காக அதில் அங்கம் வகித்திருந்தார் என வலிந்துக் கூறுகின்ற அபத்தமாகும். பின்னாட்களில் இவ்வமைப்பில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் அவற்றினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களும் அதி தீவிரவாத சிந்தனைகள் யாவும் இவ்மைப்பு தனது பாதையிலிருந்து தடம் புரண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் இ.மு.எ.ச. எப்படி இயங்கியதோ அதே பாணியில் தான் இன்று இவ்வமைப்பு இயங்கிக் கொண்டிருபபதை காணலாம். வருடந்தோறும் கைலாசபதிககு விழா எடுத்துக் கொண்டே கைலாசபதியின் அடிப்படைகளிலிருந்து விலகியுள்ளமையும் சகல தேசிய ஜனநாயக சக்திகளின் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளை மேற்கொள்ளவதாலும் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்போக்கானது உழகை;கும் மக்கள் குறித்த எவ்வித கரிசனையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட அதித புத்திஜீகளின் சுயரூபத்தைக் காட்டி நிற்கின்றது.

அவ்வாறே கைலாசபதி மலையக கலை இலக்கிய பேரவையுடனும் தொடர்புக் கொண்டிருந்தார். அதன் செயலாளரான அந்நனி ஜீவாவை நெறிப்படுத்தியதுடன் அவ்வமைப்பின் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.

ஒருவருடைய முயற்சிகள் போராட்டங்கள், எப்படியிருந்தாலும் அவர் பற்றிய மதீப்பீடுகளை செய்ய நோக்கங்களை மட்டும் பார்க்க கூடாது. அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளையும் நோக்க வேண்டும். இந்த வகையில் கைலாசபதியை பொறுத்தமட்டில் இலக்கிய அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பானது ஒரு நாகரிகமானதொரு சமூதாயத்திற்காகவும், புதியதோர் தென்றலுக்காகவும், தமது செயற்பாடுகளை, ஆக்க இலக்கிய முயற்சிகளினூடாக முன்னெடுத்து வருவதாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாம் உறவுக் கொண்டிருந்த இலக்கிய அமைப்புகளினூடாக முற்போக்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.

உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.

இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார்.

இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. ‘பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே’ என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.

இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. ஆதனை மார்க்சிய முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்

Saturday, October 23, 2010

பண்டைய தமிழ் சமூகம் மற்றும் சரித்திரத்தின் பிரதானமான மறுசிந்தனைகளுக்கு கைலாசபதியே காரணம்.

பண்டைய தமிழ் சமூகம் மற்றும் சரித்திரத்தின் பிரதானமான மறுசிந்தனைகளுக்கு கைலாசபதியே காரணம்.

ஆக்கம்: கேசவன் வேலாயுதர்

kailasapathyகடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த முக்கிய திருப்பமாக சங்க இலக்கியங்கள் எனப் பிரசித்தி பெற்ற தமிழ் இலக்கியத் தொகுப்புகள் பலவும் மறக்கப் பட்ட நிலையிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் இதுவரை காலமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த தமிழ் இலக்கிய நெறிமுறைகள் யாவும் தலைகீழாக மாற்றம் பெற்றன. ஆயினும் தமிழ் நாட்டிலும் அத்தோடு இலங்கையிலும்(தற்போது ஸ்ரீலங்கா) ஓரளவுக்கு பழைய சைவ இலக்கியத் தொகுப்புகள் தொடர்ந்தும் பிரியத்துடன் போற்றப்பட்டு வந்தன. இது ஆரம்பகால தென்னிந்தியக் கலாச்சாரம் மற்றும் சரித்திரத்தை விளக்கும் புதியதோர் அத்தியாயத்தின் ஆரம்பத்தினை நிரூபித்தது. ஒரு உண்மையான புரட்சியாகத் தமிழ் மொழியினை ஏனைய செம்மொழிகளான சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுடன் சேர்த்துக் கொள்ளும் வழியமைந்தது.

இச்சிறப்பு வாய்ந்த செய்கையின் விளைவாக எப்படியாயினும் பண்டைய தென்னிந்தியாவின் வெட்கமற்ற சிறப்புகளின் ஒவ்வொரு ஆக்கக்கூறுகளையும் கொண்ட தேசிய எழுத்தாளர்களின் பாரம்பரிய அடையாளம் உருவாயிற்று. இந்நடைமுறையினால் சரித்திரத்தின் கடந்த காலம் நிகழ்காலத்தை விடச் சுருங்கியதுடன் சான்றுகள் யாவும் ஒரு தொல்லையாக ஒரு பொறுப்பாக ஆகின. எழுத்துக்களின் மாற்றம் அதன் சூழலுக்குத் தக்க வகையில் கேள்விப்படாத ஒன்றாயிற்று. ஓரு சரித்திர ஆசான் தீவிரமான ஆராய்ச்சியின் வெளித்தோற்றத்தை அல்லது இலக்கிய விமர்சனத்தை எழுதியிருந்தால் அது சில ஒப்புமையான இலக்கிய நயத்தைக் காட்டியிருக்கும். ஆனால் அவைகள் மிக அதிகமான காட்டிக் கொடுப்பனவாகவே உபசரிக்கப் பட்டதுடன், சரியான அறிவுசெறிந்த விமர்சனங்களையும் சந்திக்கத் தவறிவிட்டன.

ஒருவர் கனகசபாபதி கைலாசபதியின் பணிகளுக்கு காட்டவேண்டிய அளவுகடந்த பற்றுதலுக்கு சமீபமான பின்னணிக்கு இது முற்றிலும் எதிரானது. சங்க இலக்கியங்களின் கண்டுபிடித்தலுடன் கொண்டுவரப்பட்ட புரட்சியானது ஒருவகையான பழமைசார்ந்ததும், பண்டைய இலக்கிய ஆராய்ச்சிகளின் பயனாக ஆரம்பிக்கப்பட்ட தீவிர சிந்தனைகளுக்கும் அதன் அடிப்படையிலான சமூகப் படிப்பினைகளுடனும் பொருத்தப் படுகிறது. அநேகமாக பண்டைக்கால தென்னிந்திய சரித்திரக் கற்கைகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ள கல்விமான்களான இலங்கையைச் சேர்ந்தவர்களான கைலாசபதி, அதேபோல கார்த்திகேசு சிவத்தம்பி அல்லது சுதர்ஸன் செனவிரத்ன மற்றும் இத் தொகுப்பின் ஆசிரியர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்களாவார்கள். ஏனெனில் முற்றிலும் சங்க இலக்கியம் சாராத இலட்சியங்களின் பாரம்பரியத்துக்கு இவர்கள்தான் வாரிசுகள். கைலாசபதி ஆற்றியுள்ளவை ஓரளவே பழமை சாராதவை. 1968 ல் அவரது நூலான ‘வீர கவிதைகள்’ பிரசுரமானபோது அது சொல்லியது நரம்புகளை உறைய வைக்கும் தமிழக்;கால வீரர்களின் மகிமையை.”சங்கம் கவிதைகள் என்கிற தலைப்பு ஒரு தவறான சொல்வழக்கு” என்கிற ஓரளவு அதிர்ச்சியான அறிவிப்புடன் அவர் தனது நூலை ஆரம்பித்திருக்கிறார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை அதன் கட்டமைப்புக்குள் ஆராயும் போது வாய்வழி இலக்கிய நுட்பங்களைப் பயன்படுத்தி அவை விளக்குவது வீர கவிதைகளின் சிறப்பான உணர்வுகளை என்று காண்பிக்க முயன்றுள்ளார்.

எச்.எம் மற்றும் என்.கே.சாட்விக் ஆகியோரின் வியத்தகு பணியினால் உருவான “இலக்கிய வளர்ச்சி” நூலின் நினைவூட்டல் குறிகளையும் மற்றும் ரியோத்ரோனிக் ,கிரீக், ஐஸ்லாந்து,சல்வேனியா, சமஸ்கிருதம், சுமெரிய, ஆபிரிக்க, வாய்வழி கவிதை ஆய்வுகளின் முடிவுகளையும் எடுத்துக் கொண்டால் கைலாசபதி செயல்முறைப் படுத்தியிருப்பது தமிழ் கவிதைகளின் அடிப்படையிலான வாய்வழிக் கதாபாத்திரங்களையே. ஹோமரின் காவியங்களை ஆராய்ந்த மில்மான் பாரி என்பவரது ஆராய்ச்சி முடிவுகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். வீர கவிதைகளின் கற்கைகளில் அவை “உலகளாவிய கோட்பாட்டு” அந்தஸ்தினைக் கொண்டவை. சாட்விக் மற்றும் பாரியின் ஆராய்ச்சிகள் ஒருமுகமாக உதவியிருப்பது பண்டைய கவிஞர்கள் மற்றும் கவிதா பாரம்பரியங்கள் அத்தோடு அவர்களின் சமூக நடைமுறைகள் என்பனவற்றோடு இக் கவிதைகள் எழுதப்பட்ட கால மனஉணர்வுகளையும் விளங்கிக் கொள்ள கைலாசபதிக்கு உதவியுள்ளன.

கைலாசபதியின் முடிவுகள் தென்னிந்தியத் தமிழின் பெருமைக்கு மிகவும் அதிகம் என்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் கைலாசபதியின் நூலானது பல வருடங்களாகத் தென்னிந்தியாவில் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. அவருக்கு 49 வயதானபோது புலமைத்துவ உலகம் அவரை இழந்துவிட்டது. பேராசிரியர் கைலாசபதியின் நினைவுப்பெட்டகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் அவரது 25ம் வருட நினைவஞ்சலியின் போது மீளாய்வு செய்யப் பட்டது. கைலாசபதியின் நெருங்கிய சகாவான கார்த்திகேசு இந்திரபாலாவினால் முன்வைக்கப்பட்ட இந்நூலில் குறுகிய சுயசரித வரைபுகளுக்கு அப்பாற்பட்ட புகழ்பெற்ற கல்விமான்களினால் ஐந்து கட்டுரைகளும் மற்றும் ஒரு பகுதி கைலாசபதியின் முதல்தர நூலாகிய தமிழ் வீர கவிதையின் சுருக்கிய வடிவமாகவும் உள்ளது. பண்டைய தென்னிந்திய வரலாற்று எழுத்தாண்மையில் சமகாலப் பகுதியினர் யார் யார் என்கிற உண்மையையும், கைலாசபதிக்கு நினைவாஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களின் எண்ணிக்கையும் உள்ளது.

ஆசிரியரின் அறிமுகத்தில் கைலாசபதியைப் பற்றிய மிகவும் தனிப்பட்டதான ஆனால் விளக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் அதைத் தொடர்ந்து சுருக்கமான விளக்கத்துடன் தற்போதுள்ள தகவல்களுடனும், இந்த விடயத்திற்கு தேவையான பெறக்கூடிய சகல பணிகளையும் உள்ளடக்கிய பண்டைய தென்னிந்திய வரலாறு மற்றும் திருத்தப்பட்ட மரபுவழி பற்றி படம் போடப்பட்ட மகிமைமிக்க பண்டைக்கால தமிழகவரலாறு இப்போது கிடைக்கக் கூடியதாகவுள்ளது. முந்திய கொண்டாட்ட நடைமுறைகளுக்குத் திரும்பும் வழமையான முயற்சிகள் இந்நிலையிலும் உண்டு. இந்த அருமையான வெளிப்பார்வையைத் தெடர்ந்து தொகுப்பு தணிக்கை செய்யப் பட்ட கைலாசபதியின் தமிழ் வீர கவிதையுடன் ஆரம்பிக்கிறது. கைலாசபதியின் சொந்த ஆக்கமான பழந்தமிழ் இலக்கியம் இந்தப்பகுதியில் இடம் பெற்றிருப்பதும் ஆச்சரியமான விடயம். ஒன்றோ இரண்டோ கேள்விகள் அந்தக் குறிப்பிட்ட பகுதியைப்பற்றி எழக்கூடும். அது பழந்தமிழரைப் பற்றிய ஒரு ஆய்வுத் தொகுப்பு. கைலாசபதியின் வழித்திரிவான வேலைகளை அது உண்மையில் எடுத்துக் கூறவில்லை. புத்தகத்தின் வேறு எந்தப் பாடமும் வாசகருக்கு அந்த முன்னோடி எழுத்தாளர் செய்தவைகளால் உண்மையில் ஒரு சுகந்த அனுபவம் கிட்டியிருக்கக் கூடும். விசேடமாக மூன்றாவது (கவியும் கவித்துவ பாரம்பரியமும்) நான்காவது (வாய்மொழிச் செய்யுள் உருவாக்கும் உத்தி) அல்லது ஆறாவது (வீரர்களின் உலகம்) அதில் சேர்;க்கப்பட்டுள்ள தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலையின் பகுதியினையும்பற்றிய கலந்தாய்வினை விட்டுவிடுவது சரியான காரணமாகாது.

கே.இராஜனின் “தமினி வரைபுகள் மற்றும் குகைப் பதிவுகள்: தமிழ் நாட்டிலுள்ள பிரமிப் பதிவுகள்” என்கிற கட்டுரை, தமிழ் பிரமி அல்லது குகை வரி வடிவுகள் என அறியப்படும் தமிழ்நாட்டின் வெட்டெழுத்துக்களைப் பற்றிய ஒரு விரிவான கற்கையாகும்.அதன் முழுமையை எடுத்துக் கூறுவதற்கிடையில் இராஜன் மட்கல உடைசல்களில் பொறிக்கப் பட்டுள்ளவைகளை கல்வரைபுகளின் காலகட்டத்திற்கு ஏற்ற இடத்தில் பயன்படுத்தியிருப்பது, அந்தக் கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பலத்தைக் கொடுத்துள்ளது. எப்படியாயினும் எழுத்தாளனின் முடிவுகளை ஒருவரால் முழவதுமாக ஏற்றுக்கொள்ள இயலாதிருக்கிறது, உதாரணத்துக்கு பண்டைய வரலாற்றுக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த முந்தைய சமூகத்தைப் பற்றி அவர் விமரிசிக்கும் அவரது கருத்தை. மௌரியான் அல்லது வட இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட வரிப்படிகளின் பதிவுகளுக்கு மற்றும் ஆழமான உட்பதிவுகளைக் கொண்ட பிரக்ரிட் போன்றவைகளுக்கு மேலும் சான்றுகள் தேவை, முக்கியமாக வற்புறுத்தப்படும் சாட’சியங்களுக்கு எதிராக. பிரதிகளின் தமிழ் தோற்றத்தைக் காட்டுவதில் ஒருவகை அதீத ஆர்வத்துடன் கூடிய சுவை தென்படுகிறது, அதாவது கைலாசபதி சார்ந்து நின்ற உணர்வுகளுக்கு எதிரான சிலவற்றில்.வை.சுப்பராயலுவின் ஆராய்ச்சி ஏட்டில் “விசாகி மற்றும் குவிரான்: தமிழ் பிரமி வெட்டெழுத்துக்களின் வரலாற்று நடைமுறை” எடுத்தியம்புவது பதக்கத்தின் மறுபக்கத்தை. அது அவரது முந்தைய கட்டுரையான மட்கல வெட்டெழுத்துக்களுடன் சேர்த்து வாசிக்கப் படவேண்டும்,அது தமிழ் வெட்டெழுத்தியலில் அனுபவம் மிக்க மூப்பரான ஐராவதம் மகாதேவனின் தொகுக்கப்பட்ட கட்டுihப் பாகங்களில் காணப்படுகிறது. விட்டுக்கொடுப்புகள் இல்லாத விரிவான கவனிப்பு,முறையான பகுப்பாய்வுகள், பிரச்சினைகளை அணுகும் நடுநிலமை, ட்டுரை முழுவதும் காணப்படும் துறைமைத்திறம் என்பன சுப்பராயலுவின் மற்றைய எழுத்துக்களில் காணப்படுவது போன்றே இதிலும் விளக்கமளிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அவரைப் பொறுத்தமட்டில் அவரது முடிவுகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க நடைமுறை, வெட்டெழுத்துக்களில் காணப்படும் பெயருள்ள ஆட்களை இனங்காணவும் பயன்பட்டிருக்கிறது. “பிரகிருது பேசிய வியாபாரிகள்தான் பிராமி வரிவடிவுகளை தமிழ் தேசத்தில் அறிமுகப்படுத்தத் தொடங்கிய ஆதி முதல் கருவிகள்” மௌரியர் ஆட்சிக்காலத்தில் மகதாப் பிராந்தியத்திலிருந்து கி.பி. 3ம் நூற்றாண்டளவில் பிரமி எழுத்துக்களின் முழுவடிவம் கிடைக்கப்பெற்றபின் உடனடியாக நடந்திருக்க வேண்டும். சுப்பராயலு மேலும் தீவிர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார், அது வியாபாரிகள் தமது இடையீட்டில் எழுத்தறிவை பரப்புவதற்குப் பயன்படுத்தியது.கையிலுள்ள பிரச்சினைகளின் நடைமுறைகளின் நோக்கத்துக்கு மறுபுறமாக ஒரு குறிப்பு. கே.இந்திரபாலா தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தும் பிரச்சினையைக கையாளுகிறார்.இந்திரபாலா விவாதிப்பது தமிழ் அடையாளத்தின் இருப்புகளை இனம், அரசியல், அல்லது மத அடையாளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு.தமிழ் தன்னை அடையாளம் காட்டும் தனிச்சிறப்பை வேறு மொழிபெயர் Nதுசங்களிலும் ஏற்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்பேசும் பிராந்தியங்களில் பண்டைய வரலாற்றுக்கால ஆவணங்களில் தமழ்கூறும் நல்லுலகம் எனக் கூறப்பட்ட அடையாளம் காணப்பட்ட ஒரு தமிழ் பேசும் இனக்குழுவும் கிடைக்கவில்லை.

இந்த உலகம் நிச்சயப் படுத்திக் கொள்ளவேண்டியது யாதெனில் வித்தியாசமான இனக்குழுவினரின் தாயகம், அரசியல் பிரிவுகள் மற்றும் பல்வேறு மதநம்பிக்கையுள்ள மக்கள் என இவையாவும் தமிழின் அடையாளத்தை ஒருங்கிணைக்கும் வழியாக நிற்கப் போவதில்லை.இந்த வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து மாற்றி, பழங்குடித் தடைகள் யாவற்றையும் கடந்த ஒரு பெரிய குழு பண்டைத் தமிழ் வரலாற்றில் தமிழ் மொழியை தங்களை இனங்காட்டும் அடையாளமாகக் கொண்டிருந்திருக்கிறது. ஒரு சகாப்தத்தினை மாற்றியமைக்கும் ஒரு பிரிவின் பிரதிநிதிகளாக அவர்கள் கருதப்படுவதும் மற்றோர் காரணம். ஒரு தகுதிவாய்ந்தகண்ணோட்டத்தில் பண்டைய வரலாற்றுத் தமிழ்க்காலக் காட்சியின் வெளித்தோற்றம் ஆர். சம்பாலட்சுமியினால் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பிரச்சனைகளை வௌ;வேறு தரங்களில் ஆராய்வதோடு மட்டுமன்றி ஆய்வின் முடிவுகளைத் தொகையிட்டு பண்டைய தென்னிந்திய நடைமுறைகளை நம்பகமான சித்திரம் போல தன் வேலைகளில் எடுத்துக் கூறியுள்ளார். சிறப்பியல்பான ஒரு பணிவு அவரது கோரிக்கைகளில் உள்ளது.(அவர் கூறுவது: “ஆய்வுகளினால் பெறப்படும் அதியுயர் முக்கியத்துவமான அந்தக்கால தமிழ் சமூகத்தின் புதிய நுண்ணறிவுகளைத் திரும்பவும் மாற்றுவதற்காக எந்தக்கோரிக்கையும் எழுப்பப் படவில்லை”.) எப்படியாயினும் தமிழ்சமூகத்தின் பண்டைய சரித்திர காலப் பகுதியின் முந்திய காலப்பகுதியிலும் அதுமுதலான ஆரம்ப இடைக்காலப் பகுதியிலும் தோற்றம் கொண்ட உருமாற்றத்தை விளக்குவதற்கு மாற்றீடு செய்யக்கூடிய புதிய வெளித்தோற்றத்தை அறிமுகம் செய்யும்படி அவர் அழுத்தம் பிரயோகிக்கிறார். அவர் இதைச் செய்ய விரும்புவது, பண்டைய சமூகங்களைப் பற்றிய சமீபத்திய கற்கைகளின் செயல்முறைநுட்ப முன்னேற்றங்களினாலும் மற்றும் வரலாற்றியல் புவியியல் சேர்ந்த அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க மறுவாசிப்பு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டதையும் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக. தமிழ் ஆhவலர்கள் தமிழ் கலாச்சாரத்தின் பெருமையைப் பற்றி வாதிடுவதற்கான வழிகளில் ஒன்றாக சமஸ்கிருதம் மற்றும் இந்தோ – ஆரிய செல்வாக்கினைத் திராவிடன் என்ற பொருளில் மறுத்துரைக்கிறார்கள். வீ.சிவசாமியின் கட்டுரை “பிராமணர்கள் மற்றும் யாகர்கள்: வைதீக எண்ணங்களின் பரவல்” அதற்குக் குறிப்பிடத் தக்கதோர் திருத்தம். அவர் வழங்குவது தமிழ்நாட்டில் காணப்படும் வைதீக எண்ணங்களினதும்,செயற்பாடுகளினதும் ஐயத்துக்கு இடமில்லாத சான்றுகள். எம்.ஜீ.எஸ். நாராயணன் வேத – சாத்திர – புராண மூலகங்களை மூன்று தசாப்தங்களுக்கு முன்பே பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டிருந்தாலும்,இந்தக் கட்டுரை இந்தச் சூழ்நிலையில் மிக முக்கியமாக வழங்கியிருப்பது தமிழ் நாட்டு சமூக கலாச்சாரங்களுக்கு உண்மையான பாராட்டுகளை.இது சார்பாக அதன் முடிவுவரை பணியாற்றிய கைலாசபதியின் நினைவுகளுக்கு இக்கட்டுரை ஒரு புகழாரம்.

புத்தகத்தின் முடிவில் நான்கு இணைப்புக்கள் உள்ளன.பட்டினப்பாலை மற்றும் புறநானூற்றிலிருந்து ஒரு பாடல் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு.எழுத்துக்களும் மொழிபெயர்ப்புமான மூன்று தமிழ் - பிரமி குகை ஆவணங்கள்.பி.ரி.சிறினிவாச ஐயங்காரின் சங்ககாலப் புராணக்கதையின் மொழிபெயர்ப்பு, மற்றும் வனமார்பவன், தேவநம்பியா ஆகியோரைப் பற்றிய ஒரு குறிப்பும் உள்ளது. இவை யாவும் தொடர்பு பட்டவை.ஆயினும் வனமார்பவனின் தமிழ்பாடலை அசோகன் தேவநம்பியாவுடன் சமப்படுத்தி விவாதமொன்றுக்கு யாரும் அவ்வளவு தூரத்துக்கு போக இயலாது. அத்தோடு சமீபத்திய எழுத்துக்களுக்கான தெரிவு செய்யப்பட்ட ஒரு நூற்பட்டியலும் உள்ளது.அது மிகவும் உதவியானதாகவும், கைலாசபதியின் எழுத்துக்களுக்கு பொருத்தமான ஆதார நூற்பட்டியலாகவும் உள்ளது.பண்டைத் தமிழ் சரித்திர சமூக இயல்பினுக்கு கவனிக்கப் படவேண்டிய மறுசிந்தனைகளுக்குப் காரணமான ஒரு முன்னோடியின் ஞாபகத்துக்குப் பொருத்தமான ஒரு புகழ்மாலையைச் சூட்டுவதில் இந்நூலின் ஆசிரியர் மிகத் திறமையாகச் செயலாற்றியுள்ளார்.

(நன்றி : Frontline )
தமிழில் எஸ்.குமார்

Monday, September 27, 2010

படைப்பிலக்கியத்திற் கொள்கையும் நடைமுறையும் – க. கைலாசபதி

படைப்பிலக்கியத்திற் கொள்கையும் நடைமுறையும் – க. கைலாசபதி



எண்ணற்ற வடிவங்களிலும் உருவங்களிலும் ஆராய்ச்சிக்கு விரோதமான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எமது இலக்கிய உலகிலே தனியாட்சி செய்து வந்திருக்கின்றன. இவற்றை அறவே அகற்றிப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடைய கருத்துக்களை வளர்த்தல் வேண்டும். இவ்வாறு வளர்த்தல் செயலாதலின், செய்கை இன்றியமையாததாகிறது. விஷயங்களின் அடிமுடி தேடிப் பெறும் அறிவு கேவலம் ‘ஞான’மாக மட்டுமன்றி ‘உலகினை மாற்றவும்’ ஊக்கத்துடன் உதவ வேண்டும். அது மட்டுமல்ல. நாம் ஆர்வத்துடன் தேடிக்கொள்ளும் அறிவு சரியானதா அன்றித் தவறானதா என்பதை நிச்சயிக்கவும் நடைமுறையே தலை சிறந்த மார்க்கமாகும். ஏனெனில் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கும் போது எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை என்று பொதுவாகக் கூறலாம். எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை என்பதிலும் தப்பில்லை. இயற்கையை எதிர்த்துப் போராடி அதனை வென்றடக்குவதிலேயே இது சிறப்பாகப் பொருந்துவதாயினும் சமுதாய இயக்கங்கட்கும் ஏற்புடையதே.

ஆனால் இயற்கையுடன் நடத்தும் போராட்டத்திலும் சரி, அல்லது சமுதாயப் போராட்டத்திலும் சரி, இவ்வளவுகோல் யாந்திரீக மயமாய்ப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியதொன்றன்று. ஏனெனில் சில வேளைகளில் சரியான கருத்துக்களும் வெற்றி பெறுவதில்லை. தோல்வியும் அடைகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த குறைபாட்டினால் அன்று. புறக் காரணங்களினாலாகும். ஆயினும் நடைமுறையில் தவறுகள் திருத்தப்பட்டுச் சரியான கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன. இவ் வளர்ச்சி முறையைச் சுருள்வட்டத்துக்கு ஒப்புமை கூறுவர் சிலர். விஞ்ஞானக் கருத்துக்களில் தோய்ந்து நவ கவிதைகள் பல பாடியுள்ள முருகையன் இப் பொருளையே அடியும் முடியும் என்ற கவிதையிற் பாடுகிறார். நீண்ட அப் பாடலிற் சில பகுதிகளை மாத்திரம் இங்கே காட்டுவோம்.

இக்காலத் தியல் கொண்டு கணக்குப் போட்டோம்
ஏதிர்காலப் போக்குகளை முன் அறிந்தோம்
முற்கால மர்மத்தை ஒதுக்கி நீக்கி
முன்னேற லானோம் நாம்–முடிவில்லாமல்
அப்பாலும் அப்பாலும் நெடிது செல்ல
அதற்கப்பால்—அதற்கப்பால் திகைத்து நின்றோம்.
நிற்காமல் மிக மெதுவாய்ப் பின்னும் செல்வோம்
நிகழ்ச்சிகளின் திருவடியைக் காண எண்ணி.
எதிர்காலப் போக்குகளை அறிதலன்றி
இயன்றவரை அதை மாற்றும் போராட்டத்தும்
விதவிதமாய் முயலுகிறோம். விரும்பத்தக்க
விளைவுகளும் பெறுகின்றோம்….

எட்டும் இனி என நினைத்தோம்; ஐந்தடிக்குள்
இருக்கும் என்று சென்றாலோ… இன்னும் சற்று
மட்டும் ஒரு சிறிது செலின், கைகளுக்குள்
வசப்படுதல் நிசம் என்று நிச்சயித்தோம்.
கிட்டுவது போல் இருந்து கிட்டாதாகி
கிடையாத தோற்றரவோ என ஐயற்று
நெட்டுயிர்த்தோம். ஆனாலும் மீண்டும் மீண்டும்
நிமிர்ந்தெழுந்து மறுபடியும் நகரலானோம்.

நீந்தப் பழகுவதற்குத் தண்ணீரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீச்சல் அறிவு முழவதும் நேரடி அனுபவத்திலிருந்தே உண்டாகிறது. ஆனால் பல சமயங்களில் ’இயலாது’ ‘முடியாது’ என்ற ஐயறவுகளெல்லாம் தோன்றுவது இயற்கை. விடாப்பிடியாகத் தொடர்ந்து முயல்வதே இறுதி வெற்றிக்கு வழி. அயல்நாட்டுப் பழமொழியொன்று கூறுவது போல ‘தோல்வி என்பது வெற்றியின் தாய். இடறி விழுதல் அறிவில் எழுதல்’ என்பதாகும்.

புறநிலை உலகத்தைப் பார்த்து அதன் பண்புகள் சிலவற்றை வருணித்தால் மட்டும் போதாது என மேலே காட்டினோம். ‘சுத்த இலக்கியவாதிகள்’ சிலர் தாம் நவீன உலகைக் கண்டவாறே வருணிப்பதாகக் கூறுவர். அதாவது எழுத்தாளனது ‘அரசியல்’ ‘பொருளியல்’ கருத்துக்களின் தலையீடு இன்றி ‘புறநிலை’ உலகை நேர்மையுடன் படைப்பதாகப் பெருமைப்படுவர். ஆனால் அவ்வாறு கூறுவதே ஒருவகையான அரசியற் கண்ணோட்டந் தானே. ஆண்மையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய தந்திரபூமி புறவுலகைப் புரிந்துகொள்ள மாட்டாத ‘சுதந்திர’ எழுத்தாளரது பிரலாபமாகவே முடிந்தது. மற்றோர்களைப் பார்க்கச் சிறந்த முறையில் உலகின் இயல்பை உணர்ந்து, தனது துன்பத்துக்கும் தன் போன்ற பிறரது துன்பங்களுக்;கும் நிவாரணங் காணக்கூடிய கஸ்தூரி நடைமுறைக்கும் ‘ஆன்மீக’த் தத்துவங்களிற் சரண் புகுவது பமைய பிரமஞானம். இன்றும் எத்துணை வலிமையுடையதாய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தந்திரபூமியை சி.பி. சினோ எழுதிய Corridors of Power என்ற ஆங்கில நாவலோடு ஒப்புநோக்கினால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பல விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாயிருக்கும். அதிலும் பாலியல் வருகிறது. ஆனால் ஆன்மீகப் பாத்திரங்கள் புகலிடம் தேடும் போலி முடிவுகள் அதிற் காணப்படா. இந்திரா பார்த்தசாரதியின் பாஷையிற் சினோவின் இந் நாவலுக்குப் பெயரிடுவதானால் அதிகாரபூமி என்று சொல்லிக் கொள்ளலாம். அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உள்ள பிணைப்பை ‘உள்ளிருந்து’ உயிர்த் துடிப்புடன் சித்தரிக்கிறார் ஆசிரியர் சினோ. ஆங்கே தத்துவ விசாரத்துக்கு இடமேயில்லை. Mechanics of Power எனப்படும் அதிகாரத்தின் இயக்கப்பாடுகளை இயன்றவரை புறநிலை உண்மையாகக் கொண்டு பாத்திரங்களைப் படைத்துள்ளார். ஆனால் பார்த்தசாரதியோ தந்திரபூமியில் நசிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு ஆய்வறிவாளனையே உருவாக்கியுள்ளார். இது சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டையும் இயக்கப்பாடுகளையும் தவறாகப் புரிந்து கொண்டது மட்டுமன்றி, புறநிலை உண்மை மறுப்புமாகும்.
எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் இயக்கத்தில் ஏதோ ஒரு வகையிற் பங்கு கொண்டாலன்றி, இன்றைய காலகட்டத்தில் புறநிலைக்குப் பிசகாத நாவலைப் படைக்க இயலும் என நான் நம்பவில்லை. அதையே தந்திரபூமி சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழர் சமுதாயத்திற் காணும் பல விஷயங்களின் அடிமுடியைத் தேடிக் காண வேண்டும் என்ற அவா பல இளைஞரிடத்தே காணப்படுகிறது. இது வெறும் கருத்தாக மட்டுமல்லாது செயலோடு இணைந்ததாகவும் காணப்படுகிறது. குலோத்துங்கன் என்ற கவிஞர் அண்மையில் எழுதிய ஒரு கவிதையில் இதைக் காணலாம்.

அறிவன்றி ஒளியெதுவும் அறியோம்; இன்றெம்
ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும்
தெரிகின்ற நெறி காண்போம்; உண்மை தேடித்
திசையெங்கும் அலைபவர் நாம்; திறந்த நெஞ்சர்,
விரிகின்ற கொள்கையினர்; மாற்றம் இல்லா
விதியெதையும் எக்காலும் ஒப்போம்; சாலச்
சிறிதென்ற அணுவொன்றில் பார் புரக்கும்
செல்வமெலாம் காண்கின்ற திறத்தவர் யாம்
எண்ணுவதும் படைப்பதும் எம் பணிகள் யாங்கும்
எல்லோர்க்கும் சமவாய்ப்பு நிறைந்த தான
மண்ணுலகைச் சமைப்பதும் எம் குறிக்கோள்; நாளை
வருகின்ற தலைமுறையின் வாழ்வுக்காக
உண்ணுவதும் உறங்குவதும் தவிர்ந்தும், கூடி
உழைப்பதுமே யாம் மகிழும் இன்பம்; மற்றும்
விண்ணுலகம் உண்டெனினும் விழைவோமில்லை
மீளாத நரகெனினும் பயந்தோ மில்லை!

‘நாமார்க்குங் குடியல்லோம்’ என்ற அப்பரின் குரலையும் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ எனத் தொடங்கிப் பாடிய இளம்வழுதியின் குரலையும் நினைவூட்டும் இப் பாடல், கொள்கையும் செயலும் (theory and practice) இணைய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறது.
அவ்வாறு கொள்கையும் நடைமுறையும் இணைந்தாலன்றிப் பன்னெடுங்காலமாக நிலைத்துள்ள அரசியல் பொருளாதார அமைப்பையும் அதிலிருந்து பிரிக்க முடியாத பண்பாட்டையும் ஒதுக்கி அப்புறப்படுத்த இயலாது. தூய சிந்தனை, சுத்த இலக்கியம் என்பன போன்ற குரல்கள் பழைய பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் அடிக்கல்லாகக் கொண்டவை. எனவே புதிய அமைப்பிலேயே புதிய பண்பாடும் இலக்கியமும் தோன்ற முடியும். அதைத் தோற்றுவிப்பதற்கான பணிக்கு அறிவாராய்ச்சியும் அதற்கு இன்றியமையாத அடிமுடி தேடலும் ஊக்கத்துடன் பயன்பட வேண்டும்.
(“அடியும் முடியும்” நூலிலிருந்து அதே தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதி நன்றியுடன்





எண்ணற்ற வடிவங்களிலும் உருவங்களிலும் ஆராய்ச்சிக்கு விரோதமான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எமது இலக்கிய உலகிலே தனியாட்சி செய்து வந்திருக்கின்றன. இவற்றை அறவே அகற்றிப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடைய கருத்துக்களை வளர்த்தல் வேண்டும். இவ்வாறு வளர்த்தல் செயலாதலின், செய்கை இன்றியமையாததாகிறது. விஷயங்களின் அடிமுடி தேடிப் பெறும் அறிவு கேவலம் ‘ஞான’மாக மட்டுமன்றி ‘உலகினை மாற்றவும்’ ஊக்கத்துடன் உதவ வேண்டும். அது மட்டுமல்ல. நாம் ஆர்வத்துடன் தேடிக்கொள்ளும் அறிவு சரியானதா அன்றித் தவறானதா என்பதை நிச்சயிக்கவும் நடைமுறையே தலை சிறந்த மார்க்கமாகும். ஏனெனில் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கும் போது எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை என்று பொதுவாகக் கூறலாம். எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை என்பதிலும் தப்பில்லை. இயற்கையை எதிர்த்துப் போராடி அதனை வென்றடக்குவதிலேயே இது சிறப்பாகப் பொருந்துவதாயினும் சமுதாய இயக்கங்கட்கும் ஏற்புடையதே.

ஆனால் இயற்கையுடன் நடத்தும் போராட்டத்திலும் சரி, அல்லது சமுதாயப் போராட்டத்திலும் சரி, இவ்வளவுகோல் யாந்திரீக மயமாய்ப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியதொன்றன்று. ஏனெனில் சில வேளைகளில் சரியான கருத்துக்களும் வெற்றி பெறுவதில்லை. தோல்வியும் அடைகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த குறைபாட்டினால் அன்று. புறக் காரணங்களினாலாகும். ஆயினும் நடைமுறையில் தவறுகள் திருத்தப்பட்டுச் சரியான கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன. இவ் வளர்ச்சி முறையைச் சுருள்வட்டத்துக்கு ஒப்புமை கூறுவர் சிலர். விஞ்ஞானக் கருத்துக்களில் தோய்ந்து நவ கவிதைகள் பல பாடியுள்ள முருகையன் இப் பொருளையே அடியும் முடியும் என்ற கவிதையிற் பாடுகிறார். நீண்ட அப் பாடலிற் சில பகுதிகளை மாத்திரம் இங்கே காட்டுவோம்.

இக்காலத் தியல் கொண்டு கணக்குப் போட்டோம்
ஏதிர்காலப் போக்குகளை முன் அறிந்தோம்
முற்கால மர்மத்தை ஒதுக்கி நீக்கி
முன்னேற லானோம் நாம்–முடிவில்லாமல்
அப்பாலும் அப்பாலும் நெடிது செல்ல
அதற்கப்பால்—அதற்கப்பால் திகைத்து நின்றோம்.
நிற்காமல் மிக மெதுவாய்ப் பின்னும் செல்வோம்
நிகழ்ச்சிகளின் திருவடியைக் காண எண்ணி.
எதிர்காலப் போக்குகளை அறிதலன்றி
இயன்றவரை அதை மாற்றும் போராட்டத்தும்
விதவிதமாய் முயலுகிறோம். விரும்பத்தக்க
விளைவுகளும் பெறுகின்றோம்….

எட்டும் இனி என நினைத்தோம்; ஐந்தடிக்குள்
இருக்கும் என்று சென்றாலோ… இன்னும் சற்று
மட்டும் ஒரு சிறிது செலின், கைகளுக்குள்
வசப்படுதல் நிசம் என்று நிச்சயித்தோம்.
கிட்டுவது போல் இருந்து கிட்டாதாகி
கிடையாத தோற்றரவோ என ஐயற்று
நெட்டுயிர்த்தோம். ஆனாலும் மீண்டும் மீண்டும்
நிமிர்ந்தெழுந்து மறுபடியும் நகரலானோம்.

நீந்தப் பழகுவதற்குத் தண்ணீரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீச்சல் அறிவு முழவதும் நேரடி அனுபவத்திலிருந்தே உண்டாகிறது. ஆனால் பல சமயங்களில் ’இயலாது’ ‘முடியாது’ என்ற ஐயறவுகளெல்லாம் தோன்றுவது இயற்கை. விடாப்பிடியாகத் தொடர்ந்து முயல்வதே இறுதி வெற்றிக்கு வழி. அயல்நாட்டுப் பழமொழியொன்று கூறுவது போல ‘தோல்வி என்பது வெற்றியின் தாய். இடறி விழுதல் அறிவில் எழுதல்’ என்பதாகும்.

புறநிலை உலகத்தைப் பார்த்து அதன் பண்புகள் சிலவற்றை வருணித்தால் மட்டும் போதாது என மேலே காட்டினோம். ‘சுத்த இலக்கியவாதிகள்’ சிலர் தாம் நவீன உலகைக் கண்டவாறே வருணிப்பதாகக் கூறுவர். அதாவது எழுத்தாளனது ‘அரசியல்’ ‘பொருளியல்’ கருத்துக்களின் தலையீடு இன்றி ‘புறநிலை’ உலகை நேர்மையுடன் படைப்பதாகப் பெருமைப்படுவர். ஆனால் அவ்வாறு கூறுவதே ஒருவகையான அரசியற் கண்ணோட்டந் தானே. ஆண்மையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய தந்திரபூமி புறவுலகைப் புரிந்துகொள்ள மாட்டாத ‘சுதந்திர’ எழுத்தாளரது பிரலாபமாகவே முடிந்தது. மற்றோர்களைப் பார்க்கச் சிறந்த முறையில் உலகின் இயல்பை உணர்ந்து, தனது துன்பத்துக்கும் தன் போன்ற பிறரது துன்பங்களுக்;கும் நிவாரணங் காணக்கூடிய கஸ்தூரி நடைமுறைக்கும் ‘ஆன்மீக’த் தத்துவங்களிற் சரண் புகுவது பமைய பிரமஞானம். இன்றும் எத்துணை வலிமையுடையதாய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தந்திரபூமியை சி.பி. சினோ எழுதிய Corridors of Power என்ற ஆங்கில நாவலோடு ஒப்புநோக்கினால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பல விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாயிருக்கும். அதிலும் பாலியல் வருகிறது. ஆனால் ஆன்மீகப் பாத்திரங்கள் புகலிடம் தேடும் போலி முடிவுகள் அதிற் காணப்படா. இந்திரா பார்த்தசாரதியின் பாஷையிற் சினோவின் இந் நாவலுக்குப் பெயரிடுவதானால் அதிகாரபூமி என்று சொல்லிக் கொள்ளலாம். அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உள்ள பிணைப்பை ‘உள்ளிருந்து’ உயிர்த் துடிப்புடன் சித்தரிக்கிறார் ஆசிரியர் சினோ. ஆங்கே தத்துவ விசாரத்துக்கு இடமேயில்லை. Mechanics of Power எனப்படும் அதிகாரத்தின் இயக்கப்பாடுகளை இயன்றவரை புறநிலை உண்மையாகக் கொண்டு பாத்திரங்களைப் படைத்துள்ளார். ஆனால் பார்த்தசாரதியோ தந்திரபூமியில் நசிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு ஆய்வறிவாளனையே உருவாக்கியுள்ளார். இது சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டையும் இயக்கப்பாடுகளையும் தவறாகப் புரிந்து கொண்டது மட்டுமன்றி, புறநிலை உண்மை மறுப்புமாகும்.
எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் இயக்கத்தில் ஏதோ ஒரு வகையிற் பங்கு கொண்டாலன்றி, இன்றைய காலகட்டத்தில் புறநிலைக்குப் பிசகாத நாவலைப் படைக்க இயலும் என நான் நம்பவில்லை. அதையே தந்திரபூமி சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழர் சமுதாயத்திற் காணும் பல விஷயங்களின் அடிமுடியைத் தேடிக் காண வேண்டும் என்ற அவா பல இளைஞரிடத்தே காணப்படுகிறது. இது வெறும் கருத்தாக மட்டுமல்லாது செயலோடு இணைந்ததாகவும் காணப்படுகிறது. குலோத்துங்கன் என்ற கவிஞர் அண்மையில் எழுதிய ஒரு கவிதையில் இதைக் காணலாம்.

அறிவன்றி ஒளியெதுவும் அறியோம்; இன்றெம்
ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும்
தெரிகின்ற நெறி காண்போம்; உண்மை தேடித்
திசையெங்கும் அலைபவர் நாம்; திறந்த நெஞ்சர்,
விரிகின்ற கொள்கையினர்; மாற்றம் இல்லா
விதியெதையும் எக்காலும் ஒப்போம்; சாலச்
சிறிதென்ற அணுவொன்றில் பார் புரக்கும்
செல்வமெலாம் காண்கின்ற திறத்தவர் யாம்
எண்ணுவதும் படைப்பதும் எம் பணிகள் யாங்கும்
எல்லோர்க்கும் சமவாய்ப்பு நிறைந்த தான
மண்ணுலகைச் சமைப்பதும் எம் குறிக்கோள்; நாளை
வருகின்ற தலைமுறையின் வாழ்வுக்காக
உண்ணுவதும் உறங்குவதும் தவிர்ந்தும், கூடி
உழைப்பதுமே யாம் மகிழும் இன்பம்; மற்றும்
விண்ணுலகம் உண்டெனினும் விழைவோமில்லை
மீளாத நரகெனினும் பயந்தோ மில்லை!

‘நாமார்க்குங் குடியல்லோம்’ என்ற அப்பரின் குரலையும் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ எனத் தொடங்கிப் பாடிய இளம்வழுதியின் குரலையும் நினைவூட்டும் இப் பாடல், கொள்கையும் செயலும் (theory and practice) இணைய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறது.
அவ்வாறு கொள்கையும் நடைமுறையும் இணைந்தாலன்றிப் பன்னெடுங்காலமாக நிலைத்துள்ள அரசியல் பொருளாதார அமைப்பையும் அதிலிருந்து பிரிக்க முடியாத பண்பாட்டையும் ஒதுக்கி அப்புறப்படுத்த இயலாது. தூய சிந்தனை, சுத்த இலக்கியம் என்பன போன்ற குரல்கள் பழைய பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் அடிக்கல்லாகக் கொண்டவை. எனவே புதிய அமைப்பிலேயே புதிய பண்பாடும் இலக்கியமும் தோன்ற முடியும். அதைத் தோற்றுவிப்பதற்கான பணிக்கு அறிவாராய்ச்சியும் அதற்கு இன்றியமையாத அடிமுடி தேடலும் ஊக்கத்துடன் பயன்பட வேண்டும்.
(“அடியும் முடியும்” நூலிலிருந்து அதே தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதி நன்றியுடன்

Wednesday, August 11, 2010

திறனாய்வுத் துறையும் "கலாநிதி" க.கைலாசபதி

பி. தயாளன்

  • தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்
  • ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்
  • "கலை கலைக்காக" என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்
  • இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்
  • சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்
  • தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்
  • ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர்
  • இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்
  • யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்
  • இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்

இத்தனை பெருமைக்கும் உரியவர் "ஈழம் தந்த கொடை" கலாநிதி க.கைலாசபதி.



மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி - தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு இராயல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.


பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.


பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். "தமிழில் வீரயுகப் பாடல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து "கலாநிதி" (முனைவர்) பட்டம் பெற்றார். கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
"தமிழில் வீரயுகப் பாடல்கள்" என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறி மரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ் - வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.
அமெரிக்காவிலுள்ள "அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும்" சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் "புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்" என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

  • யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு
  • இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு
  • இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம்
  • இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு
  • இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு


முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.
"இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது; இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்" என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.


"கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்; ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்" என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். "உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்" என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.


"உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை" என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

  • பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
  • தமிழ் நாவல் இலக்கியம்
  • ஒப்பியல் இலக்கியம்
  • அடியும் முடியும்
  • இலக்கியமும் திறனாய்வும்
  • கவிதை நயம்
  • சமூகவியலும் இலக்கியமும்
  • நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்
  • திறனாய்வுப் பிரச்சினைகள்
  • பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்
  • இலக்கியச் சிந்தனைகள்
  • பாரதி ஆய்வுகள்
  • ஈழத்து இலக்கிய முன்னோடிகள்
  • இரு மகாகவிகள்
  • சர்வதேச அரசியல் நிகழ்வுகள்
  • முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.
  • இலங்கையில் இருந்து வெளிவந்த,
  • தொழிலாளி
  • தேசாபிமானி
  • செம்பதாகை
  • ரெட்பானர்

முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார்.

பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் "இளங்கதிர்" இதழிலும், இலக்கிய இதழான "மல்லிகை"யிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.
தமிழ்நாட்டு இதழ்களான,

  • தாமரை
  • சாந்தி
  • சரஸ்வதி
  • செம்மலர்
  • தீக்கதிர்
  • ஜனசக்தி
  • ஆராய்ச்சி

முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் "தமிழ் நாவல் இலக்கியம்". தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.

  • கல்வித்துறை நிபுணர்
  • இதழாளர்
  • எழுத்தாளர்
  • ஆய்வாளர்
  • கட்டுரையாளர்
  • விமர்சகர்
  • பேச்சாளர்

எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.


முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இயற்கை எய்தினார்.
தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு.

தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!

Wednesday, August 4, 2010

பொற்காலமும்-புதுயுகமும்!:பேராசிரியர் க. கைலாசபதி

Kailasapathy 3(பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர். ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை உடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு.)

சென்னை உயர்நீதிமன்றத்து நீதிபதிகளில் ஒருவராக இருந்த டி.எல். வெங்கட்ராம ஐயர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ‘வட துருவத்திலுள்ள பெரும் பனி மலைகளுக்குத் தீ வைத்துவிடலாம். தமிழிலே புதுமைப் புரட்சியேற்படுவது அதைவிடக் கடினம்’ என்று கூறினாராம். வாய்மொழியாக வழங்கும் இக்கூற்றின் உண்மை பொய் எவ்வாறாக இருப்பினும் அடிப்படையான ஒரு நம்பிக்கை வரட்சியை இக்கூற்று எடுத்து விளக்குவதாக உள்ளது. பழமைப் பற்றும் தன்னிறைவு உணர்வும் தமிழ்ச் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன என்பதே பொதுவாகக் காணப்படும் கருத்து. மாற்றமடையாத, தேங்கி நிற்கும் சமுதாயங்களில் ( (Stagnant Society)) இத்தகைய பழைமையாதிக்கம் காணப்படுவது உலகெங்கும் பொதுவான நியதி. உண்மையான பொருளாதார மாற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சமுதாயப் புனரமைப்பினைத் தொடர்ந்தே புதுமை பூத்துக் குலுங்கும். அதுவும் ஒரு வரலாற்று நியதிதான்.

இவ்விடத்திலே எமது சமுதாயத்திற் காணப்படும் பழைமைப் பிடிப்பின் ஓர் அமிசத்தைச் சிறிது ஆராயலாம். பழைமையாதிக்கத்தைக் கருத்தளவில் ஆராய்ந்து பார்க்கின், அதன் ஊற்றை இனங்கண்டு கொள்ள முடியும். எமது வரலாற்றின் தொடக்கத்திலே மகோன்னதமான பொற்காலம் ஒன்று நிலவியது என்றும், அதன் பின் வரவர இழி நிலை வளர்ந்து வந்துள்ளது என்றும் ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழப்பதிந்துள்ளது. உதாரணமாக, தமிழ் நூல் வரலாறு என்ற நூலிலே திருவாளர் பாலூர் கண்ணப்ப முதலியார் பின்வருமாறு எழுதுகிறார்: “பழங்காலம் பொற்காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நனிநாகரிகராய் வாழ்ந்தனர். தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந்தனர். இலக்கிய வளத்தில் சிறந்து விளங்கினர்”;. எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் இலட்சியவாதிகள் சிலர் குறைபாடெதுவுமற்ற கற்பனையுலகம் ஒன்றைப் பற்றுக்கோலாகக் கொள்வது போலச் சென்ற காலத்தின் ஒரு பகுதியை நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்றகாலமாகச் சிலர் கொள்வர்.

இம் மனப்பதிவு அறிவின் துணையாற் பெறப்படுவதன்று. அரைகுறைச் செய்திகளின் அடிப்படையிலும், ஒரு வகையான மயக்க உணர்வின் அடிப்படையிலுமே பெறப்படுவது. ஆயினும் இதற்கும் கோட்பாட்டு அடிப்படை ஒன்றுள்ளது. அதனைச் சுருக்கமாக விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெரும்பாலான தமிழரைப் பொறுத்தளவில், ஈடிணையற்ற ஏகாதிபத்தியப் பெருமையுடன் ‘அவனி முழுதான்ட’ சோழப் பெருமன்னர் மதிப்புக்குரியவராயிருப்பினும், ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த’ முடியுடை mannarமூவேந்தர் அரசோச்சிய காலப் பகுதியே பொற்காலமாகக் கொள்ளப்படுகிறது. பழமைக்கும் பழமையானதே பாராட்டுக்குரியது போலும். அது மட்டுமன்று, பிற்காலத்திலே தென்னகத்தில் எழுந்த, சேர, பாண்டிய அரசுகளோடும், சோழப் பேரரசோடும் ஒப்பிடும்போது ‘சங்க கால’ முடியுடை மூவேந்தர் குறுநில மன்னராகவே காட்சி யளிக்கின்றனர். கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திலிருந்த செம்பியரான இடைக்காலச் சோழப் பெருமன்னரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புறநானூற்றுப் பாடல்கள் புகழும் சோழமன்னர்கள் சிறுநிலக் கிழாராகவே தோன்றுவர்.

அதைப் போலவே திரிபுவனச் சக்கரவர்த்திகள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட இரண்டாம் பாண்டியப் பேரரசின் பெருமன்னரோடு ஒப்பிடுமிடத்து, சங்ககாலப் பாண்டிய மன்னர் மன்னராகவே தோன்றுகிறார்கள் அல்லர். அவ்வாறிருந்தும், இடைக்காலத்தில் புகழொடு விளங்கிய பாண்டிய, சோழப் பெருமன்னர்கள் வீரயுகத்தில் வாழ்ந்த தத்தம் மூதாதையரது ‘உலகளந்த சிறப்புக்குத்’ தாம் அருகதையற்றவர் என்றே கருதினர். அந்தளவுக்கு வீரயுகம் ஈடிணையற்றதொன்றாகப் பிற்காலத்தவர் கருத்தில் வேரூன்றியிருந்தது. இக் காலத்திலும் தமிழபிமானத்தோடு பெயர் மாற்றிச் சூட்டிக் கொள்பவர்கள் வீரயுக மன்னர் பெயர்களையும் அவை போன்றவற்றையுமே விரும்புவது கண்கூடு. சுருங்கக் கூறின், ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக வீரயுகம் “சான்றோர் வாழ்ந்த காலம்” கழிந்த பொற்காலமாகக் கருதப்பட்டு வருகிறது.

இப்பழமைப் பற்று நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவாக உள்ளது. நியாயமான புராதனப் பெருமை, நியாயம் அற்ற அகங்காரம், அர்த்தமற்ற தூய்மை வாதம் முதலியவற்றிற்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது. இதற்கு காரணம் பொற்காலத்தைப் பற்றிய பெருமித உணர்வேயாகும்.

கிரேக்க இலக்கியங்களிலும் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் காணலாம். தமது ‘இன’ வரலாற்றுத் தொடக்கத்தில் இயற்கையின் மத்தியில் மக்கள் இன்பமாக வாழ்ந்த பொற்காலம் ((Golden Age) ) ஒன்று இருந்தது எனக் கிரேக்க ஆதிக்கவிகளே நம்பினர்.

aandan adimyஇறுதியாக ஒன்று கூறலாம். பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. அரசியல் அதிகாரத்தை நாடும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் மொழி, இனம் ஆகியவற்றின் பழைய பொற்காலத்தை மக்களுக்குக் காட்டித் தம் கருமம் பார்க்கின்றனர். இலக்கிய சனாதனிகள் பொற்காலத்தைப் பிரமாணமாகக் கொண்டு ‘தொல்லாசிரியர் நல்லாணை’ என்ற பெயரில் தமது வலுவிழந்த கோட்பாடுகளை நிலைநாட்ட முயல்கின்றனர். இனவாதிகள், பொற்காலத்தைத் தமது சிறையில் அடைத்துக் காட்சிக்காக வைத்துப் பிழைக்கின்றனர்.

Karl_Marxஇவையெல்லாம் பொற்காலத்தைப் பயன்படுத்துவோர் பற்றியன. ஆனால் மக்களும் பொற்காலத்தைத் தமக்குப் பற்றுக்கோடாகக் கொள்வதுண்டு. முடியுடை மூவேந்தர் ஆட்சியும் உறந்தை போன்ற இடங்களிலிருந்த அறங்கூறவையங்களும் அக்கால மன்னர்கள் மக்கள் மீது திணித்த வர்க்க ஆட்சியையே காட்டுகின்றன. இரத்த உறவினராய் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த நேசபாசத்துடன் இயற்கையின் மத்தியில் வாழ்ந்த குலமரபுக் குழுக்களின் அழிவின் மீதே அரசுகள் ‘வர்க்க ஆட்சி’ ஏற்பட்டது. அந்த வர்க்கத்தின் வழிவழி வரும் இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர்.

ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. ஆகவே அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை யுடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு

Monday, July 26, 2010

Prof. K Kailasapathy

Evaluated with his peers

by R.S. Perinbanayagam and Sachi Sri Kantha

A life so full of achievement as Kailasapathy’s was not without its critics. Once when one of his critics made a particularly petty observation I was moved to remark ‘He is the only genius we have in Tamil studies’. My friend demurred at genius, but was willing to concede ‘He thinks a lot, and reads a lot’, about Kailasapathy.

Front Note by Sachi Sri Kantha

Prof. K. KailasapathyThis year marks the 75th birth anniversary of Tamil scholar Professor K. Kailasapathy, the founding President of the then Jaffna Campus, University of Sri Lanka. Born on April 5, 1933, Kailasapathy admittedly had a short life span and died on December 6, 1982. Due to his political affiliations with the unpopular Sirimavo Bandaranaike rule from 1970 to 1977 and politicking for administrative positions, Kailasapathy (while alive) had his pro- and anti-constituencies among Tamils. That all trend-setters in their chosen disciplines have both the pro- and anti-constituencies is an established fact. And Kailasapathy was no exception.

Some among the Tamil columnists/memoirists recently have attempted to eclipse the damage done by Kailasapathy in undermining the practioners of traditional Tamil scholarship by calling them antiquated by exaggerating the merits of Kailasapathy’s scholarship. In political pole-climbing contests, Kailasapathy was also not without blame. Kailasapathy’s crass ingratitude to one of his mentors, Prof. S. Vithiananthan has been placed on record four years ago by physician-literratur C. Sivagnanasundaram (Nandhi), who knew the principals somewhat intimately. This document deserves translation from Tamil.

I present below two evaluations. The first (pro-Kailasapathy) view was from Professor R.S. Perinbanayagam, then at Hunter College of the City University of New York. This item, appeared in the Lanka Guardian of March 15, 1983. Shortly after Kailasapathy’s death, I met Professor Perinbanayagam (son of Handy Perinbanayagam, renowned Eelam educationist) at his New York apartment. For a few hours, we exchanged information on the politics and literature of Sri Lanka. As of now, this happened to be our one and only meeting. I was not aware then that he was intending to contribute this Prof. Kailasapathy eulogy to the Lanka Guardian. The second (anti-Kailasapathy) view was from me. After reading Prof. Perinbanayagam eulogy, I wrote to Profesor Perinbanayagam, expressing my dissent on elevating Kailasapathy to the ‘only genius’ status in Tamil studies. I don’t remember that I received any response from Prof. Perinbanayagam for my letter. To remember Professor Kailasapathy’s deeds, I provide below both the pro- and anti- Kailasapathy evaluations.

Kailasapathy

by R.S. Perinbanayagam (Hunter College of the City University of New York)

[courtesy: Lanka Guardian, March 15, 1983, pp. 17-18]

A life so full of achievement as Kailasapathy’s was not without its critics. Once when one of his critics made a particularly petty observation I was moved to remark ‘He is the only genius we have in Tamil studies’. My friend demurred at genius, but was willing to concede ‘He thinks a lot, and reads a lot’, about Kailasapathy.

It was not given to him to complete a full span of life, but within the short time allotted to him, he was not only a creative thinker and writer, but had a unique capacity to inspire others to write and create too. He was able to revitalise the Tamil literary culture from the moment he became editor of the Thinakaran, though he was ably assisted in this task by various gifted writers and critics. However, the vision of a progressive literative produced locally by the native sons and daughters and free from the silly romanticism and sentimentalism of the Tamil writers of the popular Madras journals and a critical sensibility to nourish it was his alone. In his student days at Jaffna Hindu College and Royal College, this vision began to take shape and it was clear to him that the emergence of a strong critical tradition was essential for the vision to be given reality. He began to train himself in the critical tradition of other literary cultures besides his own and inspired others to follow suit as well. In these tasks he was much ahead of his contemporaries and perhaps even of his teachers. When the opportunity came his way to put these ideas into effect, he seized it with alacrity. It was a bold venture in the late fifties and early sixties for an editor of a leading Colombo newspaper to publish work that was decidedly leftist in orientation. But boldness and the courage of his convictions were never wanting in Kailasapathy and with this gesture he launched forth a veritable literary renaissance in Tamil writing in Sri Lanka.

It is not his administrative and cultural leadership that will be remembered in the years to come, however, considerable though his achievements in this field were. Rather, it is his own creative work that will be considered, in many ways as pathfinding ones. His early interest in the emergence of a critical tradition in Tamil eventually lead him to write one of the first books on literary criticism. I believe he also taught a course on practical criticism for a long time in both the Peradeniya and Jaffna campuses. This work is a very erudite and sensitive one and is notable for its capacity to intermarry the Tamil traditions of critical inquiry with European ones. There is no slavish imitation of the European tradition, but nonetheless a clear understanding of the work of the great George Lucasz is evident. This breadth of perspective he was to bring to the tasks of reviewing and criticism that he produced too. Many writers were assessed by him in many of his articles and books and though some were no doubt hurt by his comments, they were rendered with a full sense of responsibility. Both the particular judgements that he brought to the work as well as the general standards that he upheld are likely to have a lasting impact.

The sense of an inner discipline and a sureness of touch that one finds in Kailasapathy’s work comes from a philosophical commitment that he made early in life. Historical materialism has within it a capacity to inspire unrealistic utopias and convert itself into creeds and dogmas. More significantly however it has generated a certain attitude to society and social change, to rights and obligations of society to its members, and above all a freedom from cant and hypocrisy. In many many parts of the world today, those who have been totally or partially touched by this philosophy of history and methods of analysis are in the forefront both of literary criticism and ‘culture criticism’. Kailasapathy’s work too derives a great deal of its strength and disciplines from a commitment to historical materialism. And it could be said that historical and literary studies in South Asia were crying to be rescued from the army of soothsayers and hosanna-mongers by such a discipline and commitment.

He was committed to the modern spirit of analytical examination of texts and to the emergence of new forms in writing in Tamil, but such a commitment was not achieved at the expense of knowledge and study of the classical tradition. His familiarity with ancient Tamil texts was second to none but in analyzing them in his many writings he was once again to bring not only a very modern critical sensibility, but also to demonstrate a skill at socio-historical analysis that a normal historian could well envy. The careful attention to the contemporary meaning of the texts, the measured judgement of the available evidence and an unwillingness to accept the patriotic judgement of far too many commentators in Tamil are all evident in his work. Literature was not an epiphenomenon for Kailasapathy, not certainly to be read closely for its textual integrity and left there. Nor did he hope to ‘save civilization’ by hurting for imagery and searching for telling metaphors. Literature was an expression of the ethos of the society in which it was created and the function of the critic was to engage in ideological exposure as well in judgement of literary quality. While many of his essays could be cited here, his Tamil Heroic Poetry alone would suffice. It is ostensibly a work in comparative literature. Kailasapathy analyses certain ancient Tamil works here in comparison to the European (Greek, Irish, Welsh) bardic tradition and comes to a number of noteworthy conclusions. In addition, he is able to make a significant contribution to the discovery of the socio-historical circumstances under which these ancient Tamil writings were undertaken. The intimate relationship between the kings of the Tamil land and the major and minor poets of the time, the economic and social contexts in which they functioned and the particular occasions in which poets wrote/sang their compositions are all revealed here. One is able to obtain a complete explanation of the poems themselves as well as certain features within the poems by the sociological circumstances that he describes. The cultivated exaggerations of various kings in ancient Tamil texts, their emergence as mythic figures, it turns out, were both a prosodic convention as well as the fulfillment of a contractual responsibility between the poet as a ‘hired hand’ and his royal patron. One can even go a step further and wonder whether the prosodic conventions themselves could have arisen in response to the sociological situation of the poet itself.

The informed and original analyses of ancient Tamil literary culture demonstrated Kailasapathy’s remarkable sociological competence. It was natural that this perspective and methodology should be used in other work too. It was indeed so used in nearly all his works, but two stand out in this regard, in my opinion. One, Adiyum Mudiyum (Foot and Head) is a fine philosophical/sociological analysis of certain Tamil religious texts and practices. The latter is a very instructive example of his methodological sophistication. The terms in the title refer to Root (Adi) and Crown or Head (Mudi) and become a ruling metaphor for the analyses of ‘substructures’ and ‘superstructures’. The root metaphors, so to speak, are imaginatively related to a famous Hindu myth where Vishnu and Brahma contend to discover the ultimate root and crown of Siva and conclude that Siva is both rootless and crownless. He writes, ‘The story of the search for head and root, whether it is fully believed or not, functions as a symbol in our society’s belief system. Various confusions and shortcomings in our art and literature are the result of a belief in the idea of search for feet and heads.’

It is however in his Valvum Valipadum (Social Life and Religion among the Ancient Tamils) that one finds his most original and thought provoking contribution to the sociology of knowledge. In the preface to this work he wrote ‘I have tried to show that literary ideas as well as literary forms and techniques are outgrowths of given social forms.’ It is not only purely literary matters that concerned him in this work, but the larger gamut of religio-literary documents of the early Tamils. In many ways it is an exemplary analysis and if translated into English will undoubtedly obtain a very favourable response from the international sociological community. In the first chapter he traced the origins of the conceptions of god and religion among the ancient inhabitants of southern India with the aid of historical/archeological works and Tamil religio-literary texts. This is followed by chapters that very coherently interlace historical and anthropological data with the Tamil literary texts and tries to illuminate the latter.

In all of his work, Kailasapathy tries to rescue Tamil studies from the mindless chauvinism and a historical hagiography into which far too many Tamil scholars had taken it. Not for him the comfortable self-congratulations of the DMK school of writers, or the easy essays in Dravidianist hyperbole and political partisanship; rather, in the words, he used to dedicate one of his works to his former teachers, Prof. K. Kanapathipillai, he continued in his work ‘the traditional culture of the East with the methodology of the West’ and found his métier in it.

*****

Prof. Kailasapathy Critiqued

by Sachi Sri Kantha

July 10, 1983

Dear Dr. Perinbanayagam,

Hope you won’t be surprised to receive this letter from me. Recently I had the opportunity to read your article on Prof. Kailasapathy, which appeared in the Lanka Guardian of March 15, 1983. Sometimes, I get these issues by airmail, but sometimes they arrive in surface mail; so only last week, I received the March issues.

May I make some comments on your article? It is a thought-provoking contribution and I appreciate that you had sent it to Lanka Guardian for publication. However,

(1) For me, it seems that your article seems to be an eulogistic one; and what was missing was that you haven’t touched some of the weak points of Kailasapathy’s studies. By omitting this aspect, I feel that you have not done credit to the stamp of quality which Kailas was trying to integrate into the Tamil literature. What happened to the ‘literary criticism’ aspect of Kailas’ works? Are they without any flaws? I hope, certainly not.

(2) I question your remark, ‘He is the only genius, we have in Tamil studies.’ I personally feel that, it is more applicable to Fr. Thaninayagam, who contributed a lot of painstaking work for Tamil studies, on aspects of his,

a) Organizational ability to build up an International Tamil awareness. And Kailas got international recognition only after participation at the International Conferences held in Kuala Lumpur, Madras and Paris.[And, the role played by Kailas and his co-workers in downgrading the Jaffna Conference (1974) should not be overlooked. And he, being a political appointee and an appendage of Srimavo’s government didn’t do good to maintain his integrity as a student of Tamil studies at this particular conference. I personally consider this as the low-ebb of his career.]

b) Contribution to the educational literature in Tamil.

c) Compilation of bibliographic work on Tamil studies.

d) Editorial abilities to publish a reputed, research journal ‘Tamil Culture’ for a lengthy period.

May be, since he aligned himself with the Federal Party in the mid 1950s, he may not be agreeable to you as a pioneer of Tamil research.

How could you miss the pioneering aspects of Swami Vipulananda? What has Kailas produced, comparable to Swami’s ‘Yaal Nool’, which todate stands as the only evaluative piece of research work on Tamil music? And you could remember that Swami had the scientific background (with a B.Sc in physics), which none of the other Tamil scholars have not had.

Even the diverse contributions of Vithiananthan are quite impressive, not to be neglected. In terms of versatility of scholarship, I feel that contributions of Swami Vipulananda and Vithiananthan score high points in the Tamil studies, than the literary output of Kailas. It is a pity that even scholars of repute, like Prof. Indrapala have omitted to record the contributions of Swami, in his chapter on Tamil literature, in the ‘History of Ceylon’, vol.3, edited by K.M. de Silva. He even doesn’t mention the name of Yaal Nool in his essay. Shame on him! May be that these Tamil scholars (Kailas included) have neglected the music literature in Tamil completely, due to their limited knowledge (or ignorance, if I put it strongly!) in this art. I consider this as a glaring piece of omission in the critical analysis of Kailas too! Has Kailas done anything comparable to the painstaking work of Vithi’s like collecting, compiling and editing the folk music literature of Tamil peasants of Ceylon?

If we consider the traditional trichotomous classification of Iyal [prose] , Isai [music] and Nadagam [drama], I could see that Vipulananda contributed to Iyaland Isai aspects of Tamil literature. Vithi had contributed in all three aspects of Tamil literature; while Kailas’ works are limited only to the Iyal aspects of Tamil literature.

May I know your comments on the views I’ve mentioned here? What I’m contesting is your categorical statement, “only genius”. May be, Kailas could be classified as one of the trend-setters of Tamil studies, but not to be elevated to the level of only genius. With kind regards.

Yours sincerely,

Sri Kantha

P.S: I’m sending to you, under separate cover, a copy of my book ‘Tamil Isai Theepam’ which had recently been selected for Sahitya Prize award (for research) for the year 1977, five years after its release

சோஷலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி : லெனின் மதிவானம்


0


Pathivu Toolbar ©2010thamizmanam.com

பேராசிரியர் கைலாசபதி மறைந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அவரது வயதினையொட்டி (14-ஏப்-1933) பார்க்கின்றபோது இவ்வாண்டு வெள்ளி விழாவுக்கான ஆண்டாக காணப்படுகின்றது. இவ்வேளையில் கைலாஸின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களில் இன்றைய நாளில் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்ஸிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கிய கதியில் கைலாசபதியின் ஆக்கங்கள் செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.

இவ்வாறாக கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். இது ஒரு புறமிருக்க கைலாசபதியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும் சோசலிசத்துக்கான பாதையில் அவரது பங்களிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை துரதிஸ்டமான ஒன்றே. அமரர் சுபைர் இளங்கீரன் அவர்கள் கைலாசபதியின் அரசியல்| என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுக கபட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகால தேவையாகும்.

கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி – கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் – சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் – சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 – 1982) – க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 – 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது.

சோசலித்திற்கான பாதை பற்றி கைலாசபதியின் பார்வையை தெளிவாக்கிக் கொள்வதற்கு அன்றைய சூழலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்த ஸ்தாபன பிரச்சனைகள் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது.

உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மார்ஸியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து. அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது|.

அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன் கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியதுடன் அதன் பிண்யில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது அந்த வகையில் மார்க்ஸிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்க்ஸியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. இது தொடர்பில் ஏங்கல்ஸின் பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும்.

18ம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால், அக்காலத்pல் இயற்கை விஞ்ஞானங்களை காட்டிலும் இயந்திர இயக்கஇயக்க விஞ்ஞானம் விஞ்ஞானம் ஒன்று தான் அதாவது பூமண்டலத்தை சேர்ந்த கனபொருட்களின் இயந்திர (சுருங்க சொன்னால் பூமியின் ஆகர்்ண சக்தியை பற்றிய ஒரு இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் திட்டமான முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தது. அக்காலத்தய இரசாயன விஞ்ஞானம் குழந்தை பருவத்தில் தான் இருந்தது. எரியும் காற்று என்று வர்ணிக்கப்பட்ட |பிளாஜிஸ்தான்| தத்துவரூபத்தில் அன்று இரசாயனம் இருந்து வந்தது.

உயிரியல் விஞ்ஞானமோ கட்டில் குழந்தையாய் கிடந்தது. தாவர மிருக ராசிகளை ஏதோ மேலோட்டமாக பரிசீலித்து வந்தார்கள், அவ்வளவு தான். இயந்திர இயக்கத்தின் காரணமாகத்தான் இவை (தாவர மிருகராசிகள்). உயிர் பெற்று ஜீவிக்கின்றன என்று விளக்கினார்கள். தெகார்த்தோவுக்கு மிருகங்கள் எவ்வாறு இயந்திரங்களாகத் தென்பட்டனவோ அதே மாதிரி 18ம் நூற்றாண்டின் லோகாயத வாதிகளுக்கு மனிதன் ஒரு இயந்திரமாக தென்பட்டான்.|2

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் தோன்றிய காலம் முதலாளித்துவம் தமது வாலிப வயதை எட்டியிருந்த காலப்பகுதியாகும். அக்காலப் பகுதியானது மார்க்ஸிய சிந்தனை பிறப்பெடுத்து அது தன்னை ஸ்தாபனமாக நிலைநிறுத்திக் கொள்கின்ற ஆரம்ப காலப்பகுதியாக காணப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்த காலப்பகுதில் மார்ஸிய சித்தாந்தமானது உலக வரலாற்று செல்நெறியில் பிரதான தாக்கத்தினை ஏற்படுத்தியதுடன் அது சமூக மாற்றத்திற்கான பலமான சித்தாந்த தளத்தினையும் ஸ்தாபன அமைப்புகளையும் உருவாக்கியிருந்தது. 1917 ஆம் ஆண்டு இரசிய புரட்சியானது உலக வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கும், அவர்களை சார்ந்து நின்ற நேச சக்திகளுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். அவ்வாறே சீன புரட்சியானது உலகில் பெருந்தொகையான மக்களை புரட்சிகரமான அரசியல் ஆளுமைக்குள் கொண்டுவந்தது. இதனையொட்டி உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த கோட்பாடுகளும் போராட்டங்களும் அதனடியாக எழுகின்ற ஸ்தாபன அமைப்புக்களும் அல்போனியா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா, லாவோஸ், தென் யேமன், நீக்கரகுவா ஆகிய நாடுகளில் புரட்சிகர அரசியல் ஆளுகையின் கீழ் வந்தது. இது மனிதனையும், சமுதாயத்தையும் புதிய கோணத்தில் இட்டுச்சென்றது.

உலகின் ஏனைய பாகங்களை பொறுத்த மட்டில் இக்காலப்பகுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான பலமான ஸ்தாபனங்கள் உருப்பெற்று வந்தன. ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் பாஸிசப் போக்குகளை எதிர்த்து 1934 ஆம் ஆண்டிலே மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் இயக்கங்களும் நடாத்தியது. ஸ்பெயின் தேசத்திலே 1936ல் உள்நாட்டு யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட பாஸிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தையும் வெகுஜன முண்ணணியையும் கட்டி எழுப்புவதில் ஸ்பானிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மும்முரமாக உழைத்து வந்தது. எமது தலைமுறையில் வியட்நாம் எவ்வாறு உலக மக்களது மனச்சாட்சியை உலுப்பி ஜனநாயக வாதிகளையும் தேசபக்தர்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் ஒரு முகப்படுத்தியதோ அதே போன்று முப்பதுகளில் சின்னஞ்சிறிய ஸ்பெயின் உலகின் நல்லோரை நாலா திசைகளிலிருந்தும் ஈர்த்தது. எழுத்தாளர்கள் இலட்சிய பற்றுடன் ஸ்பானி் குடியரசை ஆதரித்தனர்.
…..
இக்காலகட்டம் அரசியல் விழிப்புணர்வை இலட்சக் கணக்கானோருக்கு ஏற்படுத்திய காலப்பகுதியாகும். ஸ்பானியப் போரில் சர்வதேசப் படைப்பிரிவு ஒன்றின் தளபதியாய்ச் சமர் செய்த பி.அலெக்சாந்தர் கூறியிருப்பது போல, இக்காலப்பகுதியிலே, தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் போராட்டங்களிலும் எத்தகைய பரீச்சயமும் இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் கூட திடீரென அரசியல் தெளிவும் செயல் ஊக்கமும் பெற்றவராய்ப் பாஸிஸத்துக்கு எதிரான மகத்தான போர்களத்தில் லட்சிய வெறியுடன் குதித்தனர்.

1930 களைத் தொடர்ந்து சோவியத் ர்யாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த பாதையிலிருந்து நீங்கி, பிறிதொரு வர்க்க நலனை பிரதிபலிப்பாக மாறியது. உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் நலனையும் பிரதிபலிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் மேல் அமர்ந்து ஆணையிடும் கட்சியாக தோற்றம்பெற்றது. சோவியத் ர்யாவால் வீழ்சியுற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளே இக்கால சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இருந்தனர். இதன் உடன் விளைவாக புரட்சியை அடுத்த சோசலிஸ சமூக வலையமைப்பில் சுரண்டப்படும் வர்க்க அமைப்பை முற்று முழுதாக ஒழிப்பதற்காக பிரயோகிக்கபட வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் மக்கள்மேல் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமாக மாறியது. மாஓ இத்தகைய போக்குகளை விமர்சனத்திற்கு உட்படுத்தியதுடன் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு பொது எதிரிக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தமது எழுத்துக்களின் ஊடாக எடுத்துக்காட்டியுள்ளார்.

புரட்சிக்கு பின்னர் சோவியத் ர்யாவில் ஏற்பட்ட மாற்றங்களும் குருசேவ் முதல் கொர்பக்சோ வரையில் முன் வைக்கப்பட்டு வந்த தீவிர வாத சிந்தனைகள் யாவும் சோவியத் ர்யாவின் ஆட்சி தொழிலாள வர்கத்தின் கையிலிருந்து மாறி பூர்சுவா வர்கத்திற்கு மாறியதன் உடன் விளைவாக தோன்றியதே சோவியத் சமூக ஏகாத்தியமாகும்.

1962 ஆம் ஆண்டை தொடர்ந்து சோவியத் ர்யாவால் ஏற்பட்ட சமாதான முறையில் பாராளுமன்றத்தை கைப்பற்றல் என்ற நிலைப்பாடானது சர்வதேச தொழிலாள வர்க்கம் குறித்த எவ்விதமான அக்கறையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட சோவியத் ர்யாவின் சுயரூபத்தை காட்டி நிற்கின்றது. இது தற்செயல் நிகழச்சியல்ல, வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் சர்வதேச ரீதியான கம்யூனிஸ்டுகளின் தியாகங்களையும், உறுதிமிக்க போராட்டங்களையும் கூட நாம் உலக சரித்தத்தில் காணலாம். ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த காலகட்டமும், சீனாவின் புரட்சிகர அரசியல் நிலைப்பாடுகள் தக்க எடுத்துக்காட்டுகளாகும். இவ்வணியினர் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் பிண்ணயில் உழைக்கும் மக்கள் தான் சார்ந்த பதாகையை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து செல்வதற்காக தத்துவார்த்த ஸ்தாபன வேலைத்திட்டங்களை முன் வைத்தனர்.

இந்தக் காலச்சூழலில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள் ஏனைய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பாதிக்க தொடங்கின. அதன் வெளிப்பாடாக தோன்றியதே மொஸ்கோ, சீன சார்பு முரண்பாடுகளாகும். அதன் எதிரொலியை நாம் இலங்கையிலும் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கை பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட ஆழமான அரசியல் தத்துவார்த்த வாதங்கள் காரணமாக பொதுவுடைமை இயக்கம் 1964 இல் பிளவடைந்தது. இதன் விளைவாக அன்றைய சூழலில் முற்போக்கு அணியை வீறுடன் முன்னெடுத்த அறிஞர்களான பிரேம்ஜி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, அகஸ்தியர் போன்ற சமாதான வழியில் பாராளுமன்ற பாதை என்ற தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைத்தது. மொஸ்கோ சார்பை ஆதரித்து நின்றனர்.

சர்வதேச ரீதியில் உழைக்கும் மக்கள் அரசியலிலும் கலை இலக்கியத்திலும் பல சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கி நின்ற இன்றைய நாளில் இந்த முரண்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பல கருத்து மாறுபாடுகள் தோன்றின. இந்த சூழலானது பல புத்திஜீவிகளை அறிவு தடுமாற்றத்திற்குட்படுத்தியது. இவ்வாறானதோர் சூழலில் இத்தகைய சர்வதேச அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை கைலாசபதி அவர்கள் எவ்வாறு அணுகினார். சோலிசத்திற்கான பாதை குறித்து அவர் எத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்தார் என்பது முக்கியமானதோர் வினாவாகும்.

கைலாசபதியின் பெரும்பாலான சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் 1979 – 1982 ஆண்டுகளின் காலப்பகுதியில் ஏற்பட்டவையாகும்.

அன்றைய நாளில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடன் இணைந்த பிற்போக்கு சக்திகளும் உலக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அக்காலச் சூழலில் சோலிச வேடமணிந்து சோவியத் ர்யாவும் உலக மேலாதிக்கத்திற்கெதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சோவியத் ர்யா குறித்த கைலாசபதி அவர்களின் பார்வை பின்வருமாறு பிரவாகம் கொண்டிருந்தது.

கடந்த சில வருடங்களாக உலனின் பல பாகங்களிலே சோவியத் யூனியன் ஊடுருவல் செய்து, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. சில இடங்களிலே தனது சூத்திர பாவைகளான கியூபா, கிழக்கு ஜேர்மனி, வியட்நாம் முதலிய நாடுகளின் படைகளையும் ஆலோசனைகளையும்| யுத்த தளபாடங்களையும் பயன்படுத்தி தனது செல்வாக்கினை ஸ்திரப்படுத்தி வந்திருக்கின்றது. மிக அண்மையில் ஆப்கானிஸ்தானில் தனது ஆதிக்கத்தை ரொம்பவும் அப்பட்டமாக, எதுவித ஒழிவு மறைவுமின்றி நடத்தி வருகிறது. பல நாள் ஏறிய குதிரை ஒருநாளைக்கு சறுக்கும்| என்பது போல, இப்போது ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் பரிதாபகரமான நிலையில் சிக்கி கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சிறிது சிறிதாக ஆரம்பித்த சோவியத் எதிர்ப்பு நாளுக்கு நாள் வேகமடைந்து தற்சமயம் தலைநகரான காபூலுக்கே சென்றுவிட்டது. தொடக்கத்திலே எதிர்ப்பு காட்டியவர்களை பிற்போக்குவாதிகள் என்றும், மதவாதிகள் என்றும் அலட்சியமாக தாக்கித் தலைமையில் உள்ள பொம்மை அரசாங்கம் வர்ணித்தது. எல்லைப்புற மாவட்டங்களிலே பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் சீனாவும் கிளர்சியாளருக்கு உதவி வழங்குவதற்காக பழி சுமத்தியது. ஆனால் அந்த அபாண்டப் பழி எடு;படவில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தானிய நகரங்களிலும், கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய தேச பக்தர்கள் நெஞ்சுரம் மிக்க மலைவாழ் மக்கள், தராக்கி ஆட்சியையும் அதற்கு பக்கபலமாக உள்;ள சோவியத் யூனியனையும் முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கினர். அங்குள்ள சோவியத் ராணுவ ஆலோசகர்கள் அதிகாரிகள் பற்றி முன்னர் அப்பகுதியில் கூறியிருக்கின்றோம்.

சில நாட்களுக்கு முன் தலைநகரான காபூலிலேயே பட்டப்பகலில் சண்டை நடந்திருக்கின்றது. நகரின் எல்லையில் உள்ள பல – ஹிசார் கோட்டையில் நிலை கொண்டிருந்த அரசாங்க இராணுவப்படையினர் சில பிரிவுகள் கிளர்ச்சி செய்ததாகவும் அதற்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுந்ததாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் கூறுகின்றன. கோட்டையிலிருந்த கிளர்ச்சி படைகளை மடக்கி அடக்குவதற்காக சோவியத் மீ – 24 ஹெலிகெப்டர்கள் றொக்கெற்றுக்கள் தாக்கினவாம். அதே சமயத்தில் சோவியத் டாங்கிகள் கோட்டை மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தின. சுமார் நான்கு மணிநேரம் நடந்த கடும் சண்டையின் பின் கிளர்ச்சியாளர்கள் அகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இரு தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

இன்று சோவியத் யூனியன் சிதைந்து சின்னாபின்னமாகியதற்கு அது கடந்த காலங்களில் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளே காரணமாகும். சோலிச போர்வையில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில், ஆசிய ஆபிரிக்க நாடுகளில் சோவியத் ர்யா தமது மேலாதிக்க நலனை முன்னிறுத்துவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயற்பட்டு வந்தமையை கைலாசபதி சிறப்பாகவே அடையாளம் காட்டியிருக்கின்றார். இது அவரது மார்க்ஸிய லெனினிய மாஓ சேதுங் சிந்தனை வழிப்பட்ட தெளிவை எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு காலச் சூழலில் சோவியத் ர்யாவின் மேலாதிக்க தன்மையானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விஞ்சு நிற்கும் அளவிலும் மாறியது. தோழர் மாஓ சேதுங் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் பயங்கரத் தன்மையை சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அன்று தற்காப்பு நிலையிலும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தாக்கும் நிலையிலும் அதாவது தனது உலக மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் போக்கிலும் வேகம் காட்டி நிற்பதாக கணித்துக் கொண்டார். அதன் அடிப்படையில் சோவியத் யூனியனது அபாயத்தை உலக மக்கள் புரிந்து கொள்ளும் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய சமூகக்கடமை மார்க்ஸிய புத்திஐPவிகளை எதிர்நோக்கியிருந்தது. கைலாசபதியின் சர்வதேச நிகழ்வுகள் பற்றிய அரசியல் விமர்சனங்கள் மேற்கூறிய நோக்கின் அடிப்படையிலேயே அன்று அமைந்திருந்தமை அக்கட்டுரையின் வாயிலாக இனங்கண்டு கொள்ள முடிகின்றது.

கம்பூச்சியா போன்ற நாடுகளின் விடுதலைப் போரின் அவசியம் குறித்து எழுதிய கைலாசபதி அவர்கள் அந்நாடுகளில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு கைக்கூலிகளாக தொழிற்பட்ட நாடுகளும்; எத்தகைய காட்டு மிராண்டி தனமான மிலேச்ச தாக்குதல்களை அந்நாடுகளில் நிகழ்த்தின என்பது குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

இந்தோசீனத்தில் வியட்நாம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய காலமுதல்ஈ அதாவது கம்பூச்சியா லும் லாவோசிலும் சீனாவின் எல்லை புறங்களிலும் இராணுவ தாக்குதல்களை நடத்த தொடங்கிய நாள் முதல் ஒரு செய்தி அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதுதான், வியட்நாம் புதியரக நச்சுப் புகையையும் ஒருவிதமான கதிர்வீச்சையும் பயன் படுத்துகிறது என்பதாகும். வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்தி படைகளும் நச்சு திராவகக் குண்டுகளையும் பயிர் அழிப்பு விங்களையும் பெருமளவில் பயன்படுத்தின. அது பற்றி அறிந்த உலக மக்கள் மகா பாதகமான அச்செயலை கண்டித்தனர். அமெரிக்கா பயன்படுத்திய நச்சு திராவகங்கள் தென் வியட்நாம் வீழ்சியுற வட வியட்நாமிய படைகள் வசம் சேர்தன. அவற்றையும் வியட்நாமியர் அப்போது கம்பூச்சியா லாவோஸ் ஆகிய நாடுகளில் தேச பக்தி படைகள் தங்கியிருக்கும் பிரதேசங்களை அழிப்பதற்கும் பிரயோகிக்கின்றனர். வியட்நாமிய எல்லை பிரதேசங்களில் தற்பாதுகாப்பிற்காகச் சீன படைகள் பதிலடி கொடுக்க முற்பட்ட பொழுதும் இப்புதிய விக் கருவிகளை வியட்நாமியர் பரீட்சித்துப் பார்ததாகக் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் கவனமாக அலசி ஆராய்ந்த மேற்கு நாடுகளின் நிருபர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வியட்நாமியர் மூலமாக சோவியத் ராணுவத்தினர் சில நவீன நவீன கருவிகளை தென்னாசிய மக்கள் மீது பரீட்சித்துப் பார்க்கின்றனர். இந்தோனேசியா, விக் கருவிகளின் பரிசோதனை களமாக ஆக்கப்பட்டுள்ளதா? 5 என சோவியத் யூனியனின் எதேச்சிகார போக்குகளை தெளிவாக அடையாளம் காட்டியதுடன் சோவியத் ஆலோசனையின் பேரில் வியட்நாம் போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்ட பொருளாதார திட்டம் குறித்தும் அதன் தோல்வி குறித்தும் வெளிப்படுத்துகின்ற கைலாசபதி இந்நாடுகளில் ஆமலாதிக்க பேரரசை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தோ சீனா சமஸ்டி|என்ற பெயரில் ஏனைய நாடுகளை அடக்கி வைப்பதற்காக பெரியதோர் இராணுவப்படையை உருவாக்க நேர்ந்ததையும், அதன் பிண்ணணியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின் தங்கிய சமூகத்தில் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்டமை குறித்தும் அமெரிக்காவில் சி.ஐ.ஏ எவ்வாறு தமது மேலாதிக்க பணிகளுக்கு ஏதுவாக இருந்ததோ அதே போன்று சோவியத் ர்ய ரகசிய ஒற்றர் சேவையும் (கே.ஜி.பி) சோவியத் அடக்குமுறைக்கு ஏதுவாக அமைந்திருந்தது பற்றியும் எழுதியுள்ளார். இவை யாவற்றிற்கும் மேலாக இந்நாடுகளிலிருந்து சிறுபான்மையினர் வெளியேற்றப்பட்மை பற்றியும் அவர் சுட்டிக் காட்டத்தவறவில்லை.

கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வைகளில் முக்கியமுக்கியமானது இந்தியா பற்றியதாகும். சோவியத் யூனியன் – இந்திய உறவுகள் பற்றியும் அதனடியாக எழுகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்;குகள், அதனால் உருவாக போகின்ற தீய விளைவுகள் பற்றியும் கைலாசபதியின் பார்வை பிரதானமானதாகும். உலக அரங்கிலே இந்தியா சோவியத் யூனியனின் ஊதுகுழலாக செயற்படுவதை உலகம் அறிந்துள்ளது. சர்வதேச மாநாடுகளில் ஏனைய மூன்றாவது உலக நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து இந்திய நிலைப்பாடு வேறுபடுவதும் சோவியத் செல்வாக்கினாலேயாகும். இதற்கு அடிப்படை பொருளாதார பிடியே என்பது பலரும் அறிந்ததே. அத்துடன் இராணுவத்துறையில் சோவியத் யூனியனே இப்பொழுது முதலாம் நம்பர் சப்ளையராக விளங்குகின்றது. அண்மையில் இந்திய விமானப்படை சோவியத் யூனியனிலிருந்து முதலாவது தொகுதி மிக் – 23 ரக விமானங்களைப் பெற்றுள்ளது. அவற்றுடன் ர்யாவில் பயிற்சி பெற்ற விமானிகளும் திரும்பி உள்ளனர். பல கோடி பெறுமதியான மிக் – 23 ரக விமானங்களை இந்தியா அடுத்த சில வருடங்களுக்குள் பெற்றுக்கொள்வதற்கு உடன் பாடாகியுள்ளது. பிற நாடுகளிலுள்ள தளங்களை தாக்கவல்ல இவ்விமானங்கள் ர்யர்களின் ஆலோசனைப்படி பெறப்பட்டன.

இந்திய விமானப்படை இப்பொழுது முற்று முழுதாக ரஷ்ய விமானங்களை கொண்டதாகவே அமைந்துள்ளது. இத்தகைய கழுத்துப் பிடிப்புகளினாலேயே இந்தியாவின் குரல் உலக அரங்கில் ர்யாவின் எதிரொலியாக இருப்பதை பலரும் அவதானித்துள்ளனர். நடுநிலைமை பற்றி திருமதி இந்திரா காந்தி எவ்வளவு தான் உரக்க கூறினாலும் இந்தியா ர்யா பக்கம் சார்ந்திருப்பதை மூன்றாவது மண்டல நாடுகள் நாளுக்கு நாள் உணர்ந்து வருகின்றன 6 என விபரித்து விளக்குகின்ற கைலாசபதி இந்தியாவில்; சோவியத் யூனியன் மேற்கொண்டுள்ள அரசியல் வலிந்து தாக்குதலை இந்தியாவில் உருவாகிவந்த இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் எவ்வாறு இனங்கண்டு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

சோவியத் ர்யாவின் சமூக ஏகாதிபத்தியம் குறித்து விமர்சிக்கின்ற கைலாசபதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் குறித்து விமர்சிக்க முற்படுவது அவரது தீட்சாண்யமிக்க பார்வையை எடுத்துக் காட்டுகின்றது. கைலாசபதி சோவியத் – அமெரிக்க மேலாதிக்க போட்டியால் யுத்த ஆபத்து குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளை என்றுமில்லாதவாறு திடீரென அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஆயிரத்து எழுநூற்று எண்பது கோடி டொலர் அமெரிக்க பாதுகாப்புக்குச் செலவிடப்படும். அடுத்த வருடம் இரண்டாயிரத்து இருநூற்று இருபது கோடி டொலர் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதத்தில் சென்றால் ஐந்து வருடத்தின் பதின்மூவாயிரம் கோடி டொலர் இராணுவத்திற்கு செலவிடப்படும்.
……..

ஏற்கனவே வலதுசாரி அரசாங்கங்கள் பதவியில் இருக்கும் நாடுகளில் கூட இராணுவ ஆட்சிகளை நிறுவுவதற்கு அமெரிக்க முனைந்துள்ளது. தென் கொரியா, பாகிஸ்தான், தாய்லாந்து, எல்சல்வடோர் முதலிய நாடுகளில் அமெரிக்காவின் கைங்கரியங்களைக் காணக்கூடியதாய் இருக்கின்றது. அணிசேரா நாடுகளின் ஒற்றுமையை குலைத்து தனக்கு வால்பிடிக்க கூடிய சில தேசங்களை தனது செல்வாக்கிற்குள் வைத்திருக்க ர்யா பெரும்பாடு படுகின்றது. இந்தியா, சிரியா, வியட்நாம், கியூபா முதலிய வால்பிடிகள் இதற்கு ஒத்தாசை புரிகின்றன.7 இரு மேலாதிக்க வல்லரசுகளின் போட்டியின் காரணமாக மூன்றாம் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு கலாச்சார ஊடுருவல் குறித்து எழுதுகின்ற பேராசிரியர் அவை மனித குலத்தையே அழிக்க கூடியதோர் விசமியாக மாறியுள்ள அபாயத்தையும் எடுத்துக் காட்டுகின்றார். அத்துடன் இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான போட்டியானது எவ்வாறு மூன்றாம் உலக போரை தோற்றுவிக்ககூடிய அபாயத்தை கொண்டுள்ளது என்பது பற்றியும் அதனை முறியடிக்க கூடிய மக்கள் இயக்கங்கள் எவ்வாறு உலகளாவிய ரீதியில் தோன்றி வருகின்றன என்பது பற்றிய அவரது பார்வை விசாலமானது.

இந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் இவ்வல்ரசுகளுக்கிடையில் சிக்காமல் தமக்கான பொருளாதாரத்தையும் சுதந்திரத்தையும் தாமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதனையும் தமது கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கைலாசபதியின் ஈரான், ஈராக் யுத்தம் தொடர்பான பார்வை முக்கியமானது. சுருங்க சொன்னால் அமெரிக்க ர்ய (சோவியத்) போட்டா போட்டி ஈரானை வெகுவாக பாதிக்கிறது. அதிதீவிரமான மதவாதியாக தோற்றமளித்தாலும் அயதொல்லா கொமெனி நடைமுறையில் பல விசயங்களில் நடுநிலைமை வகித்து வந்திருப்பது கவனிக்க கூடியது. நாட்டின் ஸ்திரப்பாட்டில் கொமெனிக்கு மிகுந்த கவனம் உண்டு. அவர் தான் முரண்படும் சக்திகளையும் குழுக்களையும் பிரிவுகளையும் ஒருவாறு இழுத்து வைத்துக்கொண்டிருக்கின்றார். பலர் நினைப்பது போல கொமெனி அராஜகவாதியல்ல. தான் தந்திரம் மிக்க அரசியல் தலைவர் என்பதை கொமெனி தக்கவாறு காட்டியுள்ளார்.

ஆனால் ஈரானின் பிரச்சனைகளை முழுமையாக எதிர்நோக்கவும் நாட்டை முன்னெடுத்து செல்லவும் கொமெனி மாத்திரம் போதாது. அவரது மதியழகும் இராஜதந்திரமும் மாத்திரம் போதாது|8 என்ற வகையில் ஈரான் மேலாதிக்க வல்லரசு போட்டியில் சிக்காது சுதந்திரமாக செயற்பட்டு வந்தமையையும் ஈராக் அவற்றினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளதையும் அதன் இறுதி விளைவாக வளைகுடா யுத்தத்தை ஆதரிக்க நேர்ந்ததையும் கைலாசபதி தீட்சயணத்துடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

இதே காலப் பகுதியில் இவ்விரு வல்லரசுகளின் நடைமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பிறப்பெடுத்த மக்கள் இயக்கங்களையும் அதன் உறுதிப் பாட்டையும் கைலாசபதி அடையாளம் காட்டத் தவறவில்லை. உதாரணமாக சீனா எத்தகைய தடைகளையும் தாண்டி பாட்டளி வர்க்க அரசியல் நலன்சார்ந்த பதாகையை எவ்வாறு முன்னெடுத்து செல்கின்றது என்பது குறித்தும், அரசியல் ஸ்தாபன நடைமுறையில் எத்தகைய நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றது என்பது பற்றியும் அழகுற விளக்குகின்றார். அத்துடன் சீனா தன்னை இழந்து கொள்வதாக வகையில் அமெரிக்காவுடன் எத்தகைய உறவுகளை வைத்திருந்தது பற்றியும் அது எத்தகைய நிதானமான தன்மையினை கொண்டிருந்தது பற்றியும் அவரது சீனாவின் அமெரிக்க உறவு நிதானமானது| என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும். அதாவது நம்மில் பல புத்திஜீவிகள் தமது சூழலில் காணப்படும் பிரச்சனைகளிலிருந்து விலகி தொலைதூர தீர்வுகளுக்குள் ஒதுங்கி அதன் பிண்ணணியில் தமது கம்பீரத்தில் வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடிக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவர்களின் போக்கில் சர்வதேசியம் என்பது தமது சமகால சூழலிலிருந்து தப்பியோடுகின்ற போக்காகவே காணப்பட்டது. அதனால் கைலாசபதியை பொறுத்தமட்டில் சர்வதேச அரசியல் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்ததுடன் அவை எவ்வாறு இலங்கை அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது என்பது பற்றி தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றார்.

1977ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்தது. அதற்கு முன் பதவியிலிருந்த ஐக்கிய முண்ணணி அரசு இழைத்த மக்கள் விரோத தவறுகளை காரணமாக கொண்டும், உள்நாட்டு, வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் பலத்த ஆதரவுடனும் அக்கட்சி அதிகாரத்திற்கு வந்தது. விதேசிய சார்பும் உள்நாட்டு உயர்வர்க்கத்தினருக்கு பயன்மிக்க பொருளாதார அரசியல் கொள்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன.9 அவ்வகையில் 1977இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் மேற்குறித்த இந்த போக்கு இலங்கை அரசியலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதனை கைலாசபதி அவர்கள் இன்று இந்து சமுத்திரத்தில் குறிப்பாக தென் இந்தியாவில் இலங்கை முக்கியமான பகடைக்காயாக அமெரிக்காவால் உருட்டப்படுகின்றது. சோசலி வாடையே இல்லாமல் இந்நாட்டை உருமாற்றி அமைக்கும் பரிசோதனையை உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் இலங்கையில் இப்போது மேற்கொண்டு வருகின்றார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோற்றத்தை முற்றாக மாற்றாமலும், தென்கொரியா, தாய்லாந்து போல ராணுவ சர்வாதிகார ஆட்சிமுறைகளை புகுத்தாமலும் நாசூக்காக தனியார்துறை மேலாதிக்கம் செய்யும் பொருளாதார அமைப்பையும் ஜனாதிபதி தனிசெல்வாக்கு வகிக்கும் பாராளுமன்ற முறையையும் வைத்துக்கொண்டு இலங்கையை அமெரிக்க ஏகாதிபத்திய வட்டத்திற்குள் இறுக்கமாய் பிடித்துக்கொள்வதே மேற்கூறிய பரிசோதனையின் குறிக்கோளாகும் என இலங்கை அரசியலில் எவ்வாறு விதே நலனும் உள்நாட்டு உயர் வர்க்கத்தினரின் நலனும 10 பேணப்பட்டு வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறே அன்று இலங்கை அரசியலில் துளிர்விட்டு கிளைகளாக மாறிக்கொண்டிருந்த ட்ரொட்ஸ்கியவாதம, சேகுவராவாதம,;நவீன திரிவுவாதம் முதலிய தத்துவார்த்த ஸ்தாபன நடவடிக்கைகளின் அம்மணமான சந்தர்ப்பவாதத்தையும் அதிகார பதவி மோகத்தiயும் தமது அரசியல் கட்டுரைகளின் ஊடாக தெளிவுபடுத்தியதுடன் மாறாக மார்க்;ஸிய லெனினிய மாஓ சேதுங் சிந்தனையின் அடியாக எழக்கூடிய அரசியல் போக்கினையும் அதன் மக்கள் சார்பு பண்பினையும் தமது ஆய்வுகள் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஆக கைலாசபதியின் தேசிய சர்வதேசிய அரசியல் பார்வை குறித்து நோக்கின்ற போது சமகால சர்வதேச அரசியல் பற்றிய அவரது பார்வையானது நவீன திரிபுவாதமாக உருவாகியிருந்த சோவியத் யூனியனது நிலைப்பாட்டில் நின்றோ அல்லது திருடி வாழும் பண்பு நீங்கலாக சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மார்க்;ஸிய கல்லறைக்கு சென்றுவிட்டது என்ற விரக்திமயப்பட்ட கோட்பாட்டை அமெரிக்க சிந்தனையின் பின்னின்று முன்வைக்கவோ அவர் முனையவிi;லை. மாறாக இந்த நெருக்கடியான சூழலை விமர்சனத்துக்குள்ளாகி அதனூடு மார்சிய லெனினிய மாஓ சேதுங் தத்துவார்த்தை அதன் ஸ்தாபன நடைமுறையுடன் அணுகி தீர்வுகளை முன்வைக்கின்றனர். இப்பின்னணியிலே கைலாசபதி சீனச் சார்பு அரசியல் பாதையை முன்னெடுத்தனர். அந்த வகையில் அன்று உழைக்கும் மக்கள் நலன் சார்ந்து நின்ற மக்கள் அரசியலுக்கான பலமான அடித்தளத்தை வழங்கியவர் கைலாசபதி என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.

இன்று பின்னோக்கிப் பார்க்கையில் கைலவாசபதியின் நிலைப்பாடு சரியானது என்பது நிருபனமாகியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் கெர்பச்செரல் என்பவரைத் தலமைக்கு வரவழைத்து, அவரூடாகதர் கட்சியைக் கலைக்கும் பிரகடனத்தை வெளிப்படுத்தியிருந்தது. குட்சித் கலைப்பு கொர்பச்சேல் என்ற தனிநபரின் துரோகமல்ல. கட்சிக்குள்ளே மூன்று தசாப்தங்களாக இலக்கிய முரண்பாட்டின் திரிபுவாதம் என்ற அம்சம் பிரதானமானதன் பேறு அது. அப்போதும் அதை முறியடிப்பதற்காகச் சரியான கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டிற்கான போராட்டம் இருந்தபடி நீடிக்கும். ஆந்தவகையில் கலைக்கப்பட்ட இறுதிவரை கூட அக்கட்சிக்கு சரியான கம்யுனீட்சுக்களின் இருப்புக்குச் சாத்தியமுண்டு.

அவ்வாறே பிறநாடுகளில் இயங்கிய சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியினுள் பலர் சரியான மார்க்சிய உலகப் பார்வையுடன் இயங்கியிருக்க இடமுண்டு. அத்தகையவர்களுடன் கைலாசபதிக்கு உறவிருந்துள்ளது. ஏந்தவொரு விடயத்திலும் முரண்பாடுகளுக்குரிய இரு அம்சங்கள் உள்ளன. என்பது இயக்கங்களின் அடிப்படை விதி நோவியத் சார்புக் கட்சியினருள் இந்த இரு அம்சங்களுக்குமான போராட்டத்தை அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டதன் விளைவாக அவர்களுடனான தொடர்பையும் நட்பையும் தொடர்ந்து பேணினார் எனக் கருதலாம்.
அதே வேளை சினசார்பு நிலைப்பாட்டில் எந்த ஒரு தவறுக்கும் இடமற்ற தூய்மை பேணப்பட்டிருந்தது எனக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. சுமூக மாற்றத்துக்கான முன்னெற்றத்திசையில் வளரும் சக்தியினுள்ளும் சரிக்கும் தவறுக்குமான போராட்டம் நீடித்துக்கொண்டே இருக்கும். சோவியத் சார்பினரின் பாராளுமன்றப் பாதையில் சோலிஸம் என்ற வலது சாதிச் சந்தர்ப்பவாதம் பாதகத்தை ஏற்படுத்தியதைப் பொல சீன சார்பினரும் ஆயுத வழிபாட்டில் மூழ்கிய இடது சாரி அதிதீவிர வாதச் சந்தப்பவாதம் மேலொங்கவும் வாய்ப்பிருந்தது. அதனையும் சுரண்டும் வர்க்கம் பயன்படுத்தியுள்ளது. புல சீனசார்புக் கம்யூனிஸ்டுக்கள் பாராளுமன்றத்தை பிரச்சார மேடையாகப் பயன்படுத்த வேண்டிய தேவையை மறுத்தது உட்படப் பல்வெறு போராட்ட வடிவங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதைக் கவனத்திற் கொள்ளாமல் ஆயுத மோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே போராடுகிற ஆயுததாரிகள் மீது அலாதிப் பக்திப் பூண்டு கொள்கை மார்க்கத்தை இரண்டாம் பட்சமாகக் பார்க்கும் தவறைச் சிலர் செய்ய நேரிடுகிறது.

ஆயினும் சீன சார்பில் மாஓ சேதுங் சிந்தனை இத்தவறை நிராகரித்து மக்கள் போராட்டத்துக்கான பல்வேறு வடிவங்களையும் உள்வாங்கும் தத்தவார்த்த ஆயுதமாக இருந்தது. சோவியத் சார்பில் திரிபுவாதம் பிரதான அம்சமாகி, இறுதியில் அதன் அழிவுக்கு வழி கோலுவது. சீன சார்பினர் உட்கட்சிப் போராட்டத்தினூடாச் சரியான வழியைத் தேட ஏற்றதாக மாஓசேதும் சிந்தனை பிரதான அம்சமாக அமைந்தமை கவலனிப்புக்குரியது.

இத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்த கைலாசபதி கம்யூனிஸ்டுகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த அவர் தன்னை பகிரங்கமாக எந்தவொரு கட்சி சார்ந்த நபராகவும் காட்டிக்கொள்ளவில்லை. அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் கூட புனைபெயர்களில் தான் எழுதப்பட்டன. அன்றைய சூழலில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருந்தமையும் காலத்திற்கு பொருந்துவனவாகவே இருந்தது. அவரது பங்களிப்பு குறித்து நோக்குவதற்கு சீன புரட்சிக்கு லூசுனின் பங்களிப்பு குறித்து மாஓ சேதுங் கூறிய வரிகளை இங்கொரு முறை குறித்து காட்டுவது அவசியமான தொன்றாகும். லூசுன் கட்சியில் இல்லாத ஒரு கம்யூனிஸ்ட். அவர் சீன கலாசார இயக்கத்திற்கு மாபெரும் பங்களிப்பு வழங்கியவர். அவர் சிறிய காற்றுக்கு வளைந்து முறியும் புல் போன்றல்லாது பெரும் புயல் காற்றுக்கு ஈடுகொடுத்து நிற்கக்கூடிய பெருவிருட்சம் போன்றவர்.11 லூசுனிடம் காணப்பட்ட இந்த தெளிவு அர்ப்பணிப்பு பெரும்பாலும் கைலாசபதியின்; ஆய்வுகளில்; காணப்படுகின்றன.

சீனத்தரப்பு அரசியலை முன்னெடுத்த அவர் மக்களிலிருந்து விலகி நின்ற வரட்டு தத்துவ வாதியாக காணப்படவில்லை. அரசியல் துறையில் எவ்வாறு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமோ அவ்வாறே இலக்கிய துறையில் அத்தகைய ஐக்கிய முண்ணணியை வழிநடத்தியவர். இலங்கையில் 1940,1950 களில் பொதுவுடைமை இயக்கம் செல்வாக்கு பெற்றதன் விளைவாக தோன்றியதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கிய கொள்கையை மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றிய இவ்வியக்கமானது 60 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சர்வதேச சித்தாந்த போராட்டத்தின் போது அதில் தலைமை வகித்த முன்னணி நண்பர்களை பலர் சோவியத் யூனியனின் நவீன திரிவுவாதத்தை ஏற்றிருந்தமையினால் தத்துவார்த்த ஸ்தாபன ரீதியான சிதைவுக்குள்ளாகியது. கைலாசபதியை பொறுத்தமட்டில் இந்த சீரழிவை கோட்பாட்டு ரீதியாக உணர்ந்திருந்தார் என்ற போதிலும் அவர்; முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புபட்டிருந்த பலரை சரியான மார்க்கத்தில் வென்றெடுப்பதற்காக தொடர்ந்து அவ்வியக்கத்தில் அங்கம் வகித்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார். அவ்வகையில் இந்த ஐக்கிய முண்ணணிக்கான சிந்தனை கைலாசபதியிடம் காணப்பட்ட அதேசமயம் அவர் எக்காரணம் கொண்டும் தமது கொள்கைபிடிப்பில் இருந்து விலகியவராக அவர் காணப்படாமையே அவரது சிந்தனையின் பலமான அம்சமாகும்.

அவ்வகையில் கைலாசபதி என்பது ஒரு நாமம் அல்ல அவர் ஒரு இயக்க சக்தி. ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் நலன் சார்ந்த கம்யூனிஸ்ட் இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தத்துவார்த்த பங்களிப்பினை வழங்கியதுடன் நேர்மையுடன் செயற்பட்ட இட்துசாரி இயக்கங்களுடன் எத்தகைய தொடர்புகளை கொண்டிருந்தார் என்பதனை சுபைர் இளங்கீரன்,
சி. கா. செந்திவேல் முதலானோரின் கட்டுரைகள் வெளிக்கொணர்ந்துள்ளன.
தொகுத்து நோக்குகின்ற போது அன்றைய சூழலில் பொதுவுடைமை இயக்கங்களில்; சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பிளவு உலகின் ஏனைய நாடுகளில் உருவாகியிருந்த பொதுவுடைமை இயக்கங்களை பாதிக்க தொடங்கியது. மார்க்ஸிஸம் அதன் புணர் நிர்மாணம் குறித்து விவாதத்திற்கான சூழலை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மார்ஸிஸ இயக்கங்கள் தொடர்பில் மீண்டு ஒரு புனரமைப்பிற்கான தத்துவார்த்த ஸ்தாபன நடைமுறை குறித்த பார்வை அவசியமானதொன்றாகியது, இந்த பிண்ணணியில் மக்கள் நலன் சார்ந்த இயக்கமொன்றினை கட்டியெழுப்புவதற்காக மார்க்ஸிஸத்தில் தம்மை அர்ப்பணித்து கொண்ட புத்தி ஜீவிகள் யாவரையும் பின்வரும் விடயம் தொடர்பில் தெளிவும் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியன் உட்பட புரட்சியை வென்றெடுத்த நாடுகளில் ஏற்பட்ட சமூக மாற்றமும், வர்க்க மாற்றமும் குறித்த ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின் இன்றைய தோற்றம் அதன் ஊடுருவல், இதன் பிண்ணணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த தெளிவு, சர்வதேச அரங்கில்

இரு வல்லரசுகளாக தோற்றம் பெற்றிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், சோவியத் சமுக ஏகாதிபத்தியம் முதலிய வல்லரசுகள் குறித்தும் ஏனைய நாடுகளின் அதன் ஊடுருவல் குறித்த தெளிவு, மாறாக உலகளாவிய ரீதியில் இதற்கு எதிராக மக்கள் இயக்கங்களும் போராளிகளும் எவ்வாறு பிரசன்னம் கொண்டு வருகின்றனர் என்பது பற்றிய பார்வை, அவற்றின் பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கம் இது தொடர்பில் செய்ய வேண்டியவை – செய்யக்கூடியவை பற்றிய ஆய்வுகள் காலத்தின் தேவையாக உள்ளன. இந்த ஆய்வுக்கான அடித்தளத்தையிட்டவர் கைலாசபதி ஆவார்.

அடிக்குறிப்புகள்:-
1.செந்திவேல் சி.கா மேற்கோள்,(1992) கைலைசபதியின் சமுக நோக்கும் பங்களிப்பும்,சவுத் ஏசியன் புக்ஸ் – சென்னை ப.3

2.ஏங்கல்ஸ்(1997) லுத்விக்போயர்பார்க்கும் மூலச்சிறப்புள்ள ஜேர்மன் தத்துவஞானத்தின் முடிவும், மொஸ்கோ .ப.36

3.கைலதசபதி.க.(1986) திறனாய்வுப்பிரச்சனைகள், சென்னை புக்ஸ், சென்னை,பக். 14,15

4……………….(1992) சர்வதேச அரசியல் நிழ்வுகள்(1979 – 1982) புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் – சென்னை ,பக். 21,22.

5. அதே நூல், ப.31.

6. அதே நூல், பக்.90,91.

7. அதே நூல், பக்.96,97.

8. உதயன்(கைலாசபதியின் புனைபெயர்;),(1981) செம்பகதாகை இதழ் யாழப்பாணம்

9. கைலாசபதி க. மேற்படி நூல் (சி.கா. செந்திவேல் எழுதிய முன்னுரை)

10……………….(ஜனமகன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை.) செப்பாதாகை – 1981.

11. செந்திவேல் சி.கா மேற்படி நூல். பக் – 68