Friday, August 8, 2008

பேராசிரியர் க.கைலாசபதி நினைவுகள்

யாழ் பல்கலைக் கழகத்தைப் பற்றிய கைலாசின் எதிர்பார்ப்பும் கற்பனையும் வேறாக இருந்தது.அவர் மாக்சிய இடதுசாரி சிந்தனையில் வேரூன்றியவர்.தேசிய வாதங்களுக்கு எதிராக,தேசிய ஒருமைப்பாடு,சர்வதேசியம் பற்றி கனவு கண்டவர்.யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு பலமான அடித்தளத்தில் ஒரு தேசிய பல்கலைகழகமாக,தென் ஆசியாவின் மிகச்சிறந்த உயர் கல்வி நிலயங்களுள் ஒன்றாக வளர்த்தெடுக்க ஆசைப்பட்டவர். .....
கைலாஸ் யழ்ப்பாண வளாகத்துக்கு தலைவராக நியமனம் பெற்றமை பற்றிச் சிலர் பலவிதமான அவநூறுகளை பரப்பியுள்ளனர்.பல சிரேஷ்ட பேராசிரியர்கள் இருக்கும் போது தகுதியற்ற இவர் பின் கதவால் இந்தப் பதவியை பெற்றார் என்று எஸ்.பொன்னுத்துரை போன்றவர்கள் வாய் ஓயாமல் பேசுகின்றனர்.தகுதி என்பது பட்டங்களையும் பதவிகளையும் வைத்துத் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றல்ல.ஒன்றுக்கும் உதவாத சிரேஷ்ட பேராசிரியர்கள்,கலாநிதிகள் பலரை நாம் அறிவோம்.ஆழ்ந்த புலமையும் ,பரந்த பார்வையும் (vision)செயலாற்றலும் அக்காலத்தில் அப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கக் கூடிய யாருக்கும் குறந்ததல்ல.தவிரவும் கைலாஸ் பதவிக்காக ஆலாய்ப் பறந்தவரும் அல்ல.
கைலாஸ் இறந்து 23 வருடங்கள் கடந்துவிட்டன.கைலாஸ் பற்றிய அவநூறுகளும்,வசைபாடல்களும்,எத்ர்மறையான விமர்சனங்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.வலதுசாரிகளும்,இனத்தேசியவாதிகளும்,கைலாசின் அங்கிகாரத்தை எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் கைலாசுக்கு எதிர் அணியில் ஒன்றிணைந்திருக்கின்றனர்.எனினும் இவர்களில் யாருமே இதுவரை ஒரு அறிவார்ந்த தளத்தில் கைலாசின் எழுத்துக்களை எதிர்கொண்டதில்லை.கையறு நிலையில் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுள் முன்னணியில் இருப்பவர் எஸ்.பொன்னுத்துரை.கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக அலுப்புச் சலிப்பின்றி கைலாசின் பிம்பத்திற்கு சாணி அடிப்பதையே இவர் தன் சத்திய இலக்கிய வேள்வியாக நடத்தி வருகிறார்.கைலாஸ் இருந்தவரை அவரை பிறாண்டிக்கொண்டே இருந்தார்.இன்ருவரை பிறாண்டுகிறார்.ஆனால் கைலாஸ் இருந்தவரை எஸ்.பொவின் இருத்தலை கண்டு கொள்ளவே இல்லை.கைலாசின் இலக்கியக் கோட்பாட்டை பொறுத்தவரை எச்.பொ பொருட்படுத்தத்தக்க எழ்த்தாளன் அல்ல.எஸ்.பொவின் பிறாண்டல் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.எஸ்.பொவின் மன உலகம் ஆரோக்கியமானதல்ல. அதனால் கைலாஸ் அவருடைய பிறாண்டலை முற்றாக புறக்கணித்தார்.
பேராசிரியர் எம்.ஏ.நுகுமான்-கைலாசபதி:தளமும் வளமும்-2005 இலங்கை

No comments: